Sowdambiga

உறையூர் ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தல வரலாறு


உறையூர் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்


"சோழவளநாடு சோற்றுடைத்து" என்ற முதுமொழிக்கு ஆதாரமாக விளங்குவது தென்கங்கை என போற்றப்படும் காவிரி நதி ஆகும்.. அத்துணை சிறப்புமிக்க காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றது தான் "கோழியூர்" என்கிற உறையூர்.. அப்பேர்ப்பட்ட சங்க கால சோழர்களின் தலைநகராம் கோழிமாநகரில்(உறையூர்) நமது அன்னை ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அமர்ந்திருக்கும் விதம் மிகவும் நேர்த்தியானது.. தேவாரம் பாடல் பாடப்பெற்ற சிவதலமாகிய ஶ்ரீ பஞ்சவர்ணேஸ்வர ஸ்வாமி அமையப்பெற்ற அதே வீதியில் நம் இராமலிங்கேஸ்வரரின் பிராண நாயகியான சௌடாம்பிகை அமர்ந்திருக்கிறாள்..

திருவிழா அழைப்பிதல்

உறையூர் ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருவிழா அழைப்பிதல்



அன்னை திரு நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் (தெலுங்கு பத்தியப் பாடலில் குறிப்பிட்டுள்ளது போல) ஆயுதங்கள் தாங்கி அசுரனை காலடியில் கிடத்தி சற்றே நலினத்தோடு அழகுற வீற்றிருக்கிறாள்... வடக்கே திருவரங்கம் அரங்கநாத சுவாமியையும், கிழக்கே மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியையும், தெற்கே பஞ்சவர்ண சுவாமியையும், கிழக்கே வயலூர் சுப்ரமணிய சுவாமியையும் பரிவாரங்களாக சூழ நமது தேவாங்க குல மக்களை காத்து ரட்சிக்கிறாள்..

உறையூர் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்

"தேவாங்கர்கள் ஆடை நெய்வதில் நேர்த்தியானவர்கள் என்பதனால் சோழர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்ற வரலாற்று குறிப்பு உள்ளது" இந்த சோழவள நாட்டின் உறையூரிலே நமது சமூகத்தவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது அன்னைக்கு ஆராதனைகள் நடத்தி வந்துள்ளனர் இவ்விடத்தில்.. கடந்த 1963 ம் ஆண்டு அன்னைக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் அமைத்து குடமுழுக்கு நடத்தி உள்ளார்கள்.. அத்துணை பெறுமை வாய்ந்த அன்னை 20 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு மகாஉற்சவம் காண இருக்கறாள்.. நமது குல மரபுப்படி திருவிழா நடத்தப்பட உள்ளது

விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள :

திரு.A.R.தனபாலன் +919095416300 (அர்ச்சகர்),
சந்தோஷ் சீனிவாசன் (+919789275851)

குறிப்பு : இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் திருக்கோவில் கமிட்டியாளர்களின் அனுமதி பெறப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.