Sowdambiga

சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம்

தோற்றமும் வளர்ச்சியும்

உலகிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடு நமது பாரத நாடு ஆகும். அத்தைகைய இளைஞர் சக்தியினை சிறந்த முறையில் பயன்படுத்தும் விதமாகவும் திருக்கோவில் விழாக்களை சிறந்த முறையில் நடத்தவும் சமுதாய மக்கள் பயனடையும் முறையில் நல்ல திட்டங்களை அமைத்தும் நற்பணிகளை செய்வதற்கு சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பானது தன்னார்வம் மிக்க இளைஞர்களால் 1982 - ம் ஆண்டு 25 உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டது.

பெரியோர்களின் ஆசியோடும், மன்ற உறுப்பினர்களின் அயராத உழைப்பாலும் தொடர்ந்து சமுதாயப்பணியாற்றி வந்த மன்றமானது 2007 ம் வருடம் தனது வெள்ளி விழாவைச் சிறப்புடன் கொண்டாடியது. சௌடேஸ்வரி அன்னையின் அருளினையும் தேவாங்க குலத்தின் பெருமைகளையும் உலக மக்கள் அறியும் பொருட்டு பக்தி பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிட்டது மற்றும் இலவச திருமண விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை மன்றத்தின் முக்கிய சாதனைகளைகளாக கருதுகிறது. இளைஞர்கள் ஒன்றிணைந்தால் எண்ணற்ற சாதனைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றமானது இன்றைய நிலையில் சுமார் 130 உறுப்பினர்களைக் கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

நிர்வாகிகள் தேர்வு செய்யும் முறை

ஆரம்ப காலங்களில் மன்ற உறுப்பினர்கள் யாவரும் மன்றத்தை தகுந்த முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய குழுவினை அடையாளம் கண்டு ஒருமனாதாக தேர்ந்தெடுத்து நிர்வகித்து வந்தனர். பிற்காலங்களில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சௌடேஸ்வரி அன்னையிடமே வேண்டுகோள் வைக்கப்பட்டது. அன்னையும் தை மாதம் நடக்கும் திருவிழாவின் மூன்றாம் நாளான மஞ்சள் நீராட்டு விழாவின் போது நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அருள் செய்து வருகிறார்.

நிர்வாகிகள்

P.K.ஜெகநாதன் தலைவர்
P.K.ஜெகநாதன்
தி பேஷன் பாய்ண்ட்.
   
P.K.குணசேகரன் பொது செயலாளர்
P.K.குணசேகரன்
சுபம் பேக்கரி.
   
P. வெற்றிவேல் பொருளாளர்
P. வெற்றிவேல்.
   
A. கனகராஜ் துணை பொருளாளர்
A. கனகராஜ்.
   
s.செல்வராஜ் துணைத் தலைவர்
கேப்டன் S.செல்வராஜ்.
சௌடேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ்.
   
சரவணன் செயலாளர்
சரவணன்
S.S.டிசைனர்ஸ்.
   
சௌந்தர்ராஜன் செயலாளர்
சௌந்தர்ராஜன்
விஜி சேரீஸ்.

மன்றத்தின் செயல்பாடுகள்

மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவ்வப்பொழுது ஒன்று கூடி சமுதாய சிந்தனையுடன் கூடிய மன்றத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அதனை செயலாக்கும் விதம் ஆகியவற்றை விவாதித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அச்செயலை வெற்றிகரமாக முடிக்க பாடுபடுவது மற்றும் குலப் பெரியோர்களின் ஆணைக்கிணங்கவும் திருக்கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தி முடிக்கவும் உறுதுணையாக இருப்பது போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

முக்கிய சாதனைகள்

கல்வி நிதியுதவி :ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளிச் சிறப்புக் கட்டணங்கள் மற்றும் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு மேல்படிப்பு படிப்பதற்காக நிதயுதவி போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் சுமார் 200 மாணவர்களுக்கு செய்து வருகிறது.முதியோர்க்கு இலவச அரிசி பருப்பு வழங்குதல் :சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.இலவச திருமண விழா :

புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றத்தின் 25 ஆண்டின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி அனைவருக்கும் இல்லற வாழ்வினை தொடங்க தேவையான பொருளுதவிகள் செய்யப்பட்டு அனைவரிடமும் நல்ல பாராட்டுக்களை பெற்றது.இலவச கண்சிகிச்சை முகாம் :

அணைத்து விதமான மக்களுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கண்சிகிச்சை முகாம் ஆனது பிரபல மருத்துவமனையான கே. ஜி . மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.இரத்ததான முகாம் :

இரத்ததானத்தின் அவசியம் உணர்த்தியும் பல்வேறு மருத்துவ மனைகளுடன் ஒன்று சேர்ந்து மன்ற உறுப்பினர்கள் யாவரும் இரத்த தானம் செய்து வருகின்றனர்.மரம் நடு விழா :வீட்டுக்கு ஓர் மரம் வளர்த்து நாட்டின் மழை வளம் பெருகவும் மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது அணைத்து மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி உலக வெப்பமயமாதலின் காரணங்களைக் கூறியும் விழிப்புணர்வு ஏற்படவும் செய்தது.நிழற்குடை அமைப்பு :


கோவிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து மக்களக்கு நிழல் தரும் பணியை செவ்வனே செய்தது.வீரகுமாரர்கள் :

சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவின் ஓர் அங்கமாக நடைபெறும் அலகு சேவைக்கு சுமார் 100 வீரகுமாரர்கள் கொண்ட குழுவை உருவாக்கி திருவிழாவை மேலும் சிறப்பாக்க மன்றமானது பாடுபட்டது. இக்குழுவினர் உள்ளூரில் மட்டுமல்லாது பிற ஊர்களில் இருந்து வரும் அழைப்பினை ஏற்று அங்கு சென்று அலகு சேவை நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.தன்னார்வ தொண்டுகள் :

புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் மன்றத்தை சார்ந்த உறுப்பினர்கள் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அன்னதானங்களில் பறிமாருதல், கூட்டத்தினை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை தன்னார்வத்துடன் செய்து வருகின்றனர்.சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட காலத்தில் பாதித்த மக்களுக்கு உதவும் வண்ணம் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை கொண்டு சென்று உதவியது.தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.