Sowdambiga

தேவாங்க குல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்

1. அகத்திய மகரிஷி கோத்ரம் :

Gallery

ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1 - 191 வது ரிக்காக விளுங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்கச் சகல விஷத் தொல்லைகளும் நீங்கும். கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக்வேதத்தில் 1 -165 -192 -ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.

அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த, காலத்தை வென்ற ஒரு மாமுனியாவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் எனபாகவதம் அறிவிக்கின்றது.

ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன்விளங்கினார் என விஷ்ணு புராணமும் முழங்குகிறது.

இவற்றால் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

லத்திகார்ரு :- லதாலதவரு என்னும் பெயர்தான் லத்திகார்ரு என மருவி உள்ளது. லதா என்றால் கொடி என்று பொருள். இவர்கள் கொடிபோல் எங்கும் பரந்து படர்ந்து இருப்பர். எனவே லதாலதவரு என்னும் பெயர் பெற்றனர்.
பசுபுலதவரு :- திருமணத்தில் மஞ்சள் கொம்பு மரியாதை பெறுவதாலும் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவிற்கு மஞ்சள் பண்டாரம் தரும் திருப்பணியைச் செய்வதாலும் பெற்ற பெயர்.
முத்தினதவரு :- மன்னன் ஒருவனக்கு முத்து ஒன்றின் விலை மதிப்பினைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. மற்றவர்களால் தீர்க்கமுடியாத அச்சந்தேகத்தைத் ததீர்த்து முத்தின் சரியான மதிப்பைக் கூறியதால் மன்னன் மகிழ்ந்து சன்மானங்கள் வழங்கினான்.அம்மரியாதை இன்று முத்தின வீளேவு என்று தரப்படுகின்றது .
மண்டோதரியவரு :- சிறந்த பத்தினிப் பெண் ஆன மண்டோதரியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல் . அருகம்புல் கொண்டு வழிபாடு நடத்துபவர்.
கிருஷ்ணராய பூஷண தவரு :- இப்பெயர் கிருஷ்ணாய பூஷணம் வாரு என வழங்கப்படுகின்றது. விஜய நகர சாம்ராஜ்ய சக்ரவர்த்தி கிருஷ்ண தேவராயர் அவரிடம் பூஷணங்கள் - ஆபரணங்கள் - சன்மானமாகப் பெற்றவர்.
சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன சாதன சதுஷ்டயம் எனப்படும். இவற்றுள் சரியை என்னும் கர்மாவில் உயர்ந்தவர்.
சிரிகஞ்சுவாரு :- கோபத்தை விட்டவர். அமைதியானவர்.
துப்பட்டிவாரு :- துப்பட்டி நெய்வதில் சிறந்தவர்.
மிஞ்சிலாரு :- காலில் மிஞ்சு அணிந்தவர். (கால் விரலில் அணியும் அணி இது.)
முக்கரதவரரு :- முக்கரம் - மூக்குத்தி; மூக்குத்தி அணிந்தவர்.
முத்கரதவரு :- காயத்ரிதேவியின் வழிபாட்டிற்கு உரிய முத்திரைகள் இருபத்தி நான்கு. அதில் முத்கரமுத்திரை ஒன்று. சங்கு சக்கரங்களை தோளில் பொறித்துக் கொள்வதுபோல் தம் தோளில் முத்கர முத்திரையை தரித்துக் கொண்டவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசும் திருத்தொண்டு செய்பவர்.
ஸ்யாமபுரதவரு :- ஸ்யாமபுரத்தில் வசித்தவர்.
காடிலவாரு, போசாவாரு, லப்பிவாரு, வுங்கரவாரு என்பனவும் இக்கோத்திரத்தில் காணப்படுகின்றன.

லதிகார்ருக்கு உரிய வீளேவு மரியாதைகள் அர்ச்சக வீளேவு. - இது பூசாரி வீளேவு என்று சொல்லப்படுகின்றது. முத்தின வீளேவு சின்னஞ்செட்டி வீளேவு.

அகத்திய மகரிஷி கோத்ரத்தைச் சார்ந்த கூழவாடு சின்னஞ்செட்டி என்பவர் கடும் பஞ்ச காலத்தில் எல்லோர்க்கும் உணவளித்துக் காப்பாற்றினார். அதனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் வீளேவுதான் சின்னஞ்செட்டி வீளேவு ஆகும்.

பூசாரி வீளேவு என்பதும் அர்ச்சக வீளேவு என்பதும் ஒன்றே.

அகத்திய, சதானந்த, கௌஷிக, வரதந்து மற்றும் ஜமதக்னி என்னும் ஐந்து கோத்ரத்தாருக்கும் இவ்வீளேவு பொதுவாம்.

2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் :

மகரிஷியின் வரலாறு புலப்படவில்லை.உரோமகருஷணருக்கும் சுகுருக்கும் மாணாக்கராக அகரத்த விருஷணர் என்பவர் இருந்தார் . அகர்ச்ச மகரிஷியும் இவரும் ஒருவரா ? இல்லை வேறானவர்களா ? என்பது புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அதிகானதவரு :- கானம் - சங்கீதம்; சங்கீதத்தில் தெளிந்த ஞானம் உள்ளவர். இக்கலையில் வல்லவர். மிக இனிமையாக பாடக்கூடியவர்.
மன்டூகதவரு :- மண்டூக பூஜா விதிப்படி பூசனை செய்பவர்.
கார்யதவரு :- தங்கள் காரியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காரியங்கள் செய்து முடிப்பதில் திறமையானவர்.
பத்யதவரு :- அடிக்கடி பட்டினி கிடந்தது நோன்பு நோற்பவர்.
முத்கலதவரு :- முத்கல மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.

3. அசிதேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷியின் வரலாறு :- மஹாபாரதத்தினுள் இம்முனிவர் பெயர் பல இடங்களில்காணப்படுகின்றது.இம் முனிவர் வியாசரின் மாணாக்கரில் ஒருவர். இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் அரசாண்டு கொண்டிருந்தபோது நாரதர்அவனிடம்வந்தார். திரிலோகங்களிலும் சஞ்சாரம் செய்து தாம் கண்ட சபைகளின் சிறப்புகளையெல்லாம் தருமனின் வேண்டுகோளின் படி கூறினார்.

ஆயிரம் ஆண்டுகள் மனதை அடக்கி பிரம்ம விரதம் என்னும் தவம செய்து முடித்துப் பிரம்ம சபைக்குச் சென்றேன். பிரம்மசபை சொல்லுக்கெட்டா வடிவங்களையும் பிரகாசத்தையும் கொண்டது.

உபபிரம்மாக்களும் அகத்தியரும் அஸிதரும் தேவலருமான மஹரிஷிகள் அங்கிருந்தனர் என்று நாரதர் கூறினார். இம்மஹரிஷிகள் இருப்பது சபைக்குச் சிறப்பு என்றார் நாரதர். கீதையில் விபூதி யோகத்தில் " அஸிதோ தேவலோ " என்ற ஸ்லோகத்தில் அசிதர் தேவலர் இவர்களால் வணங்கப்படும் பெருமை கண்ணனுக்கு இருக்கின்றதென்று அர்ச்சுணன் கூறுகின்றான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதவரு - ஏந்தேலாரு :- அந்தலம் என்பது ஒருவகைக் கழல். காற்சிலம்பு போன்றது. இச்சிலம்பினை ஒற்றைக்காலில் அணிபவர். இப்பெயர்தான் ஏந்தலதவரு, ஏந்தேலாரு என மருவியிருக்கின்றது.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவர். இந்நிகண்டினை அனைவருக்கும் கற்பித்தவர்.
கடுபுலதவரு :- கடுப்பு என்பது தெலுங்கு மொழியில் வயிற்றைக் குறிக்கும். வயிற்றினை ஒட்டி வந்த பெயர்.
திருமன்வாறு :- திருமண் - நாமம் இட்டுக் கொள்பவர்.
பந்தாருதவரு :- பந்தாரி என்பது ஒரு வகைச் செடி. இச் செடியருகில் தம் க்ருஹ தேவதையை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
பௌஞ்சலதவரு :- இவர்களுக்கு உஞ்சதவரு என்றும் பெயர். மாங்கல்யம், பூணுல் இவற்றை தானம் செய்பவர்.
ஆகலிவாரு :- ஆகலி செட்டு என்பதும் ஆகலி என்பதும் ஒருவகை மரம்.இம்மரத்தடியில் தம் தெய்வத்தை வணங்குபவராக இருக்கலாம்.பசிக்கும் ஆகலி எனப்பெயர்.
வர்ஜாவாரு :- தீமைகளைத் தள்ளி வாழ்பவர்.

4. அச்சுத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- அச்சுதன் - எக்காலத்தும் அழிவில்லாதவன். திருமாலின் திருநாமங்களுள் ஒன்று. இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ரத்நாலவாரு :- நவரத்தின வணிகம் செய்பவர். ரத்தினங்களை விரும்பி அணிபவர்.

5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாண்யதவரு :- ஒழுக்கத்துடன் நாணயத்துடன் வாழ்பவர்.
பங்காரதவரு :- பங்காரு - தங்கம்; தங்கமான குணம் கொண்டவர். பொன் நகை அணிவதில் விருப்பம் கொண்டவர். பொன் வணிகம் செய்பவர்.
ரத்நதவரு :- நவரத்தின வணிகம் செய்பவர். நவரத்தினங்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்.

6.அட்சய தேவரிஷி கோத்ரம் :

க்ஷ்யம் குறைதல். அக்ஷ்யம் எனில் எக்காலத்தும் குறையாது இருத்தல். எனவே எக்காலத்தும் குறையாது நிரம்பி தவவன்மை உடைய ஒரு மகரிஷி இவர்.வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தொட்டதாலயவரு :- பெரிய தாலியை அணிபவர். இவ்வங்குசத்தில் பெண்கள் அணியும் தாலி மற்றவர் அணிவதைவிடப் பெரியது.
பெடகேரியவரு :- பெடகேரி என்னும் ஊர் வடகர் நாடகம் தார்வாரில் இருக்கின்றது. இவ்வூர்க்காரர்கள்.

7.அதித மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- வைராசனுக்கும் சம்பூதிக்கும் விஷ்ணுவின் அம்சமாய் உதித்த ஒரு மகான் ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ருணம்வாரு :- வருணதேவனைப் பூசிப்பவர். இவ்வங்குசம் வாருணம் வாரு எனவும் அழைக்கப்படுகின்றது.
பன்வெனவாரு :-

8.அதிவி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தோலவாரு :- பூணுலில் தீட்டுப்படாமல் இருக்க, மான்தோல் புலித்தோல் இவற்றில் அமர்பவர். கடமான் தோலில் அமர்ந்து தவம் செய்யின் ஞானம் சித்திக்கும். வேங்கைப்புலித் தோலில் அமர்ந்து தவம் செய்தால் மோட்சம் சித்திக்கும். இதனால் இவ்வங்குசத்தார் சிறந்த தவசிகள் என்பது விளங்கும்.

9.அத்திரி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- இம்மகரிஷி கடுமையான தவவிரதம் உடையவர். அசுரர்கள் ஒருமுறை இவரை நெருப்பில் தள்ளி விட்டனர். அசுவினி தேவர்கள் மகரிஷியைக் காப்பாற்றினர்.
ரிக்வேதம் 9-6-7; 10-143 வது ரிக்குகளுக்கும்
ஸாமவேதம் 1-4, 6-4, 8-7 வது சூக்தங்களுக்கும் இவர் கர்த்தா.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கம்தவரு :- பெருத்த வலிமையான உடல் உடையவர்.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவராகி அதனை அனைவருக்கும் கற்பித்தவர்.
கலம்தவரு :- கலம் கலமாக நெல்லைத் தானம் செய்தவர்.
குண்டாவாரு :- உடல் பெருத்து குண்டாக இருப்பவர்.
சம்புடதவரு :- விபூதி சம்புடத்துடன் எப்போதும் காட்சி தருபவர். யாத்ரா தானப் பொருள்களுள் விபூதி சம்புடம் ஒன்று. அதனைத் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
திருமண்வாரு :- திருமண் அணிபவர்.
துண்டாவாரு :- வெட்டொன்று துண்டிரண்டு எனக் கச்சிதமாகப் பேசுபவர்.
பண்டாரம்வாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியின் பிரசாதமான மஞ்சள் ஸ்ரீ பண்டாரத்தைத் தட்டுக்களில் இட்டு ஊர்வலம் கொண்டு வருபவர். இது பண்டாரமெரவணெ என்று அழைக்கப்படுகின்றது.
பிர்ஜாவாரு :- பிர்ஜாவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். ஆந்திராவில் இவ்வூர் உள்ளது.
மல்லிகார்ஜூனதவரு :- மல்லிகார்ஜூன சுவாமியைத் தம் வீட்டு தெய்வமாக வணங்குபவர். இவ் வங்குசத்தார் தம்மூத்த மகனுக்கு மல்லிகார்ஜூனன் என்றும் மூத்த மகளுக்கு மல்லிகா என்றும் பெயர் சூட்டுகின்றனர்.
மால்யம் வாரு :- திருக்கோயிலுக்கும், சுவாமிக்கும் பூமாலை கட்டித் தருவதைத் தருமமாகக் கொண்டவர்.
முடுபுலதவரு :- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம் என்னும் விழா இன்றளவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அவ்வூரிலிருந்து வந்தவர்.
லிங்க தவரு :- லிங்க தீட்சை செய்து கொள்பவர். லிங்க தீட்சை தருபவர். இவ்வங்குசத்தார் ஆண் பெண் பேதம் இன்றி லிங்க தீட்சை செய்து கொள்வர்.
வர்ஜவாரு :- தீமையைத் தள்ளி வாழ்பவர்.
வீரணம்வாரு :- இப்பெயர்தான், வீரண்ணா என்று வழங்குகின்றது. இவ்வங்குசத்தார் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவில் வீரமுஷ்டி வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்.
அந்திலவாரு, சக்கனவாரு, பௌஜூலவாரு, யக்கலவாரு, யத்கலவாரு, யெக்கலவாரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

10.அமர மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சர்ஜாதவரு :- சர்ஜா என்பது சிவலிங்கம் வைக்கும் பெட்டி. இப்பெட்டியினைத் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
அச்சுததவரு :- அச்சுதன் ஆன திருமாலை வீட்டு தெய்வமகாக் கொண்டவர். அவரைப் பூசிப்பவர்.
சஜ்ஜன்தவரு, ஆகதவரு, கல்லனதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் :

பன்னிரன்டாவது மன்வந்திரத்துத் தேவர். இத்தெய்வத்தின் பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சௌனகதவரு :- பிரும்மபுத்திரர் சௌனகர். இம்மஹரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர். இஷ்ட தெய்வமாகவும் கொண்டவர்.
ஜோளிகையதவரு :- ஜோல்னாபை என இக்காலத்தில் அழைக்கப்படுகின்றது. தோளில் இந்த ஜோளியைக் கட்டிக்கொண்டு உபாதனம் செய்து அதனால் தெய்வ வழிபாடு செய்பவர். எனவே இவர்களின் பற்றற்ற வாழ்க்கை விளங்கும்.
கேஸனதவரு :- அழகான தலைமுடி உள்ளவர்.
தேஜதவரு :- தவத்தாலும் ஆத்ம ஞானத்தாலும் மிகுந்த ஒளி உள்ளவர்.
உத்தானதவரு :- தானம் எனில் தருமம். உத்தானம் என்பது மிகச் சிறப்பாக உயர்ந்த தானங்களைத் தாராளமாகச் செய்பவர். தனக்கு என எதனையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதை அனைத்தையும் தானம் செய்யும் வள்ளல் தன்மை கொண்டவர்.

12.அஸ்ர மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடிவாரு - கோடிதவரு :- கோடி என்னும் எண்ணிக்கையை பெயருடன் வைப்பவர். தனக்கோடி, நவகோடி என்பன போன்ற பெயர்கள் வைத்துக்கொள்பவர்.

13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் :

திருவல்லிக்கேணியில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து பூசித்த ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கெளரா பத்தினிதவரு :- கௌரி தேவியை வீட்டுத் தெய்வமாக பூசிப்பவர்.

14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சலாசனம்தவரு :-

யோகாசனங்களில் சலாசனம் என்பது ஒருவகை. அந்த ஆசனம் போட்டு அமர்ந்து பூசனை செய்பவர்.


முக்தாபுரம்வாரு:-

குண்டக்கல் அருகில் உள்ள முக்தாபுரத்தை சேர்ந்தவர்கள்.

15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உஜ்ஜயினிதவரு :- உஜ்ஜயினி சென்று வீட்டுத் தெய்வம் வழிபடும் வழக்கம் உள்ளவர். அவ்வூரில் வசித்தவர்.
தேஜதவரு :- தவத்தாலும் ஆன்ம ஞானத்தாலும் வந்த ஒளி உள்ளவர். குறிப்பு :- தேஜா = குதிரை; குதிரை முதலான செல்வங்களை உடையவர். ஆஸரித தேவ மகரிஷி கோத்ரம் என ஒன்று காணப்படுகின்றது. மேற்கண்ட வந்குசங்களே இதிலும் காணப்படுவதால் இவ்விரண்டும் ஒரு கோத்ரமாய் இருக்கலாம்.
முத்தினதவரு:

16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் :

ரிஷி வரலாறு :- விசுவாமித்ர மகரிஷியின் குமாரர். வேதத்தில் வல்லவர். சிறந்த தவசி. மானுட வாழ்வில் பதினாறு விதமான சமஸ்காரங்கள் இருக்கின்றன. அவை கர்ப்பதானம் முதலாக அந்தியேஷ்டி முடிவாகப் பதினாறாம். இவையே ஷோடஷ கர்மாக்கள் எனப்படும்.

தேவாங்கர் அனைவரும் ரிக்வேதிகள். ரிக்சாகையை அனுஸந்திக்க வேண்டியவர்கள்.

இப்பதினாறு காரியங்களுக்கும் உள்ள ரிக்வேத மந்திரங்களை ஆசுவலாயனர் தொகுத்து வழங்கினார். தேவாங்கர் அனைவரும் ஆசுவலாயன சூத்திரத்தைச் சார்ந்தவர். எனவே ஒவ்வொரு காரியச்சடங்கையும் ஆசுவலாயன சூத்ர மந்திரங்களைக் கொண்டு செய்துக் கொள்ள வேண்டும்.

ஆசுவலாயனர் கூறும் ஷோடச கர்மாக்கள் வருமாறு :-
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) சூடாகர்மம்
7) நிஷ்கிரமணம்
8) அன்னப்பிராசினம்
9) கர்ணவேதம்
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்
16) அந்தியேஷ்டி
என்பனவாகும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ககனதவரு :- ஆகாசதவரு :- தவ ஆற்றலால் ஆகாய மார்க்கமாய்ச் செல்லும் ஆற்றல் பெற்றவர். வானளாவப் புகழ் கொண்டவர்.
குஞ்சம்வாரு :- நூல் பாவு செய்யும் குஞ்சம். இதனைச் செய்து தருபவர்.
சூரிவாரு :- சூரத்தனம் செய்பவர். சிறந்த வீரர்கள்.
நாரதவாரு :- நாரதமுனியைப் போன்றவர். நன்மையால் முடியும் கலகத்தைச் செய்பவர்.
நாரதரைப் போன்ற வேதக் கல்வியும், இசை ஞானமும் உடையவர். ஓயாது நாரணனைப் பூசிப்பவர்.
மத்தெளவரு ;- " மிருதங்க தவரு " என கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது. மத்தள வாசிப்பில் வல்லவர்.
மருமாமிளவாரு :- 'மருமாமிள" என்ற ஊரைச் சார்ந்தவர்.
யதமெட்டுவாரு :- மெட்டு என்பது மேட்டு நிலத்தைக் குறிக்கும். யதமெட்டு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

17 .இந்திரத்தூய்ம்ம இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் :

இம்மூன்று ரிஷிப்பெயர்களும் ஒன்றுபோல் விளங்குகின்றன. வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அமராவதிவாரு :- தவத்தினால் இந்திரனின் தலைநகரம் செல்லும் ஆற்றல் பெற்றவர்.
தேவலோகம்வாரு :- தம் நற்குண நற்செய்கைகளால் தாம் வாழும் இடத்தை தேவலோகம் போல் ஆக்குபவர். தவத்தால் தேவலோகம் சென்று மீளும் சக்தி உடையவர்.
கௌடனவாரு :- கன்னட நாட்டின் செட்டிகாரரை கெளடா என்று அழைப்பது வழக்கம். ஆந்திராவில் சேனாதிபதி எனவும் செட்ரு எனவும் அழைக்கின்றனர்.
பஸவ பத்திரியவரு :- பஸவபத்ரி என்பது ஒருவகை இலை. மணம் மிக்கது. பூசனைக்கு இவர்கள் இவ்விலைகளைப் பயன்படுத்துவர்.
ஹள்ளியவரு :-

18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் :

ரிஷி வரலாறு :- வியாக்ரபாத மகரிஷியின் குமாரர் என்பது ஆதித்ய புராணம். த்ருமன்யு என்பவரின் புத்திரர் என்பது சிவ ரகஸ்யத்தின் கருத்து. இவர் பிறந்த பின் தாய்ப்பால் இன்மையால் அரிசி மாவினைச் சர்க்கரை கலந்து ஐந்து வயது வரை ஊட்டினாள் தாய். இவரின் தாய் இவரை எடுத்துக்கொண்டு தன் சகோதரராகிய வசிஷ்ட முனிவர் ஆசிரமம் சென்றாள். அங்கு வஷிஸ்டரின் பத்தினியான அருந்ததி தேவியார் ஓமம் செய்து மீதம் இருந்த காமதேனுவின் பாலைத்தர, அதனை ஒரு மாதம் வரை உண்டு வளர்ந்தார்.

பின் அன்னை; மகனுடன் தம் ஆசிரமம் சென்றாள். அங்கு பழையபடி அரிசி மாவும் சர்க்கரையும் கரைத்துக் கொடுக்க அது வேண்டாம் காமதேனுவின் பாலே வேண்டும் என அழப் பூர்வத்தில் சிவபூசனை செய்தவர்க்கே அது கிடைக்கும் எனத் தாய் சொன்னாள்.

பின் தம் தந்தையிடம் தீட்சை பெற்றுத் திரிகூட மலையில் தவம் மேற்கொண்டார். சிவபிரான் இவருக்குக் காட்சி தந்து பாற்கடலை இவருக்குத் தந்தார்.

ஒரு முறை இவர் அதிதிகளுக்கு உணவு படைத்தது அந்தப் பரிகலத்தை வெளியில் எறிந்தார். அந்த எச்சம் அங்கு சாபத்தினால் பல்லி உருக்கொண்டு இருந்த தம்பதியர் இருவர் தலையில் பட தலை பொன்னுருவம் அடைந்தது. பூர்வ ஞானம் பெற்ற இருவரும் உபமன்யு முனிவரைத் துதித்து அவரால் தீர்த்த யாத்திரை செய்து சாப விமோசனம் பெற்றனர்.

மரிசீ முனிவரால் பேயுரு அடையுமாறு சில முனி குமாரர்கள் சாபம் பெற்றிருந்தனர். அவர்கள் உபமன்யு முனிவரின் தவத்தைக் கெடுக்க வர பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து அவர்களின் பேயுருவை ஒழித்தார்.

இவரைச் சோதிக்க எண்ணிய சிவபிரான் இந்திரன் உருக்கொண்டு வந்து சிவ நிந்தனை செய்ய அகோராஸ்திர மந்திரம் ஜெபித்து விபூதி எடுத்து இந்திரன் உருவின் மீது வீசினார். அதனை நந்தி தேவர் தடுத்தவுடன் வேதனை கொண்டு சிவநிந்தனை கேட்டபின் உயிர்விட முயலுகையில் சிவபிரான் தரிசனம் தந்து வேண்டிய சித்திகளைக் கொடுத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுகமிகயதவரு :- மிக்க சுகபோகங்களுடன் வாழ்ந்தவர்.
சூரியதவரு :- சூரிய வழிபாடு செய்பவர் . சூரியனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
ஹெக்கடியதவரு :- ஹெக்கடி என்னும் வித்தையில் வல்லவர்.
மோடியதவரு :- மோடி போன்ற வித்தையில் வல்லவர்.
சுப்பண்ணதவரு :- சுப்பண்ணன் என்பவரின் வம்சா வழியினர்.
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் வங்குசங்கள் ஜரீகெயதவரு, சஞ்ஜெயதவரு, சூருமெயயதவரு


19 .உஷன மகரிஷி கோத்ரம் :

சுக்ராச்சாரியாருக்கு உஷனன் என்பது பெயர் தாங்கியவர் சுக்ரர் ஆன வரலாறு மஹாபாரதம் சாந்தி பருவத்தில் காணப்படுகின்றது.

உஷனர் சிறந்த அறிவு நுணுக்கமும் தவ சித்தியும் கைவரப் பெற்றவர். ஒருமுறை இவர்தம் யோக பலத்தால் மறைந்தார். குபேரன் ஸ்தம்பித்து விட்டான். குபேரனின் தனம் - செல்வம் மறைக்கப்பட்டது. பின் உஷனர் குபேரனை விட்டு நீங்கினார்.

இதனால் வருத்தங்கொண்ட குபேரன் சிவபிரானிடம் முறையிட்டான். உஷனர் மீது கோபம் கொண்ட சிவபிரான் தம் சூலத்தை வில்லாக வளைத்தார். உஷனரைத் தன் வாயிலிட்டு விழுங்கினார். ஈசுவரனின் திருவயிற்றினுள் சஞ்சரித்தார் முனிவர். சிவபிரானின் யோகாக்னி அவரைத் தகிக்க தாங்க மாட்டாது சிவனைத் துதித்துக் கொண்டு அவர் வயிற்றிலிருந்து வெளிப்பட்டார். அவர் மீது கோபம் கொண்ட இறைவன் சூலத்தை ஓங்கக் கருணாகரியான அம்பிகை முனிவர் மீது கொண்ட கோபத்தைக் கைவிடச் செய்தாள். அம்பிகையின் புருஷகாரத்தினால் உஷனர் இறைவனின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டதால் இவர் சுக்ரர் எனப்பட்டார்.

தேவ குருவைக் காட்டிலும் மந்திர பலத்தில் இவர் விஞ்சியவர். தேவகுருவே தன் மகன் கசனை இவரிடம் வித்தை கற்க அனுப்பித் தமக்குத் தெரியாத மிருத்யு சஞ்சீவி மந்திரம் கற்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாரதம்மியதவரு :- தராதரம் அறிந்து பேசுபவர்கள்.
சிருங்காரகவியவரு :- அணிநலன்கள் சிறக்க அழகான கவிதைகள் இயற்றுபவர்.
பாலகவியவரு :- சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற அதிசயவான்கள்.
ருத்ர வீணையதவரு :- ருத்ர வீணை என்னும் ஒருவகை வீணை வாசிப்பில் வல்லவர்கள்.
குறிப்பு :- இக் கோத்ர வங்குசப் பெயர்களைக் கொண்டு பார்த்தால் இக்கோத்திரத்தார் அனைவரும் சிறந்த கலை வல்லுனர்கள் எனத் தெரிகின்றது.

20 .கண்வ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த மகள் சகுந்தலை. இச் சகுந்தலையைக் கண்வ முனிவர் கருணையுடன் வளர்த்தார். வேட்டை நிமித்தமாக காட்டிற்கு வந்த துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டான். இருவரும் இதயம் மாறிக் குடியேறினர். கந்தர்வ முறையில் சகுந்தலையைக் கைப்பிடித்தான் மன்னன்.

நாடு திரும்பியவன் சகுந்தலையை மறந்தான். கண்வர் அனைத்தையும் அறிந்தார். அவர்களின் திருமணத்தை அங்கீகரித்தார். சகுந்தலை ஆண் மகவு ஒன்றனைப் பெற்றாள். இக் குழந்தைதான் புகழ் பெற்ற பரதன். இவ்வுத்தமன் பெயராலேயே இந்திய நாடு பரத கண்டம் என்று அழைக்கப்படுகின்றது.

சகுந்தலையை மறந்திருந்த துஷ்யந்தினிடம் அவளையும் மகனையும் முனிவர்கள் புடைசூழ கண்வர் அனுப்பி வைத்தார்; என்பன போன்ற வரலாறுகளை உலகமகா கவியான காளிதாசன் தம் சாகுந்தலம் என்னும் காவியத்தில் கூறியுள்ளான்.

தேவாங்க முனிவரின் ஐந்தாவது அவதாரம் வரரிஷி அவதாரம். இவ்வவதார காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் கவிரத்தினன் என்று பெயர் கொண்ட ஒருவன். வரரிஷி தம் கருணையாலும் காளிதேவியின் வரபலத்தினாலும் கவிரத்தினன் என்ற கல்வியறிவு சிறிதும் இல்லாத அவனை உலக மகாகவியான காளிதாசனாக மாற்றினார். காளிதாசன் வரரிஷியின் சீடன்

" காளிதாசுனகுனு கவுலதார யொசங்கி காசி ரட்சிஞ்சின காளி சரணு....... ஸ்ப்த நகர நிவாஸினி சரணு சரணு சவுடமாம்பிக மமு ப்ரோவு சரணு சரணு " என்னும் தண்டக பத்யம் உணர்த் துவதனைக் காண்க.

கண்வ முனிவர் தவம் செய்கையில் அவரைப் புற்று மூடியது. அப்புற்றிடமாக முனிவரிடம் தவம் அனைத்தும் ஒரு மூங்கிலாக வளர்ந்தது. பிரம்ம தேவன அம்மூங்கிலைக் கொண்டு மூன்று வில் செய்தான்.

1) காண்டீபம் - பிரம்ம தனுசு என்றும்
2) பினுகம் - சிவதனுசு என்றும்
3) சார்ங்கம் - விஷ்ணு தனுசு என்றும் அழைக்கப்படுகின்றன.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஜதவரு :- அஜன் - பிரம்மதேவன்; பிரம்மனை வழிபாடு செய்தவர்.
அங்கம்தவரு :- உடல் அங்கங்கள் வன்மை பெற்றவர்.
அந்தலெதவரு :- அந்தலம் - சிலம்பின் வடிவம் பெற்ற ஒரு வகைக் கழல். இதனை வீரச்சின்னமாக ஒற்றைக் காலில் அணிபவர்.
ஆபரணதவரு :- ஆபரணங்கள் அதிகமாக அணிந்து கொள்பவர்.
இண்டிவாரு :- அநேக வீடுகள் சொந்தமாகக் கட்டிக் கொண்டு வாழ்பவர்.
வஜ்ஜிரதவரு :- வஜ்ஜிரம் பற்றி வந்த பெயர்.
குந்திலவாரு :- குங்குலியவாரு என்பது இவ்வாறு வழங்கப்படுகிறது. பூசனையில் குங்குலிய தூபம் பயன்படுத்துபவர்.
சாரசூத்திரதவரு :- அறுவகைச் சூத்திரங்களில் ஒன்று சாரசூத்ரம் என்பது. இச் சூத்திரத்தில் வல்லவர்.
தூர்வாங்கிரம்தவரு :- தூர்வாங்கிரம்= அருகம்புல். அருகம்புல் கொண்டு பூசனை நிகழ்த்துபவர்.
பந்தருவாரு :- ஆந்திராவில் கிருஷ்ண ஜில்லாவில் உள்ள ஓர் ஊர் பந்தர். அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பெம்பலவாரு :-

21 .கபில மகரிஷி கோத்ரம் :

மஹரிஷி வரலாறு :- கர்த்தமப் பிரஜாபதியைப் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யுமாறு பிரம்மா ஆணையிட்டார். ஆணையை ஏற்ற அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் பிந்து ஸரோவரம் என்ற புண்ய தீர்த்தக் கரையில் தவம் செய்தார்.

பகவான் விஷ்ணு அவருக்குத் தரிசனம் தந்தார். நீ ஸ்வாயம்பு மனுவின் பெண்ணான தேவஹூதியை மணம் செய்துகொள். உனக்கு ஒன்பது பெண்களும் ஒரு மகனும் பிறப்பர். நானே உனக்கு மகனாய்ப் பிறப்பேன் என்று வரம் அருளினார். தத்வ வித்தையை உலகினுக்கு உணர்த்த பகவான் கபிலராய் அவதாரம் செய்தான்.

தன் ஒன்பது பெண்களையும் கர்த்தம பிரஜாபதி ஒன்பது ரிஷிகளுக்கு மணமுடித்துத் தந்தார்.

கர்த்தமரின் பெண்கள் - அவர்தம் கணவன்மார்கள்
1) கலா - மரீசிமகரிஷி
2) அனசூயா - அத்ரி மகரிஷி
3) சிரத்தா - அங்கீரஸர்
4) ஹவிர்ப்பூ - புலஸ்தியர்
5) கதி - புலஹர்
6) க்ரியா - கிரது
7) க்யாதி - ப்ருகு
8) அருந்ததி - வசிஷ்டர்
9) சாந்தில - அதர்வர்
கர்த்தமர் மகன் கபிலரைத் தம் மனைவியிடம் ஒப்புவித்துத் தவம் செய்யச் சென்றார்.

தேவஹூதி, மகனே! எனக்கு உத்தமமான ஞானத்தை உபதேசம் செய் என்று வேண்டினாள். கபிலர் தம் தாய்க்குச் சாங்கியம், யோகம் என்னும் மார்க்கங்களையும் அவைகளுக்கும் பக்திக்கும் உள்ள சம்பந்தத்தினையும் விஸ்தாரமாக உபதேசித்தார்.

இவ்வுபதேசத்தினால் அவள் சகல சந்தேகங்களும் நீங்கி பகவானை உபாசித்து முக்தி அடைந்தாள்.

ஸகர சக்ரவர்த்தி அசுவமேத யாகம் செய்தார். அசுவமேதயாகக் குதிரையை இந்திரன் பாதாளம் கொண்டு போய் கபில முனிவருக்குப் பின் கட்டினான். ஸகர புத்திரர்கள் குதிரையின் நிமித்தம் தவம் செய்து கொண்டு இருந்த கபிலரை இம்சிக்க; அவர் கண் திறந்து பார்த்தார். அவர் பார்வையிட்டு அவர்கள் சாம்பல் ஆயினர்.

தவத்தில் அவர் இருந்து கண் விழிக்குங்கால் கபிலரின் முதல் பார்வையில் படுபவர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆவர்.

பின் அம்சுமான் குதிரையை வேண்டி முனிவரிடம் வந்தான். குழந்தாய்! குதிரையைக் கொண்டு செல். சகரனிடம், கொடு. இது இந்திரனின் சூழ்ச்சி என்றார்.

சுவாமி! தங்களுக்குக் குற்றம் இழைத்த இவர்கள் நற்கதி அடைய அருள் செய்யுங்கள் என அம்சுமான் வேண்டினான்.

உன் பேரன் பகீரதன்! ஆகாய கங்கையைப் பூமிக்கு கொண்டு வருங்கால் அதன் நீர்பட்டு இவர்கள் நற்கதி அடைவர் என்று வரமீந்தார் கபிலர்.

கங்கா ஸாகரம் என்னும் இடத்தில் இன்றும் யோக சமாதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இப்பொழுதும் அவ்விடம் யாத்திரைக்குரிய புனிதத்தலமாக விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சுவாரு :- காஞ்சிபுரத்தை ஸ்ரீ கன்சு என்று பெயர். ஆந்திராவிலும் ஸ்ரீ கன்சு என்ற ஊர் இருக்கின்றது. இவ்வூர்களில் ஒன்றினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆரபுவாரு :- ஆராக்கீரை தொடர்பான பெயர்.
உட்ளவாரு :- நீர் ஊற்றினுக்குத் தெலுங்கில் உட்ள என்று பெயர். இயற்கையாய்ப் பெருகும் நீர் ஊற்றின் அருகில் வீட்டுத் தெய்வத்தை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.
சுகுண தவரு :- சு+குணம் = மிக நல்ல குணத்தைக் கொண்டவர்கள்.
கௌரதவரு :- கௌரி தேவியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்கள்.
தக்காவாரு :- செட்டிகாரர், எஜமானர் என்பன போல் ஒரு கௌரவப் பெயர்.
தந்துலதவரு :- நூலுதவரு :- தந்து - நூல்; இரண்டும் நூல் பற்றி வந்த பெயர்.
திரிபுரதவரு :- திரிபுரம் சம்ஹாரம் செய்த சிவபிரானின் மேன்மையை எண்ணி; இச்செயலின் உயர்வால் திரிபுரசம் ஹரமூர்த்தியைப் பூசிப்பவர்.
தவனம்வாரு :- மருக்கொழுந்து போல் வாசனைமிக்க ஒரு வகை இலை. கலச திரவியங்களுடன் இதுவும் ஒன்று. இதனைத் தானம் செய்ததாலோ, வேறு காரணங்களாலோ இப்பெயர் வந்துள்ளது.
நடபுலவாரு :- நடந்து கொண்டே இருப்பவர்.
நூகுலவாரு :- நொய்யரிசிச் சோறு உண்பவர்.
பசுபுலேட்டிவாரு :- பசுபுலேட்டி என்பது ஆந்திராவில் உள்ள ஓர் ஆறு. அவ்வாற்றங்கரையில் வசித்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழிலில் இவ்வாற்றிற்கு மஞ்சள் ஆறு என்று பெயர்.
பச்சலதவரு :- பச்சைக்கல் நகையை அணிபவர்.
பந்தாரிதவரு :- பந்தாரி ஒரு வகைச் செடி. இச்செடி அடியில் வீட்டுத் தெய்வத்தை வணங்குபவர்.
பரடிதவரு :- பரடிபல்லி ஆந்திராவில் கர்நூல் ஜில்லாவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பந்துலுவாரு :- ஆசிரியருக்குத் தெலுங்கில் பந்தலு என்று பெயர். இவர்கள் ஆசிரியராகச் சேவை செய்பவர்.
பேடம்வாரு :- பூசனைச் சாமான்களுள் பேடம் என்பது ஒன்று. ரதம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனைத் தானம் செய்ததால் பெற்ற பெயர்.
முரகலதவரு :- முறுக்கான குணம் கொண்டவர்.
வஜ்ராலவாரு :- வஜ்ஜிரம் - வைரம் ; வைரநகை அணிபவர். வைர வணிகம் செய்தவர்.
பசுபதி :- பசுபதியான பசுபதீசுவரரை வீட்டு தெய்வமாக வணங்கி வருபவர்.
மரகதவாரு ;- மரகத வணிகம் செய்தவர்.
தோள்ளவாரு :-
முருகிவாரு :-
முர்வம்புவாரு :-

22 .கரசக மகரிஷி கோத்ரம் :

கா்க்க மகரிஷி என்னும் பெயர் பெற்றவர் இவர். இப்பெயர்தான் கரசக் என்று மருவி இருக்கின்றது. கா்க்கர் ஆதிசேஷனை உபாசித்து அவரிடம் ஜோதிட வித்தயினை வேண்டிப் பெற்றார். இம்முனிவரால் செய்யப்பட்டது கா்க்கஸம்ஹிதை எனப்படும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காசம்தவரு :- காசாம்பூ ஒருவகைச் செடி. இதன் அடியில் தெய்வ வழிபாடு செய்பவர்.
நரஸ்திரம்வாரு :- நரசிம்ம வழிபாடு செய்பவர்.
ரெட்ளவாரு :- இவர்கள் ஆந்திராவில் ரெட்டிகளுடன் அதிகமான வியாபாரத் தொடர்பு உடையவர்.
சாச்சவாரு :-
தம்மசவாரு :-

23 .கவுச மகரிஷி கோத்ரம் :

தன் குருவிற்குப் பதினான்கு கோடி பொன்குருதட்சிணை கொடுக்க எண்ணிஅதனை இரகுவிடம் பெற்றுத் தந்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மலிபெத்தவாரு :- குலக் கூட்டத்திற்குத் தலைவராக இருப்பவர். இன்று பெத்தர் என பங்களங்களில் இருப்பது போன்ற பதவி இது.

23A . கனக மகரிஷி கோத்ரம் :

ரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மாலேலாரு :- புஷ்பமாலை தொண்டு புரிந்தவர்.

24 . காங்கேய மகரிஷி கோத்ரம் :

முருகக் கடவுள் கங்கையில் வளர்ந்ததால் காங்கேயன் என்று பெயர் பெற்றார்.கங்கையின் மகன் ஆதலின் பீஷ்மரும் காங்கேயன் என்று பெயர் பெற்றார். இப்பெயர் பெற்ற இம்மஹரிஷியின் பிற வரலாறுகள் புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்பலதவரு :- குலக் கூடங்களுக்குக் கம்பளம் விரிக்கும் திருத்தொண்டு புரிந்தவர்.கம்பள தானம் செய்தவர்.
பசுபுலதவரு:
முத்தினதவரு:

25.காத்ய காத்யாயன காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் :

குறிப்பு : இம்மூன்று பெயர்களும் ஒரே மகரிஷியைக் குறிக்கலாம்.
1). காத்ய மகரிஷி கோத்ரத்தில் ஸ்தம்பதனவரு என ஒரேயொரு வங்குசம் காணப்படுகின்றது. இவ்வங்குசம் மீண்டும் காத்யாயன மகரிஷி கோத்ரத்திலும் வருகின்றது.
2). காத்யாயன என்னும் பெயர் தவறுதலாக காத்ய என்று அச்சாகி இருக்கலாம்.
3). காத்யாயனரையே காத்யாயனதேவர் என்று மதித்து அழைத்து இருக்கலாம்.
4.) இம்மூன்றும் ஒரே கோத்ரம் எனக் கருதுவதட்கு வங்குசப் பெயர்கள் அனைத்தும் ஒன்றாக இருக்கின்றன.
மகரிஷி வரலாறு ;- காத்யாயன மகரிஷியின் பெயரால் ஒரு ச்ரெளத சூத்திரமும், உபஸ்மிருதியும் விளங்குகின்றன. இவர் மிகச் சிறந்த தவசி. தம் தவவன்மையால் பார்வதி தேவியைத் தம் மகளாகப் பெற்றார். காத்யாயனர் செய்த தவத்தால் அவர் மகளாகப் பிரந்தமையின் தேவி காத்யாயனி என்று திருநாமம் பெற்றாள்.
ஓம்: காத்யாயனய வித்மஹே
      கன்யாகுமாரி தீமஹி
      தன்னோ துர்கிப்ரசோதயாத்
- என்னும் துர்க்கா காயத்ரி மந்திரம் இதற்குச் சான்றாக அமைகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காட்னம் வாரு :- இப்பெயர் காஷ்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவர் மசானத்தில் பெரிய நாயகி அம்மையை வழிபாடு செய்பவர்.
கோணங்கிவாரு :- கோணங்கித்தனம் மிக்கவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
நம்பியவரு :- புரோஷத்தம நம்பியான திருமாலை அவன்றன் திவ்ய தேசங்களில் வழிபாடு செய்பவர்.
பாணதவரு :- வன்னி மரத்தின் மீது பாணம் எய்பவர்கள். இச்செயல் விஜயதசமி அன்று அம்மன் ஆலயங்களில் இன்றும் நடைபெறுகின்றது.
மாசரளதவரு :- ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் மாசரளா என்னும் ஊர் உள்ளது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மூங்கினதவரு :- மூங்கில் குத்துக்களடியில் வழிபாடு நிகழ்த்துபவர். சிவபிரான் மூங்கிலில் பிறந்தார். முருகன் நாணலில் பிறந்தார். என வரலாறுகள் உண்டு. எனவே இவர்கள் மூங்கிலில் சிவபிரானும் முருகனும் இருப்பதாகப் பாவித்து வழிபாடு செய்கின்றனர் என்பது தாத்பர்யம்.
முகதலதவரு :- காரியத்தைப் பொறுப்பாக ஒரே முகமாகச் செய்யக் கூடியவர். விடா முயற்சி உடையவர்.
அரவிந்ததவரு :- அரவிந்தம் - தாமரை. தாமரை மலர்கள் கொண்டு வழிபாடு செய்பவர்.
வ்யசனமவாரு :- ஓயாது கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்.
ஸ்தம்பதவரு :- கொடி மரங்கள் செய்து ஆலயங்களுக்குத் தானம் வழங்கியவர். வெற்றிக் கம்பம் நாட்டியவர். தம் அறிவாற்றலால் அனைவரையும் வாதில் வென்று ஜெயஸ்தம்பம் நாட்டியவர். ஆலயங்களில் கம்பம் நாடும உரிமை, பெயர்க்கும் உரிமை பெற்றவர்.
ஸ்யாமளதவரு :- ஸ்யாமளா தேவியை வழிபட்டவர்.
ஹூகரியதவரு :- கர்நாடகாவில் உள்ள ஹூகரி என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொகரனவரு :- தொகர என்பது பருப்பைக் குறிக்கும் - துவரம் பருப்பு கன்னடத்தில் தொகரெபேளே என்று அழைக்கப்படுகின்றது. பருப்பு பற்றி வந்த ஒரு பெயர்.
ஜாஜியதவரு ; ஜாஜிபுஷ்பம் - ஜாதி மல்லிமலர். இதனால் வழிபாடு செய்பவர்.
கோமளதவரு :- சிருங்காரம் உடையவர். அழகு மிக்கவர். அழகை ரசிக்கும் இயல்புடையவர்.
கோடங்கியதவரு :- இவ்வங்குசமும் முன்கண்ட கோணங்கிவாரு என்பதும் ஒன்றே.
மசானதவரு :- மசானத்தில் மசானருத்திர வழிபாடும் பெரியநாயகி - தொட்டு தேவரு வழிபாடும் செய்பவர்.

26 .காபால மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- ஒருமுறை ஜகந்நாத சேத்திரத்தில் இம்மகரிஷி இறந்த பிள்ளையை பெருமாள் முன் கொண்டு சென்றார். பெருமாளைப் பிரார்த்தித்துப் பிள்ளையை உயிர்ப்பித்தார்.
பெருமாளின் அருளினுக்கு மகிழ்ந்தார். மகரிஷி, அங்கு ஸ்வேதமாதவப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். முனிவர் பெயர் இவ்வரலாற்றில் கபால கௌதமரிஷி எனக் குறிக்கப்படுகின்றது.
சிவமூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று காபாலி என்பது.
ஏகாதச ருத்திரர்களுள் ஒருவர் காபாலி என்பவர். இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கங்காவாரு :- கங்கையை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
செங்கணதவரு :- செங்கஞ்செடி அடியில் வீட்டு தெய்வ வழிபாடு செய்பவர்.
முக்திதவரு :- இவ்வங்குசத்தில் முன்னோர் ஒருவர் ஜீவன் முக்தி அடைந்தவர். அவர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ம்ருத்துதவரு :- ம்ருத்து - மண் : இவர்கள் மண்வழிபாடு செய்பவர். பஞ்ச பூதங்களில் பிருதிவியை வழிபடுபவர்.
ஐந்துதவரு :- ஐந்து - சந்திரன் : இவர்கள் பௌர்ணமி பூசனை செய்வர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி என்னும் ஊரினர்.

27 .காமுக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாகராஜதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். மூத்த மகனுக்கு நாகராஜன் எனவும் மூத்த மகளுக்கு நாகம்மா எனவும் பெயர் சூட்டுவார்கள்.
மாகாந்ததவரு :- மாகந்தம் கிழங்கு வகைகளுள் ஒன்று. இக்கிழங்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ரசாலதவரு :- நவரசங்களில் வல்லவர். நவரசங்களாவன :
வீரம், அச்சம், இனிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்ரம், நகை மற்றும் சமநிலை
என்னும் இவ்வொன்பதும் நவரசங்கள் எனப்படும். இவ்வொன்பான் சுவைகள் மிக்க கவிதைகள் இயற்றியவர்.
யோகதவரு :- யோக மார்க்கத்தில் வல்லவர்கள். சிறந்த யோகிகள்.
சதரின் மேல் தங்க தந்தவரு :-

28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- அகத்தியர், வியாசர், இவர்களுடன் சேர்ந்து இருந்தார். கண்ணன் யாகம் செய்த போது யாகத்தின் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்தார்;இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடகதவரு :- கோடகம்-கர்நாடகத்தில் உள்ள ஓர் ஓர். அவ்வூரைப் பூர்வீகமாக் கொண்டவர்.
கௌசல்யதவரு :- ஸ்ரீ ராமபிரானின் தாயான கௌசல்யைதேவியை வணங்குபவர்.
கௌரவதவரு :- மிக்க கௌரவத்துடன் வாழ்பவர்.
பாலகதவரு :- பாலகருக்குப் பால் வழங்கும் தர்மம் செய்பவர்.
பாவனதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். தம்மைச் சிவமாகப் பாவித்துக் கொள்பவர்.
புக்கராஜூதவரு :- குடும்ப மூதாதையரில் ஒருவர் புக்கராஜூ எனப் பெயர் கொண்டவர். அவர் பெயரையே வம்சமாகக் கொண்டவர். புக்கராஜூ வம்சமாகக் கிளைத்தவர்கள்.
புத்சலதவரு :- புத்சலம் என்பது ஒருவகைக் காய். தமிழில் இது வரிக்குருமத்தங்காய் எனப்படும். இக்காயைக் கொண்டு பலவித வைத்தியங்கள் செய்தவர்.
கம்பதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை விழாக் காலங்களிலும் பிறவிழாக்காலங்களிலும்
கம்பம் நடுதல், பெயர்த்தல் உரிமை பெற்றவர்.
கொடி மரங்கள் தானம் செய்தவர்.
அனைவரையும் வாதில் வெற்றிக் கம்பம் நட்பவர்.
இக் கோத்திரத்தில் காணப்படும் வேறு சில வங்குசங்கள் ரவராதவரு, பௌராவதவரு, சப்பைய்யதவரு.

29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் :

தட்சப் பிரஜாபதியின் பெண்கள் இருபத்தேழுபேர் நட்சத்திரப்பதம் பெற்றனர். இவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் தட்சன் மணமுடித்துத் தந்தான். கிருத்திகைப் பெண்கள் அறுவரால் ஆறுமுகப் பெருமான் வளர்க்கப்பட்டான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையின் முருகன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டான். இப்பெருமானின் பெயர் தாங்கிய ஒரு மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மரளேலாரு :- மரளி என்பது கொள்ளே காலம் அருகில் உள்ள ஓர் ஊர்.
மரளி என்பது புகழ் பெற்ற சந்தை கூடும் இடம். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கலகண்டதவரு :- கலகண்டம் - கற்கண்டு. கற்கண்டு போல் பேசக் கூடியவர்.
மசனதவரு :-

30 .காலவ மகரிஷி கோத்ரம் :

பிரம்மரிஷி பதவியை அடைய வேண்டி விசுவாமித்திரர் கடுந்தவம் செய்தார். திசைதோறும் சென்று பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினார். அப்போது காலவர் அவருக்குச் சீடராய் அமைந்தார். குருவிற்குச் சகலவிதமான சேவைகளையும் செய்தார். விசுவாமித்திரர் தம் சீடரின் சேவையில் மனம் மகிழ்ந்தார். குழந்தாய் ! நீ விரும்பும் இடம் செல்க என்று அனுமதி கொடுத்தார்.
காலவர் தம் குருவிட்குக் குருதட்சிணை கொடுக்க ஆசைப்பட்டார். விசுவாமித்திரர் ஏதும் வேண்டாம் என மறுத்தார். காலவர் வற்புறுத்திக் கேட்கவே; உடல் எங்கும் சந்திரனைப் போல் வெளுத்தும் ஒரேயொரு காது மட்டும் கரிய நிறம் கொண்டு இருக்கும் 800 உத்தம ஜாதிக் குதிரைகள் வேண்டும் என்றார்.
இத்தகைய குதிரைகளை எங்கே சம்பாதிப்பேன் என்று ஏங்கிய காலவர் தன் நண்பன் கருடனின் உதவியாலும் யயாதி மன்னனின் உதவியாலும் 600 குதிரைகளை மட்டும் சம்பாதித்துக் குரு தட்சிணையாகக் கொடுத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கிராணதவரு :- கிரஹணம் என்பது கிராணம் என்று அழைக்கப்படுகின்றது. கிரஹணகாலங்களில் ஜப தபங்கள் செய்பவர்கள்.
கொல்லதவரு :- கொல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சப்ரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குச் சப்பரம் தந்து உதவியர்.
சம்சாரதவரு :- பல மனைவியருடன் வாழ்ந்தவர்.
சரமுலதவரு :- பூமாலை கட்டித் தரும் திருத்தொண்டு செய்பவர்கள்.
சித்ராவதியவரு :-சித்ராவதி நதியோரத்தில் வாழ்ந்தவர். அவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தூர்வாங்குரதவரு :- துர்வா - அறுகு, அறுகம் புல்லால் வழிபாடு செய்பவர்கள்.
பதிகெனதவரு :- குறிசொல்லுவதற்குப் பதிகெ என்று பெயர். குறி சொல்லியவர்கள்.
பிடகதவரு :- பிடகம் - வரட்டி; வரட்டி பற்றி வந்த ஒரு பெயர்.
புராணதவரு :- பதிவெண்புராணங்களில் வல்லவர்கள். புராண பிரவசனம் உபந்யாசம், பிரசங்கம் செய்பவர்.
பூஷணதவரு :- ஆபரணங்கள் அணிந்தவர்.
பேள்ளதவரு :- பேழை - பெடிய முச்சளம் பற்றி வந்த வங்குசப் பெயர்.
மந்திரிதவரு :- அமைச்சராகப் பணியாற்றியவர்.
முனிகிதவரு :- முனீஸ்வரனை வீட்டுத் தெய்வமாக வணங்கியவர்.
யோகதண்டதவரு :- யோகதண்டம் கொண்டு ஜெபதபங்கள் செய்பவர்.
ரகஸ்யதவரு :- ரகசிய சிந்தனை உள்ளவர்.
ராஹசம்தவரு :- அதிக ஆவல் - சாகசம் உள்ளவர்
வாசகதவரு :- பேச்சில் வல்லவர். சொல் ஆற்றல் மிக்கவர்.
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் சில வங்குசங்கள்:
அகசம்தவரு, அகணம்வாரு, அகளதவரு, அங்கதவரு, அசணதவரு, அச்சேணதவரு, அபணதவரு, அருபுதவரு, ஆகள்ளதவரு, ஆகாசதவரு, ஆபரணதவரு, ஆலனதவரு, கமுஜூதவரு, கம்மகடுதவரு, சரஜசாகலதவரு, சாப்பம்தவரு, சாரசதவரு, சாரசூத்ரதவரு, தோகுருதவரு, பாலதாள்ளதவரு, பிடிகெதவரு, பிடிகலெதவரு, புளிலமருதவரு,மவிலதவரு, மைல்தவரு, பெண்ணெயவரு, மந்தககாரரு, சாரஸ்வதவரு.

31 .கான மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்காபத்தினியவரு :- அங்காளம்மனை பூசிப்பவர்.
கடகதவரு :- கடகம் அணிந்தவர்.
மால்யதவரு :- புஷ்பமாலை கைங்கர்யம் செய்தவர்.
கர்நாதவரு, தள்ளதவரு.

32 .காசியப மகரிஷி கோத்ரம் :

பிரம்மாவின் குமாரர் மரீசி மகரிஷி. மரீசிக்கும் கலை என்பாளுக்கும் பிறந்தவர். காசியபர். இக் காசியபர் தட்சப் பிரஜாபதியின் பெண்கள் பதின் மூவரை மணந்து அவர்கள் வழியாய் வம்ச விருத்தி செய்தார். அப்பெண்களும் அவர்கள் வழியாய்ப் பிறந்தவர்களும் வருமாறு :-
1) அதிதி வழியாக ஆதித்யர்கள்
2) திதி வழியாகத் தைத்தியர்கள்
3) தநு வழியாகத் தானவர்கள்
4) அநாயு வழியாகச் சித்தர்கள்
5) பிரதை வழியாகக் கந்தருவர்கள்
6) முனிவழியாக அப்சரசுக்கள்
7) சுரசை வழியாக ய்க்ஷர்கள், இராக்கதர்கள்
8) இளை வழியாக மரம், செடி, கொடி மிருகங்கள்
9) குரோத வரை வழியாகக் கொடிய மிருகங்கள்
10) தாம்ரை வழியாக குதிரை பட்சிகள்
11) சுரபி வழியாகப் பசுக் கூட்டங்கள்
12) விநதை வழியாக அருணன், கருடன்
13) கத்ரு வழியாக நாகங்கள்.
பின் இக்காசியபருக்கு பர்வதன் என்னும் தேவரிஷியும் விபாண்டகன் என்னும் பிரம்மரிஷியும் பிறந்தனர்.
பரசுராமர் தம்முடைய அசுவமேத யாகத்தில் பூமியைக் காசியபருக்குத் தானமாகக் கொடுத்தார். காசியபரால் தானமாகப் பெறப்பட்ட பூமி காசினி என அழைக்கப்பட்டது.
உபேந்திரர் விஷ்ணுவின் அம்சமாக இவருக்கும் அதிதிக்கும் பிறந்தார்.
மாயையிடமாக இவருக்குச் சூரபத்மன், சிங்கமுகாசூரன், தாரகாசூரன், அசமுகி ஆகியோர் பிறந்தனர்.
ஊர்வசிக்கும் இவருக்குமாக வசிஷ்டர் பிறந்தார். பிரஜாபதிகளுள் இவர் ஒருவர். ரிக் வேதத்தில் பல சூக்தங்களுக்கு இவர் கர்த்தா.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கண்டதவரு :- கண்டம் - கழுத்து; கழுத்தைப் பற்றி வந்த ஒரு பெயர்.
குசதவரு :- குசம் - தர்ப்பை; தர்ப்பையைக் கொண்டு வைதீக காரியங்கள் செய்பவர்.எப்பொழுதும் தர்ப்பையும் கையுமாக இருந்ததால் வந்த ஒரு பெயர்.
குண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அக்நிகுண்டத்திற்கு முதற் பூஜை செய்து பூ மிதிக்கும் உரிமம் பெற்றவர். யாககுண்டத்திற்கு அருகே இருந்து எப்போதும் யாகம் செய்து கொண்டே இருப்பவர்.
குத்தாலதவரு :- தஞ்சை மாவட்டம் திருமயிலாடுதுறை அருகே உள்ள ஓர் ஊர். அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோணங்கிதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். கோணங்கித்தனம் உள்ளவர்.
சரசதவரு :- சரசங்களில் வல்லவர். சாகசங்கள் மிக்கவர்.
சரந்திதவரு :- குருவினிடம் உபதேசம் பெற்றுக்கொண்டு; குருவின் அநுமதியுடன் மற்ற சீடர்களுக்கு உபதேசம் செய்பவர். உபகுருவானவர்.
சர்ப்பதவரு :- நாக பூசனை செய்பவர்.
சிந்துதவரு :- சிந்து நதிக்கரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிருங்காரகவியவரு :- அணி இலக்கணம் நிரம்பிய அழகிய கவிதைகள் பாடும் வன்மை பெற்றவர்.
தாம்பூலதவரு :- தாம்பூலப் பிரியம் கொண்டவர்.
தும்மதையவரு :- சிவபிரானுக்குப் பிரீதியான தும்பைப்பூவால் அவரை வழிபாடு செய்பவர்.
பாக்கியதவரு :- சகல பாக்கியத்தோடும் வாழ்பவர்.
பாலகவியவரு :-இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.
பில்வபத்ரதவரு :- வில்வதளத்தினால் சிவ பூசனை செய்பவர்.
மச்சாதவரு :- உடம்பில் மச்சம் உள்ளவர்.
மனனதவரு :- மனனம் - மனப்பாடம் செய்வதில் வல்லவர். கருத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்பவர்.
ருத்ரவீணையவரு :-ருத்ரவீணை வாசிப்பில் வல்லவர். இசை வல்லுநர்.
வித்யாநிபுணதவரு :- சகல வித்தைகளிலும் நிபுணத்வம் - திறமை உடையவர். கல்வி கேள்விகளில் வல்லவர்.
விய்யாதிதவரு :- சென்னைக்கருகில் இருக்கம் விய்யாதி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜாஜிதவரு :- ஜாஜி - ஜாதிமல்லிப்பூ. இப்பூவால் வழிபாடு செய்பவர்.
கொம்மனதவரு :-
சபேதவரு :-
பம்லதவரு :-
புத்துலதவரு :-
முடதெவரு :-
ரெட்ளவாரு :-

33 .கிந்தம மகரிஷி கோத்ரம் :

இப்பெயருடைய ஒரு மகரிஷியைப் பற்றி மஹாபாரதம் தம் ஆதி பருவத்தில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அதனைத் தவிர வேறு செய்திகள் ஏதும் புலப்படவில்லை.

நல்ல நேரம் ஒன்றில், சந்ததி விருத்தி பொருட்டுத் தன் மனைவியை நாடினர் மகரிஷி. காலம் பகற்காலம். நேரமே நல்ல நேரம். எனவே முனிவரும் அவர் முனிவரும் மான்வடிவம் கொண்டனர். காட்டில் வேட்டையாடிவந்த பாண்டு மன்னன் அறியாது இம்மான்களின் மீது பாணங்கள் ஏய்தான். அம்பு பட்ட மான்கள் முனிவராகவும் முனிபத்தினியுமாக மாறி கிழே விழுந்தனர்.

பாண்டுவே! சேர்க்கையில் இருக்கும் மிருகங்களை வேட்டையாடக் கூடாது என்பது விதி. வேட்டை விதியை மீறினாய், தர்மம் தவறி எம் மீது பாணம் ஏவிய நீ; உன் மனைவியைச் சேர்ந்தால் உனக்கு மரணம் சம்பவிக்கும் எனச் சாபம் இட்டார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஞ்சலியதவரு :- கூப்பிய கரங்களுடன் எப்போதும் இருப்பவர். ஓயாது இறைவனை அஞ்சலித்தே காலம் கழிந்தவர். சிறந்த பக்திமான்.
சஜ்ஜனதவரு :- சத்சங்கத் தொடர்பு உடையவர். உத்தமர்களோடு மட்டும் தொடர்பு கொள்பவர்.
குத்தாலதவரு :- குத்தாலரிஷியை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
தஞ்சை மாவட்டம் திருமயிலாடுதுறைக்கு அருகே உள்ள குத்தாலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்லனதவரு :-

34 .கிருது மகரிஷி கோத்ரம் :

பிரம்மதேவனின் உடம்பிலிருந்து உதித்த ஒரு மகரிஷி. இம் மகரிஷிக்கு வாலகில்யர் பிறந்தார் என்ற குறிப்புகள் மட்டும் தெரிகின்றன. வேறு வரலாறுகள் புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஆரணியதவரு :- அரணி-நெருப்பு; தவறாது அக்நி ஹோத்ரம் செய்பவர். தினந்தோறும் யாகங்கள் செய்பவர். யாகாக்கினியில் வழிபாடு செய்பவர்.
சிலகதவரு :- சிலகம்-கிளி; கிளிவடிவான சுகப்பிரம்மத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்

35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாகேனபள்ளியதவரு :- பெங்களூர் அருகில் பாகேனபள்ளி என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்மச்சினதவரு :-
மட்டியதவரு :-

36 .குச மகரிஷி கோத்ரம் :

குசத்துடன் எப்போதும் காணப்பட்ட ஒரு முனிவர். குசம் = தர்ப்பை. இம்முனிவர் ஓயாது வைதீகக் கிரியைகள் செய்வார். யாகங்கள் செய்வதில் வல்லவர். இம்முனிவர் பிரம்மாவின் புத்திரர். குசநாபனுக்கு ஆண் பிள்ளை பிறக்க வரம் தந்தவர். உடலுடன் சுவர்க்கம் அடைந்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோணங்கிதவரு :- நடிப்பாலும், பேச்சாலும் சிரிக்க வைப்பவர்.
கொம்மனதவரு :-

37 .குடும்ப மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்லுரிதவரு :- ஆந்திரமாநிலம் சித்தூருக்கு அருகில் கல்லூர் என்னும் ஊர் உள்ளது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- கடகம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் இம்முனிவர். இவரின் மகன் தான் கௌசிக மகரிஷி. குத்ஸகர் தம் மகனுக்கு ஏற்ற பெண் வேண்டும் எனப் பெண் தேடினார். உசத்திய மகரிஷியின் பெண் விருந்தை என்பாள் அழகாலும் குனங்களாலும் மிக்கவள் என கேள்விப்பட்டார். உசத்தியரிடம் பெண் கேட்கப் புறப்பட்டார்.

விருந்தையை ஒருநாள் காட்டுயானை ஒன்று துரத்த உயிர் பிழைக்க ஓடிய விருந்தை மடு ஒன்றில் தவறி விழுந்து உயிர் விட்டாள். இந்நிலையில் பெண் கேட்க வந்த குத்ஸகர் செய்தியைக் கேள்விப்பட்டார். விருந்தையை உயர்ப்பிக்கத் தவம் செய்தார். அப்போது காட்டுயானை ஒன்று குத்ஸகரைத் தூக்கிக் கொண்டு காட்டினுள் சென்றது. யானையிடம் அதன் பூர்வீகத்தைக் கேட்டார் முனிவர்.

ஐயனே! நான் தனதத்தன் என்ற பெயர் உள்ளவன். தரும நெறியைக் கைவிட்டேன். பொன்னாசையால் ரசவாதம் செய்தேன். அந்தப் பாதகத்தால் யானை உருப் பெற்றேன். என்றது யானை.

கருணை வள்ளலான முனிவர் தம் தவ வன்மையின் ஒரு பாகத்தை யானை உருக் கொண்டவனுக்குத்தர அவன் சாபம் நீங்கித் தேவ உருக்கொண்டு சுவர்க்கம் சென்றான்.

மீண்டும் தவம் இயற்றி விருந்தையின் உயிரை யமதர்மன் அருளால் மீட்டார். அதன் பின் விருந்தையைத் தம் மகன் கௌசிகனுக்கு மணமுடித்தார். பின் தவம் இயற்றச் சென்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோணங்கிதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். தம்பேச்சாலும் அங்கசேட்டைகளாலும் சிரிக்கச் செய்பவர்.
தம்பூரிதவரு :- தம்பூரா என்னும் இசைக் கருவி வாசிப்பதில் வல்லவர்.
ஜாஜிதவரு - ஜாஜிமல்லினதவரு :- ஜாதி மல்லிப்பூவால் வழிபாடு செய்பவர்.
கொம்மனதவரு :-

39 .குத்தால மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை. ஆனால் குதாலதவரு என்னும் வங்குசத்தினர் இவரை வழிபடுகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொத்துதவரு :- பெயர் விளக்கம் புலப்படவில்லை.
கொத்ததவரு :-

40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் :

அகத்தியருக்குக் கும்பசம்பவர் என்று காரணப்பெயர். கும்பத்தில் இருந்து பிறந்தவர். என்பது இதன் பொருள். அகத்திய மகரிஷி கோத்ரமும் கும்பசம்பவ மகரிஷி கோத்ரமும் ஒன்றே. இதனுள் காணப்படும் வங்குசங்கள் அனைத்தும் ஒன்றே. இவ்வடமொழிப் பெயரின் பொருளை அறியாமல் தனிக் கோத்ரமாகக் கோத்து இருக்கின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல். அருகினால் வழிபடுபவர்.
துப்படிதவரு :- துப்பட்டி நெய்பவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசுபாவர்.

41 .கெளசிக மகரிஷி கோத்ரம் :

கௌசிக மகரிஷி பிரம்மரிஷி ஆவார்.இவரின் தந்தை குத்சக மகரிஷி ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதாரு - ஏந்தேலாரு :- அந்தலதாரு என்னும் பெயர் தான் ஏந்தேலாரு என்று மருவி வழங்குகின்றது. அந்தலம் என்பது சிலம்பு போன்ற ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவர்.
கும்மடியவரு :- கும்மிடிப்பூண்டி என்னும் ஊரைப் அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பலதவரு :- மைசூர் மாநிலத்தில் கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிபவர்.
மதுராதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவ்வடமதுரை முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று.
எதுகலூருதவரு :- யதுலுருதவரு என்றும் இவ்வங்குசம் வழங்கப்படுகின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் எதுகலூர் என்பது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்புரா - வீணை கொண்டு இசைப்பாடித் திகழ்ந்தவர்.
எக்கலதவரு :- எக்கலாதேவி என்னும் தெய்வத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
லக்கிம்செட்டுதவரு :- மிக்க அதிர்ஷ்டசாலிகள்.
ஜபதவரு :- ஜபதபங்கள் சிரத்தையுடன் செய்பவர்.
நோபிதவரு :-
கௌம்சிக தேவரிஷி கோத்ரம் என்பதும் இக்கோத்ரமும் ஒன்றே.
சிக்கனதவரு :-
பெனகனதவரு :-
பெகினதவரு :- என்ற மூன்று வங்குசங்கள் இதனுள் வருகின்றன.

42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி அநந்த பத்மநாப சுவாமி விரத்தினால் சித்தியடைந்தவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொத்ததவரு :- புதியவர்கள்.
தேவனதவரு :- தேவஸ்தானத்தில் ஊழியம் செய்பவர். ஆலயங்களில் சேவை செய்பவர்.
கேகத்திதவரு :- சே = கை; கையும் கத்தியுமாக இருப்பவர்.
கொப்பலதவரு :- மைசூரில் பெல்காம் அருகில் கொப்பல் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
கோபாலதவரு :- வேணுகோபால சுவாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பந்துலுதவரு :- பந்துலு=ஆசிரியர்; ஆசிரியர் பணி செய்தவர்.
பாபனபல்லெதவரு :- ஆந்திராவில் பாபனபெல்ல என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மீசாலதவரு :- மீசையழகுள்ளவர்
தாடிவாலு :- தாடியழகுள்ளவர்
யர்ராதவரு :- யர்ரா - சிகப்பு நிறம்; சிவந்த மேனி உடையவர்.

43 .கௌதம மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- ரிக் வேதத்தில் பல ரிக்குகளுக்கும் சாம வேதத்தில் பல கானங்களுக்கும் கௌதமர் கர்த்தா ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குத்திதவரு :- பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குத்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குப்பிதவரு :- தும்கூர் மாவட்டத்தில் உள்ள குப்பி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்மளாபுரதவரு :- கர்நாடகாவில் உள்ள கும்மளாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சண்டிகனவரு :- ஸ்ரீ சண்டிகேஸ்வரரை இஷ்ட தெய்வமாக வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
கொண்டிசூலதவரு :- சூலாயுதங்கள் ஒரிலைச்சூலம், ஈரிலைச் சூலம், மூவிலைச் சூலம் எனப்பலவகைப்படும். இவர்கள் ஒரிலைச் சூலம் ஏந்தியவர்கள். இவ்வங்குசம் ஒண்டி சூலதவரு என்று இருக்கவேண்டும்.
சோபனதவரு :- அழகும் மங்களமும் உடையவர். குண அழகும் உடல் அழகும் கொண்டவர்.
கோமுகதவரு :- பசுவின்முகம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.
சௌட வித்யலதவரு :- தம் கல்வித்திறமையால் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு நூல்கள் இயற்றிவர்.
தத்தூரபூலதவரு :- ஊமத்தைப்பூக் கொண்டு வழிபட்டவர். சிவபிரான் மகிழ்ந்த மலர்களுள் ஒன்று ஊமத்தை ஒன்று.
தேவாரதவரு :- மதுரை போடி நாயக்கனூர் அருகில் உள்ள தேவாரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தானபுத்ரதவரு :-
1) சந்தான கோபால கிருஷ்ண பூசனை செய்பவர்.
2) சந்தான லட்சுமி பூசனை செய்பவர்.
3) புத்திர தானமுறையில் - தத்தெடுத்தல் - வந்தவர்.
4) புத்திரனைத்தத்துக் கொடுத்தவர் என்று பல பொருள் கூறுகின்றனர்.

தேவதைதவரு :- ஸ்ரீ தேவியை வழிபடுபவர்.
நில லோகதவரு :- பூவுலகத்தவர். கணக்கற்ற நில புலன்களுடன் வாழ்கின்றவர்.
பசுலதவரு :- பசுக்களுக்கு உணவிட்டு வணங்குபவர்.
குறிப்பு :- தேவாங்கர் தினமும் விருந்தினருடன் உணவு உண்பவர்கள். விருந்தினர் இல்லாத தினங்களில் பசுவையே விருந்தினராகப் பாவித்து " ஓம் கோப்யஸ்ச்ச நம " என்னும் மந்திரத்துடன் உணவு கொடுத்து அதன்பின் உண்பார்கள்.
பச்சலதவரு :- பச்சைக் கற்களான மரகதங்களை விரும்பி அணிபவர். மரகதக்கற்களை வியாபாரம் செய்தவர்.
பச்சாமன்திதவரு :- பச்சை நிற சாமந்திப் பூக்களால் வழிபாடு செய்பவர்.
பன்சலதவரு :- பஞ்ச யக்ஞங்கள் செய்பவர்.
பஞ்சயக்ஞதவரு :- ஐந்து யாகங்கள் செய்பவர்.
பாமுலதவரு :- பாமு - பாம்பு; நாகவழிபாடு செய்பவர்.
பலராமுலுதவரு :- பலராமனை வழிபடுபவர்.
பீரகதவரு :- பீரக - பீர்க்கங்காய். இதனை விரும்பி உண்பவர்.
புஷ்பதந்ததவரு :- தேவாங்க அவதாரங்கள் ஏழனுள் புஷ்பதந்த அவதாரம் ஒன்று. அவரை வழிபடுபவர்.
பொம்மன்சுவாரு :- பொம்மண்ண சுவாமி வழிபாடு உள்ளவர்.
ராமாயணவாரு :- ராமாயண காவியத்தில் வல்லவர். ராமாயண உபந்யாசம் சிறப்பாகச் செய்பவர்.
பாருகத்திதவரு :-
பேரிசெட்டிதவரு :-
சக்குத்திதவரு :-

44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வ வைத்யதவரு :- அசுவினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்கள். குதிரை மருத்துவத்தில் தனிச்சிறப்புப் பெற்றவர்கள்.
கொண்டபல்லிதவரு :- ஆந்திராவில் இன்றும் பொம்மைகளுக்குப் பெயர்போன கொண்டபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பெரெதவரு :- மைசூர் மாநிலம் பெல்காம் அருகில் உள்ள கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் பூர்வீகமாக வாழ்ந்தவர்.
தம்பூரதவரு :- தம்பூரா என்னும் இசைக்கருவி வாசிப்பவர்.
பிண்டதவரு :- முன்னோர்களுக்கு - பிதுரர்களுக்கு பிண்டபிரசாதம் தவறாது இட்டு வணங்குபவர்.
போகுலதவரு :- போகுல - ஓடு; ஓட்டு வீட்டினர். பில்லெமனேரு என்று வழங்கப்படுவது போல் வந்த ஒரு பெயர்.
மதுரகவினவரு :- இனிய சுவைமிக்க கவிபாடுவதில் வல்லவர்.
மின்ச்சுதவரு :- காலில் மெட்டி அணிபவர்.
முலகதவரு :- முளைப்பாலிகை இடுபவர்.
தடிதவரு, மதரெதவரு, நோபிதவரு, யத்திலதவரு, பெட்யம்தவரு.

45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வத்த பத்ரதவரு :- அஸ்வத்த பத்ரம் - அரசமர இலைகள். இவ்விலைகளைக் கொண்டு வழிபடுபவர்.
குறிப்பு :- ஒன்பது கணுக்கள் கொண்ட பச்சைமூங்கிலில் அரசங்கொழுந்து அடங்கிய கொத்தைச் சேர்த்துக் கட்டி, ஸ்தளது கொம்பு என்று பெயரிட்டு மணவறை ஜோடித்துத் திருமணம் புரியும் வழக்கம் இன்றும் உள்ளது. மங்கள காரியங்களுக்கு அரசமர இலைகள் பயன்படுகின்றன.
அஸ்வதவரு :- குதிரைகளைச் செல்வமாகக் கொண்டவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்.
அஸ்வவைத்யதவரு :- அசுவினி தேவர்களைப்போல் வைத்தியத்தில் வல்லவர், குதிரை மருத்துவத்தில் சிறந்தவர்.
காஷ்மீரதவரு :- காஷ்மீர நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பதவரு :- மைசூரில் உள்ள கொப்பம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்பூரம் என்னும் இசைக் கருவி வாசிப்பவர்.
துளசிதளதவரு :- துளசிதளத்தால் வழிபாடு செய்பவர். துளசிச் செடியடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர்.
நரசிம்மதவரு :- நரசிம்ம சுவாமியை வழிபடுபவர்.
மடம்வாரு :- மடாலயங்கள் கட்டித் தர்மம் செய்தவர்.
பாபனபல்லெதவரு :- பாபனபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நரசாபட்டுதவரு :-
ப்ரெண்டதவரு :-
மதிரெதவரு :- வட மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

46 .சகுனி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அகதுளதவரு :- அகதிகளுக்கு அன்னதானம் செய்தவர். கதியற்றவர்க்கு அன்னதானம் செய்தவர்.
அகரம்தவரு :- அகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அமாவாஸ்யதவரு :- தவறாது அமாவாசை விரதம் இருப்பவர்.
ஊட்ளவாரு :- இயற்கை நீர் ஊற்றுவரும் இடங்களில் வீட்டு தெய்வத்தை வணங்குபவர்.
கெகனதவரு :- ககனம் - ஆகாயம். தவவன்மையால் ஆகாய மார்க்கத்தில் சென்றவர்.
சிவசிவாதவரு :- ஓயாமல் சிவசிவா என முழங்குபவர். சிவபூசனையில் ஊற்றம் மிக்கவர்.
சுரடிதவரு :- சுரடி - சுருட்டைப் பாம்பு - சுருட்டைப் பாம்புக் கடிக்கு மருந்து தந்தவர்.
தந்துலதவரு :- நூல் நூற்றவர். நூல் பற்றி வந்த பெயர்.
பஜனதவரு :- தவறாது பஜனை செய்பவர்.
பெல்லம் கொண்டதவரு :- பெல்லம் கொண்டா என்பது சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருமலை. அதனைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ப்ருகுதேவனதவரு :- ப்ருகு மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
மராபத்தினிதவரு :- ஆந்திராவில் உள்ள மராபத்தினி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குக்கிலதவரு :- குங்கிலியம் என்னும் தூபத் திரவியம் கொண்டு தூபம் இட்டுப் பூசனை செய்பவர்.
ஷட்சக்ரதவரு :- அருகோணச் சக்கரம் இட்டு சுப்ரமண்யர் வழிபாடு செய்பவர்.
விருதுதவரு :- விருதுகள் வென்றவர்.
மங்கலதவரு :- மங்கலமானவர். மங்கல காரியங்கள் செய்து வைப்பவர்.
மல்லூரதவரு :- கர்நாடகத்தில் உள்ள மல்லூர் என்னும் ஊர்க்காரர்.
சின்னகூடதவரு :-
குலும்தவரு :-
கூட்லதவரு :-
சோமகதவரு :- சிவலிங்கத்தின் நடுப்பாகம் போன்ற தட்டம். இத்தட்டத்தில் பொருள்களை வைத்துத் தானம் செய்பவர்.
தீவெனதவரு :-
நூகலதவரு :-
நேரநாதவரு :-
பந்தாதவரு :-
பில்லுலதவரு :-
பொம்மலாட்டதவரு :- பொம்மலாட்டக் கலையில் வல்லவர்.
முந்திதிதவரு :-
முவ்வன்சுதவரு :-
ரெப்பகதவரு :-
ஜீடாதவரு :-
மரதத்திதவரு :-
முசகியவரு :-
சூரடியதவரு :-

47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு ;- சூரியதேவனைப் பூசிக்கும் முறையினையும், சூரிய அர்ச்சனை மந்திரங்களையும் ரிஷிகளுக்குக் கூறியவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ காகுளதவரு :- ஆந்திராவில் உள்ள ஸ்ரீ காகுளம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாகரதவரு :- சாகரம் - சமுத்திரம்; சமுத்திரக்கரை நகரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சன்னுகிடுசுதவரு :-

48 .சதுமுக மகரிஷி கோத்ரம் :

இவர் சதுமுக மகரிஷி என்று அழைக்கப்படுகின்றார். பராசர மகரிஷியின் குமாரர்கள் அறுவருள் இவர் ஒருவர். இவருடைய மற்ற சகோதரர்கள் தத்தன், அநந்தன், நந்தி, பருதிபாணி, மாலி என்போராவார்.

சகோதரர்கள் அறுவரும் சிருபிராயத்தில் முதலை உருக்கொண்டு சரவணப் பொய்கையுள் புகுந்து விளையாடினர். பொய்கையில் இருந்த மீன்கள் சில இறந்து மிதந்தன. பொய்கைக்கு நீராட வந்தார் பராசரர். தம்மக்களின் விளையாட்டைக் கண்டு கோபம் கொண்டார்.

தகாதவை செய்து மீன்களைக் கொல்வித்தமையால் நீர் சரவணப் பொய்கையிலேயே மீன்களாக மாறுவீர் எனச் சபித்தார். தந்தையால் சாபம் பெற்ற அறுவரும் சாபவிமோசனம் வேண்ட, சரவணப் பொய்கையில் குமரக்கடவுள் அவதாரம் செய்வார். அவர் பொருட்டு உலக நாயகியாகிய உமையம்மை தரும் பால் இப்பொய்கையில் சிந்தும். அப்பாலை உண்ண உங்கட்குச் சாபம் விமோசனம் ஆகும் என அருள் செய்தார் பராசரர்.

குமரக் கடவுள் ஆறுதிருமேனிகளுடன் சரவணப் பொய்கையில் திருவிளையாடல் புரிந்தருளினான். மகனை அள்ளி அணைக்க ஆர்வம் கொண்ட பார்வதிதேவியார் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி, ஆறுதிருமேனிகளையும் அள்ளி அணைத்து ஒரு திருமேனி ஆக்கினாள். எனவே அன்று முதல் முருகனும் கந்தன் என்னும் திருநாமம் பெற்றனன். அன்னை அருளுடன் அவனுக்கு ஊட்டிய ஞானப்பால் பொய்கையில் சேர அதனை மீன் வடிவம் கொண்ட அறுவரும் உண்டு சாபம் நீங்கினர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கத்திதவரு :- கத்தி வழிபாடு செய்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு வீரகுமாரர்கள் கத்தி போட்டுக் கொண்டு அலகு சேவை செய்வது மரபு. இக்கத்திகள் புனிதம் வாய்ந்தவை ஆதலின், இன்றும் பலர் பூசனை அறையில் கத்திகளை வைத்து வழிபடுகின்றனர்.
குலபக்திதவரு :- தம்குல பக்தி மிக்கவர்.
புலிபாகலதவரு :- துர்க்கையின் வாகனமான புலி வழிபாடு செய்பவர்.
பூஷணந்தவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் மிக்கவர்.
போகதவரு :- சுகபோகமாக வாழ்பவர்.
முலிகினதவரு :- கோபம் மிக்கவர்.
பூசம்தவரு :- பூச நட்சத்திரத்தில் தவறாது விழா நடத்தி வழிபாடு செய்பவர்.
அட்யம்தவரு, அவன்டதவரு, ஆட்ரதவரு, ஆண்ட்ரதவரு, தும்மினிதவரு, பிசனதவரு, பிச்சினதவரு, புச்சகிஞ்சிதவரு, புச்சலதவரு, ரெட்ளதவரு.

49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் :

பிரம்மதேவனின் பேரர். கௌதம மகரிஷிக்கும் அகலிகைக்கும் பிறந்தவர். இவர் மிகச்சிறந்த தவசி. இவர் தவம் செய்யுங்கால்; எங்கே இந்திர பதவி அடைந்து விடுவாரோ என்று பயந்த இந்திரன் இவர் தவத்தை கெடுக்க ஊர்வசியை அனுப்பினான்.

சதாநந்தரின் மகன் கிருபாச்சாரி, மகள் கிருபி, இக்கிருபியைத் துரோணாச்சாரியார் மணந்து கொண்டார். அஸ்வத்தாமன் என்னும் மகனைப் பெற்றனர் துரோணர் தம்பதிகள். பாரதப் போர் முடிந்த பின்னும் சாகாது இருந்தவர்களுள் கிருபாச்சாரி ஒருவர்.

இராமபிரான் மிதிலைக்குச் சென்ற போது விசுவாமித்திரர் புகழை இராமமூர்த்திக்கும்; ஜனகருக்கு இராமபிரான் புகழையும் கூறியவர் சதாநந்தர். ஜனக மன்னருடைய புரோகிதர் இச்சதாநந்தர். சீதாபிராட்டிக்கு இவர் குலகுரு ஆகிறார்.

சதாநந்தரின் இன்னொரு மகன் சத்தியத்திருதி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹிரேமனெயவரு - இருமனேரு :- பெரியவர்கள்; பெரியவீட்டுக்காரர்கள். புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்த பத்தாயிரம் குழுந்தைகளில் முதல் குழந்தைக்குச் சதாநந்தர் தீட்சை செய்து இருக்கலாம்.

செட்டிகாரரிடம் மரியாதைகள் பெறும்போது மற்ற கோத்ரத்தார் எழுந்து நின்று] மரியாதை பெறுகின்றனர். ஆனால் ஹிரேமனெயவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் சென்று மரியாதை கொடுக்கப்படும் சம்பிரதாயம் மேற்கண்ட கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

வங்குசப் பெயரினையும், சம்பிரதாயத்தையும் இணைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் முதல் குழந்தையின் வம்சாவழியினர் என்பது விளங்கும்.

ஹிரேமனெயவரு என்ற பெயர்தான் இருமனெயவரு என்று மாறியிருக்கின்றது.
அங்கடிதவரு :- அங்கடி - கடை; கடைகட்டி வியாபாரம் செய்தவர்.
அங்கப்பதவரு :- இவ்வங்குசத்தோர் மூத்த மகனுக்கு அங்கப்பன் என்றும், மகளுக்கு அங்கம்மா என்றும் பெயர் சூட்டுவர். அங்கப்பன் என்பவர் வம்சம்.
ஆரேதவரு :- ஆராக்கீரையைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
அம்பட்டிதவரு :- சித்தூர் மாவட்டம் மதபல்லி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர் அம்பட்டி. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அஸ்வபதிதவரு :- ஏராளமான குதிரைச் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டவர். இவ்வங்குசத்தினர் குதிரேனாரு என்ற பெயருடன் தொட்டுபெல்லாபுரத்தில் இன்றும் வாழ்கின்றனர்.
கடிகெலதவரு :- கடகம் என்னும் நகை அணிந்தவர்.
கணபதிதவரு :- விநாயக விரத கல்ப முறைப்படி விரதம் இருப்பவர்.
கோகர்ணதவரு :- கோகர்ண சேஷத்திரத்தைப் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோடம்தவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். தன் செயலாலும் சொல்லாலும் சிரிக்கச் செய்பவர்.
கோடூரிதவரு :- நெல்லூர் ஜில்லாவில் உள்ள கோடூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கௌரீஜனதவரு :- கௌரி தேவியைப் பூசித்து ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்றவர்.
தாராபுரதவரு :- தாராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துர்க்கதவரு :- துர்க்கம் - மலை; மலையைச் சார்ந்து வாழ்ந்தவர். பெட்டதாரு என்று கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது.
கொணபர்த்திதவரு :- சித்தூர் ஜில்லாவில் உள்ள கொணாபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொம்மனதவரு :- பொம்மண்ண சுவாமியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
ராகதவரு :- அம்மன் திருவிழாவில் எடுக்கும் ஜோதிக்கு ராகதீபம் என்று பெயர்.

ராகம் - பிரீதி, ஆசை என்பது பொருள். ஆசையுடன் விரும்பி ஜோதி எடுப்பவர் என்று பொருள்.

நம் குலத்தின் ஆதிபுருஷர் தேவலர். அவர் ஜோதிஸ்வரூபமாக அவதாரம் செய்தார். அதனை எண்ணிப் பார்க்கும் வகையிலும் தேவலப் பரப்பிரம்மத்தினின்றும் சௌடேஸ்வரி என்னும் சிற்ஜோதி பிறந்தது என்று வேதங்கள் முழங்குவதையும் கருத்திற்கொண்டு ஜோதி எடுத்து வழிபடுகிறோம்.

ஹிரேமனெயவரு :- சக்தி

அந்தலதவரு :- எந்தேலாரு - சாமுண்டி

லத்திகார்ரு :- லதாலதவரு - ஜோதி

கப்பேலாரு :- குண்டம்

என சேலம் நகரில் தற்போது நடைமுறை இருந்து வருகின்றது.

ஆனால் ஹிரேமனெயவரு ஜோதி எடுப்பவர்என வங்குசம் வருகின்றது.

ஐந்து கத்திகை மனைகாரர்களில் யார் வேண்டுமானாலும் சக்தி அழைக்கலாம். சாமுண்டி அழைக்கலாம். ஜோதி எடுக்கலாம், குண்டம் மிதிக்கலாம் என்று புலப்படுகிறது.

இவற்றைக் கவனிக்கும் போது கத்திமனைக்காரர்கள் இன்னின்னார் இன்னின்னவற்றைத்தான் அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லையென்று தெரிகின்றது.
உங்குதவரு :- உங்குகிண்ணம் - குழந்தைக்குப் பால் ஊற்றும் கிண்ணம். இவ்வங்குசத்தார் குழந்தைகட்குப் பால் வழங்கும் தருமம் செய்தவர்கள்.
ஹிமத்கேதாரதவரு :- இமயமலையில் உள்ள கேதாரநாத் என்னும் தலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொட்டமனெயவரு :- பெரிய வீட்டுக்காரர். ஹிரேமனெயவரு என்பதுவும் இதுவும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு பெயர்கள்.
பாணிலாறு : - பாணதவரு :- 32 விதமான விருதுகளில் பாணம் ஒன்று.
கர்னாதவரு :- கோகர்ணதவரு என்ற வந்குசம்தான் கர்னாதவரு என்று வழங்கப்பட்டிருக்கிறது.
பதகதவரு :- மன்னர்களிடம் பரிசுப் பதக்கங்கள் பெற்றவர். பதக்கம்என்பது பதகம் என மருவி வந்துள்ளது.
பன்தெனதவரு, பாகடிதவரு, பிடிதவரு, மாடலிதவரு, வாபட்ணதவரு, ஜன்தினதவரு, ஜாதினதவரு, ஜீவகட்டுதவரு, பீரணெயவரு, மாமனியதவரு, சுருகியவரு, சூரிமெயதவரு, அங்கபந்துனிதவரு, இங்குதவரு, கோரஸதவரு, கோரண்டதவரு, கோரேதவரு, தேவசதவரு, பட்டுதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

50 .சங்கு மகரிஷி கோத்ரம் :

இம் மகரிஷி சாங்கியாயன மகரிஷி என அழைக்கப்படுகின்றார். ஓயாது ரிக்வேதம் ஓதிக் கொண்டு இருந்த மகரிஷி இவர். பராசரருக்கும் தேவகுருவான பிருஹஸ்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குடகோலதவரு அ குடிகேலாரு ;- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.

51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொடகியதவரு :- குடகுப் பகுதியில் வாழ்ந்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கரடியதவரு :- கெரடியதவரு என்பது மருவி உள்ளது. கெரடி - சிலம்பு விளையாட்டு. சிலம்பம் ஆடுவதில் வல்லவர். கெரடி வஸ்தாத் என்று இன்று அழைக்கின்றனர்.
ஹசபியதவரு :-

52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சன்னபுலியதவரு :- சிறுத்தைப் புலி பற்றி வந்த ஒரு பெயர். சிறுத்தைப் புலி வேட்டை ஆடி இருக்கலாம்.
வீரதவரு :- வீரதீர பராக்கிரமம் மிக்கவர்.
வீரணதவரு :- அம்மன் திருவிழாக்களில் வீர்முஷ்டிக வேடம் தரிப்பவர்.
அஸ்வவைத்யதவரு :-
தம்பூரதவரு :-
சங்சாவிளபிதவரு :-
நுன்னுதவரு :-

53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் :

இவர் பிரம்மாவின் குமாரர். விஷ்ணுவின் அம்சம். யோகத்தில் ஆநந்தம் கொண்டவர். சநகருக்குச் சகோதரர். இக்கோத்ரத்தைச் சநாகரதேவ மகரிஷி கோத்ரம் எனவும் வழங்குகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பெள்ளுள்ளிதவரு :- உள்ளி - வெங்காயம். பெள்ளுள்ளி - வெள்ளை வெங்காயம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.

54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் :

இவர் ஸ்ருங்கி ரிஷியாவார். சேலத்தில் கடுபுலதவரு என்னும் கடுபேலாரு தங்களைச் சந்திர மகரிஷி கோத்ரம் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் சந்திர ஜடாதர மூர்த்தியையும் சந்திரனையும் வழிபடும் பழக்கம் கொண்டு இருக்கின்றனர். சந்திரஜடாதரனை; சந்திரன் வழிபடுவதால் தங்கள் ரிஷியும் அவரே என எண்ணி இருக்கலாம். இக்கோத்ர ரிஷி கலைக்கோட்டு மாமுனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்கர் ஆவார்.
மகரிஷியின் வரலாறு ஸ்ருங்கி மகரிஷி கோத்ரத்தில் காண்க. இம் மகரிஷியும் ஸ்ருங்கி ரிஷியும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடுபேலாரு :- கடுப்பு - வயிறு. வயிறு பற்றி வந்த ஒரு பெயர்.
சன்னமொசலிதவரு :- தெலுங்கில் முதலைக்கு மொசலி என்று பெயர். இவர்கள் மகராசனம் இட்டு யோகம் செய்வார்கள்.
கூர்மதவரு :- கூர்மாவதாரத்தை வழிபடுபவர்.
கொஜ்ஜம்தவரு :- கொஜ்ஜனதவரு என்பது மருவி கொஜ்ஜம் என வழங்குகின்றது. ஆந்திராவில் உள்ள கொஜ்ஜனம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தர்மபுரம்தவரு :- அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நந்தவரம்தவரு :- ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் நந்தியால் தாலுக்கா பானியம் புகை வண்டி நிலையத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ள ஓர் ஊர் நந்தவரம்.
" சௌடேஸ்வரி நின்னு சாலபூஜலு சேய " என்னும் தண்டகத்தில் " நந்தவரமந்து நெலெ கொன்ன நைகதாம்ப " என்று நந்தவரம் என்னும் ஊர் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
நரசிம்மதவரு :- நரசிம்மமூர்த்தியை வழிபடுபவர்.
பாரததவரு :- மஹாபாரதத்தில் வல்லவர். பாரதப் பிரசங்கம் செய்பவர்.
பர்வத வஸ்திராலதவரு :- பர்வதம் எனில் ஸ்ரீ சைலம். ஸ்ரீ சைலத்திற்குக் கொடித் துணி நெய்து கொண்டு செல்லும் திருப்பணி செய்பவர்.
குறிப்பு : - ஒரு முழ அகலத்தில் தினம் ஒரு முழமாக நெய்து 365 நாட்களில் 365 முழம் நெய்து முடித்து அதனை எடுத்துக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொடித்துணியாக வழங்குபவர். தேவாங்கரின் ஏழாவது அவதாரம் முதற்கொண்டு இன்றளவும் இத்திருப்பணி நடைபெறுகின்றது.
மாணிக்யதவரு :- மாணிக்க நகை அணிபவர். மாணிக்க வியாபாரம் செய்தவர்.
ருத்திராட்சினவரு :- குடும்பத்தில் ஆண் பெண் இருபாலரும் ருத்திராட்சம் தரிப்பவர்.
ஷடாட்சரிதவரு :- ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பவர். சுப்ரமண்ய சுவாமியை வழிபடுபவர்.
அந்தெலதவரு, அந்தேதவரு, தவனதவரு, துஸ்ஸாதவரு, தூஸெம்தவரு, நுன்காதவரு, பீரதம்தவரு, ஜினகதவரு.

55 .சம்பு மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜானதவரு :- கீர்த்தி உடையவர். அறிவு நுணுக்கம் உள்ளவர்.
அங்கதவரு :-

56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அனந்ததவரு :- அநந்த பத்மநாப சுவாமியை வழிபடுபவர். அநந்தன் - ஆதிசேஷன். அவன்மீது பள்ளிகொண்டபெருமாளை வணங்குபவர்.
தம்பதிதவரு :- வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் தம்பதிபூசனை செய்து, அவர்களுக்கு வேண்டியனவற்றைத் தான தர்மமாக வழங்குபவர்.
போளெம்தவரு :-

57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உக்கந்ததவரு :- ஆந்திராவில் உள்ள உக்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

58 .சர்வ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சக்ராலதவரு :- உடம்பில் சங்கசக்ர தரிப்பவர். இவர்களின் சமாதியிலும் சக்கர ஸ்தாபனம் செய்யப்படும்.

59 .சவித்திர மகரிஷி கோத்ரம் :

காசியப பிரஜாபதிக்கு அதிதி தேவியிடம் அவதரித்த பன்னிருவரில் ஒருவர்.
1). தாதை 2). மித்ரன் 3). அர்யமான் 4). சுக்ரன் 5). வருணன் 6). அஞ்சுமான் 7). பகன் 8). விலச்வந்தன் 9). பூஷன் 10). சவித்திரன் 11). துவஷ்டா 12). விஷ்ணு எனப்பன்னிருவர்.
இவர்கள் ஆதிதேயர் எனவும் ஐயர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
பிரஜைகளைச் சிருஷ்டிப்பதற்காகப் படைக்கப்பட்டு ஆனால் அதில் ஈடுபடாமல் தவத்திலேயே கருத்து செலுத்திய உத்தமர்கள் இவர்கள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கட்டாரியதவரு :- கட்டாரி - குறுங்கத்தி வழிபாடு செய்பவர். கட்டாரியை எப்போதும் தரித்து இருப்பவர்.
கூபதவரு :- கூபம் - கிணறு. கிணறு வெட்டித் தந்தவர். தண்ணீர்த் தானம் செய்தவர்.
ஆலபல்லியதவரு :- ஆந்திராவில் உள்ள ஆலபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் :

சனக சனந்த, சனத்குமார மற்றும் சனத்து ஜாத ஆகிய இம்மூன்று மகரிஷிகளும் பிரம்மாவின் குமாரர்கள்.

1) சனகர்
2) சனந்தனர்
3) சனத்குமாரர்
4) சந்தஜாதர்

என நால்வரும் பிரம்மாவின் பிள்ளைகள்.இவர்களே சனகாதி முனிவர்கள் என்று அழைக்கப்படுவர். இங்கு 60 எண்ணுள்ள கோத்ரத்தில் சனக சனந்த என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய நூல் ஒன்றில் வந்த பிழை.

இது சனக மகரிஷி கோத்ரம் சனந்தன மகரிஷி கோத்ரம் எனத் தனித்தனியே இருக்க வேண்டும்.

பிரம்ம தேவனின் படைப்பும் பத்து விதங்களாம். அவை;
1) மஹத்
2) அகங்காரம்
3) தன்மாத்திரை
4) இந்திரியங்கள்
5) வைகாரிக தேவதைகள் - மனஸு
6) ஐந்துவகை தாமஸிக சிருஷ்டி
7) தாவரங்கள்
8) மிருகங்கள்
9) மனிதர்
10) குமாரர்கள்
என்பனவாம்.

இந்தத் தாமஸிக சிருஷ்டி பிரும்மாவின் விருப்பப்படி இல்லை. எனவே அவர் தம் மனதைச் சுத்தப்படுத்தித் தியானம் செய்தார். மனத்தூய்மையுடன் பிரும்மா இருந்த போதுதான் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்ஜாதர் என்னும் நால்வரும் உதித்தனர்.

இவர்கள் வினைக்கருமங்களுக்கு உட்படாதவர்களாய் இருந்தனர். இவர்களால் பிரஜா சிருஷ்டி ஏற்படவில்லை. பிரம்மா இவர்களைப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டியும் இவர்களின் மனம் மோட்ச மார்க்கத்திலேயே ஈடுபட்டு விட்டது.

இந்நால்வரும் இயற்கையாகவே மாபெரும் ஞானிகள். ஜீவன்களுடைய புத்தியை ஞானமார்க்கத்திற்குத் திருப்புபவர்கள். மகா யோகிகள் ஸ்வபாவ பிரமச்சாரிகள். இவர்களுக்குத்தான் கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தியாக இருந்து சிவபிரான் சின்முத்திரை மூலமாக ஞானபோதகம் உபதேசித்தார்.

ஒரு காலத்தில் இந்நால்வரும் மஹா விஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். ஏழாவது வாயிலில் ஜயன் விஜயன் என்ற துவார பாலர் தடுக்கவே கோபங்கொண்டு அவர்களைச் சபித்தனர்.

சாபம் பெற்ற ஜயனும் விஜயனும் தான்

1) ஹிரண்ய கசிபு - ஹிரண்யாக்ஷன்
2) இராவணன் - கும்பகருணன்
3) சிசுபாலன் - தந்தவக்ரன்

என்ற மூன்று பிறவிகள் எடுத்துப் பின் பகவானால் சங்கரிக்கப்பட்டு வைகுண்டம் சேர்ந்தனர். சிவபுராணங்களில் துருவாசர் சபித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

கூர்மபுராணம், வான்மீகி இராமாயணம், பாரதம், லிங்கபுராணம் ஆகியனவற்றில் இவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொல்லம்தவரு :- வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள பொல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மங்களம்தவரு :- பெஜவாடா அருகில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பானகாலு நரசிம்ம ஸ்வாமி வீற்றிருக்கும் மலை இம்மலை. ஸ்வாமிக்குப் பானகம் கொண்டு வருவதாக வேண்டிக் கொள்கின்றார். அதனால் பானகாலு நரசிம்மஸ்வாமி என்று திருநாமம்.
சாலமனெயவரு :- தெலுங்கில் தாழ்வாரத்திற்குச் சால என்று பெயர். இது கன்னடத்தில் சாளை என்று வழங்கப்படுகின்றது. இது பற்றி வந்த ஒரு பெயர்.
குபேரதவரு :- முதல் மகனுக்குக் குபேரன், குபேந்திரன் என்ற பெயர் வைப்பவர்கள் வருஷம் இரண்டு முறை குபேரஜயந்தி கொண்டாடுபவர்.
சன்முகியவரு :- பஞ்சமுகங்கள் கொண்ட காயத்ரியுடன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு ஒரு முகமாக ஆறுமுகங்கள் படைத்துப் பூசனை இயற்றுவது இவர்கள் வழக்கம்.

61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் :

60. சனக சனந்த மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சின'வரு :- ஸ்ரீ கன்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாவுராயலதவரு :- புளுவிற்குத் பாவுராயலு என்று பெயர். புறாவிற்குத் தீனி முதலியன தந்தவர். ஜீவகாருண்யம் மிக்கவர்.
பன்திபூவ்வுலதவரு :-
மாசிப்பத்ரிதவரு :- மாசிப்பத்ரி இலையால் பூசனை செய்பவர்.

62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் :

60. சனக சனந்த மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அரவிந்ததவரு :- அரவிந்தம்-தாமரை. தாமரை மலர் கொண்டு பூசிப்பவர்.
அநந்ததவரு :- அநந்த பத்ம நாப சுவாமியையும் அநந்தனையும் பூசிப்பவர். அநந்தன் - ஆதிசேஷன்.
கோரண்டலதவரு :- கர்நாடகத்தில் உள்ள கோரண்டலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சீதாங்கனதவரு :- அங்கன = பெண்; சீதாதேவியை வழிபடுபவர்.
சோமுகதவரு :- சிவலிங்கத்தின் நடுப்பாகத்திற்குச் சோமுகம் என்று பெயர். சோமுகத்தில் லிங்கம் வைத்தோ அ சாளக்கிராமம் வைத்தோ பூசிப்பவர். இது சோமுகத்தட்டம் எனப்படும். இவர்கள் எந்தத் தானம் செய்தாலும் இத்தட்டில் வைத்துத்தான் தானம் செய்வார்கள்.
தப்படிதவரு :- தப்பு என்னும் வாத்தியம் முழங்கப் பூசனை செய்பவர். தாசர்கள் இவ்வாத்தியத்தினைத் தம் கக்கத்தில் வைத்து வாசிப்பர். இவர்கள் தப்பு வாசிக்கும் தாசர்களாக இருக்கலாம்.
அரளம்தவரு, போளெம்தவரு, அலசதவரு, வும்மடிதவரு

63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஷ்டகுலதவரு :- எட்டாவது குலத்தைச் சார்ந்தவர்.
கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே உள்ள வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாளபத்ரதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை; இது பற்றி வந்தவொரு பெயர்.
நக்கலதவரு :- தந்திரம் மிக்கவர்.
பாபடதவரு :- வகிடுவைத்தவர். இப்பெயர்தான் இன்று பாப்டெ என்று அழைக்கப்படுகின்றது.

64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் :

ரிக்வேதம் ஓதிய மகரிஷி. பராசருக்கும் தேவ குருவான பிருஹஸ்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர். இவரைச் சங்கு மகரிஷி என்றும் அழைக்கின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குடகோலதவரு - குடிகேலாரு :- இப்பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர்.
இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வீட்டில் வைத்து இருக்கலாம். அல்லது குடகோலிகளைத் தயாரித்து வியாபாரம் செய்து இருக்கலாம்.
உம்மிடிதவரு :- ஆந்திராவில் உள்ள உம்மிடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கற்பூரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கும், மற்ற ஆலயங்களுக்கும் கற்பூரம் கொடுக்கும் தொண்டு செய்தவர்.
கொண்டவன்தவரு :- இருமலைகளுக்கு இடையே இருக்கும் மலைவளைவுகள் சந்துகள் இவற்றினுக்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
செங்கல்வதவரு :- பூசனைக்குக் குறிப்பாக செங்கல்வ மலர்களைப் பயன்படுத்துபவர்.
மோஹனதவரு :- பாசம் மிகுந்தவர், அன்பு கொண்டவர்.
பூரணயதவரு :- இவ்வம்சத்தில் பூரணய்யா என்பவர் புகழ் பெற்று இருந்து இருக்கலாம். அவருடைய வம்சம்.

65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- மரீசி மகரிஷியின் புத்திரர் காசியபர். இக் காசியபருக்கு அக்நியிடமாகப் பிறந்த மகன் இவர். இவரால் செய்யப்பட்டது சாண்டில்ய ஸ்மிருதி ஆகும். தான்யமாலி என்பானை முதலையாகச் சபித்தார். அநுமனால் சாபம் விலகும் என அருள் செய்தார். சஞ்சீவிமலையின் பொருட்டு வந்த அநுமன் காலினை இவன் பற்றி இழுக்க அநுமனால் சாபவிமோசனம் பெற்றான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தியகுலதவரு :- பத்தாயிரம் குலத்தாரில் கடைசிகுலத்தார் இவர்கள்.
அர்க்ககுலம்தவரு :- அர்க்கம் - சூரியன். சூரியனைக் குலதெய்வமாக இஷ்டதெய்வமாகக் கொண்டவர்.
கண்டதவரு :- கண்டம் - கழுத்து. கழுத்தில் ருத்திராட்சம் கட்டிக் கொள்பவர்.
குடகுதவரு, கெடகுதவரு, குடகுநாடுதவரு :- குடகுநாட்டுப் பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குண்டம்தவரு :- நாள்தோறும் அக்நிகுண்டம் வளர்த்து யாகம் செய்பவர். அம்மன் திருவிழாவில் அக்நிகுண்டத்தில் இறங்கும் உரிமை பெற்றவர்.
கூர்மாதவரு :- கூர்மாவதாரத்தை இஷ்டதெய்வமாக, வீட்டு தெய்வமாகக் கொண்டவர்.
கொணபுலதவரு :- கொணபுலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பதவரு :- மரக்கிளையை நட்டு அதன் அடியில் வழிபாடு செய்பவர்.
சகஸ்ரதவரு :- சகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர். ஆயிரத்தில் ஒருவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித்திலகம் இட்டுக் கொள்பவர்.
தொண்டதவரு :- கர்நாடகத்தில் உள்ள தொண்டபாலி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தோடாதவரு :- கைகளில் தங்கத் தோடா அணிந்தவர்.
மெட்ளதவரு :- கால்விரலில் மெட்டி அணிந்தவர்.
நெடுமாமடிதவரு :- கர்நாடகாவில் உள்ள நெடுமாமடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நிர்மலதவரு :- தூயமனம் கொண்டவர்.
பெஜவாடதவரு :- பெஜவாடா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மரகலபுரதவரு :- மரகலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மிடதலதவரு :- மிடதலம் = பாச்சை - இதனைக் கன்னடத்தில் ஜிரளை என்று அழைப்பர். மிடதலத்தினைப் போன்ற உடல் நிறம் கொண்டவர்.
முரகலதவரு :- முரகலம் ஒருவகைக் காது அணி. அதனை அணிந்தவர்.
லலாடதவரு :- விசாலமான நெற்றியுடையவர்.
வும்மட்டிதவரு :- வரிக்குருமத்தங்காய் கொண்டு பல வைத்தியம் செய்பவர்.
ஜடாதவரு :- ஜடா ஒரு வகை மூலிகை - அதனைக் கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்.
அஸ்வதவரு :- குதிரைச் செல்வம் மிக்கவர். அநேக குதிரைகளுடன் வாழ்ந்தவர். குதிரை வாகனம் கொண்டவர்.
பொங்கலதவரு :- ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனுக்குப் பொங்கலிட்டுப் பூசித்தவர்.
ஹொன்னுகளசதவரு :- தங்கக் கலசம் வைத்து பூசிப்பவர்.
காப்பூரதவரு, நிடிகோத்ரிம்தவரு, படுகுதவரு, தொந்தாதவரு, பகுதவரு, பரடிதவரு, பங்குலதவரு, பரமெட்டிதவரு, மடமிதவரு, பும்மடிதவரு.

66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- எல்லோருடைய பாவங்களையும் நீக்கும் ஒரு விரதம் சாந்திராயண விரதம். இவ்விரதத்தினை உலகினுக்கு எடுத்து ஓதியவர். இம்மகரிஷி. எனவே இவ்விரதம் இவர் பெயராலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. தானும் இவ்விரதத்தை நன்கு அனுஷ்டித்தார்.

சந்திராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறை :- கிருஷ்ணபட்சத்தில் முடிநீக்கிச் சவரம் செய்து கொள்ள வேண்டும். வெள்ளை வஸ்திரம் உடுத்துக் கொண்டு முஞ்சைப்புல் அரைஞாண் கட்டிக் கொள்ள வேண்டும். பிரம்மச்சரிய விரதத்தைக கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். வளர்பிறை பிரதமை முதல் விரதத்தைத் தொடங்க வேண்டும். பலாசமரத்தால் செய்த தண்டத்தை ஏந்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் அக்நியைவைத்து அதில்

1) ஆகாரம்
2) ஆஜ்யபாகம்
3) பிரணவம்
4) வ்யாஹ்ருதி
5) வாருணம்

என்னும் பஞ்ச ஹோமங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின்
1) சத்யம்
2) விஷ்ணு
3) பிரும்மரிஷி
4) பிரும்மா
5) விச்வதேவர்
6) பிரஜாபதி
என்னும் ஆறு ஹோமங்கள் செய்து அதன்பின் பிராயச்சித்தஹோமம் செய்து அதற்கடுத்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்விதம் பதின்மூன்று ஹோமங்களினால் அக்நிகாரியம் செய்து முடித்து, அக்நிஸோமனை வணங்கி ஸ்நாநம் செய்து அனுட்டானங்களை முடித்துக் கொண்டு கைகளைத் தூக்கிச் சூரியனைப் பார்க்க வேண்டும். பின் இருகைகளையும் குவித்துப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ருத்ரசூக்தம் - விஷ்ணு சூக்தம் - பிரம்ம சூக்தம் என்னும் இவற்றில் ஒன்றனையாவது அல்லது வேறு சூக்தங்களில் ஒன்றனையாவது 100 அல்லது 1000 முறை ஜெபிக்க வேண்டும்.

நண்பகலில் பொன் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம், தாமிரப் பாத்திரம், மண் பாத்திரம், அந்திமரப் பாத்திரம் என இவற்றில் ஒன்றில் ஏழு வீடுகளில் மௌனமாய்ப் பிட்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழு உருண்டைகள் செய்து

1) சூரியன்
2) பிரம்மன்
3) அக்நி
4) ஸோமன்
5) வருணன்
6) விச்வே தேவர்கள்

இவர்களுக்குக் கொடுத்து மிகுந்த ஒரு உணவு உருண்டையை வளர்பிறையில் சிறிது சிறிதாகப் பெரிதாக்கியும் தேய்பிறையில் சிறிது சிறிதாகச் சிறிதாக்கியும் உண்ணல் வேண்டும் என்பது இவ்விரத விதியாகும். இது பாவநீக்கத்திற்குக் குறிக்கப்பட்டது.

இவ்விரதம் இம்முனிவர் பெயரால் சாந்திராயண விரதம் எனவும் சந்திரனின் வளர்ச்சி தேய்தல் போல உணவினை வளர்த்தும் சுருக்கியும் செய்யப்படுகிறதாதலின் சாந்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சகுணதவரு :- சகுணம் சொல்வதில் வல்லவர். இதனைச் ச+குணம் எனப்பிரித்தால் நற்குணம் நிரம்பியவர் என்று பொருள்படும்.
ரஜததவரு ;- ரஜதம் = வெள்ளி, வெள்ளி வணிகம் செய்தவர்.
மதஞ்சாராதவரு :- சைவம், வைணவம் என எம்மதத்தையும் சாராமல் அனைத்தையும் சமரசமாகக் கொண்டவர். சகல மதங்களின் சாரத்தை அறிந்தவர்.

67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் :

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆரம்பக் கல்வியைக் கட்பித்தவரும் பாரதப் போருக்குப்பின் உயிருடன் இருந்தவருள் ஒருவருமான கிருபாச்சாரியின் தந்தை சாரத்வந்து மகரிஷி. இவருடைய மகள் கிருபி என்னும் கற்பரசி. அவ்வம்மையைத் துரோணாச்சாரி மணந்து கொண்டார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மான்யதவரு :- அரச மான்யம் பெற்றவர்கள்.

68 .சாரரத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொண்டக்கனதவரு :- கொண்டக்கா என்னும் புகழ் பெற்ற பெண்மணியின் வம்சம். இவ்வம்மை குலத்தலைமை ஏற்றதால் வந்த பெயர். கொண்டா=மலை. மலை போல் உறுதியுடன் இருந்து எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் குலத்தைக் காத்தமையால் இப்பெயர் வந்தது.
இன்றும் பலர் இவ்வம்மையின் நினைவாகத் தங்கள் பெண் குழந்தைகட்கு "கொண்டக்கா" என்று பெயர் சூட்டுகின்றனர்.

69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் :

அரக்கு மாளிகையில் இருந்து தன் தாயையும் சகோதரர்களையும் பீமன் காப்பாற்றிக் கொண்டு இடும்ப வனத்திற்கு வந்தான். இவ்விடும்பவனத்திற்கு அடுத்தவனம் சாலிஹோத்ரவனம். இவ்வனம் இம்முனிவர் பெயரால் வழங்கப்பட்டது. இவ்வனத்தில் சாலிஹோத்ர மகரிஷியிடம் சிலநாள் தங்கி இருந்து பாண்டவர் அவரிடம் பல தருமங்களைக் கற்று உணர்ந்தனர். சாலிஹோத்ர முனிவரால் உண்டாக்கப்பட்ட ஒரு தடாகத்தில் பாண்டவர்களையும் குந்தியையும் ஆறுமாதகாலம் மறைவாக வசிக்கச் சொன்னார் வியாசர். இத்தடாகம் பசி, தாகம், களைப்பு முதலானவற்றை நீக்கும் என்று அதன் பெருமையை வியாசர் கூறினார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அரசம்தவரு :- அரசாண்டவர்கள்.
அல்லம்தவரு :- அல்லமாதேவியை வீட்டுதெய்வமாக வணங்குபவர்.
கனகதவரு :- கனகாபரணம் பூண்டவர். தங்கம் போன்ற குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர்.
சங்குதவரு :- சங்கு வைத்து பூசனை செய்பவர்.
பொன்னபுவ்வலதவரு :- புன்னைப்பூக்கொண்டு பூசிப்பவர்.
சுங்குதவரு, பீரம்தவரு.

70 .சானக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கட்டம்தவரு :- ஹோமத்திற்குச் சமித்துக்கள் தருபவர்.
கோரங்கதவரு :- கன்னட நாட்டில் உள்ள கோரங்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாலதவரு :- சந்தான கோபால சுவாமியை வணங்குபவர்.
மோபூருதவரு :- கோதாவரி மாவட்டத்தில் உள்ள மோபூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வார்த்தாகாவிவாரு :- செல்லணி, பொருளணி என்ற இருவகை அணிகளில் சொல்லணி பாடுவதில் வல்லவர். சித்ரகவி பாடுபவர்கள். தேனுகாபந்தம், ரிஷபபந்தம் போன்ற கவிகள்.
லக்கெனதவரு, பயள்ளதவரு, நின்ட்னதவரு.

71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சீரியதவரு ;- கர்நாடகாவில் உள்ள சீரிய என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துண்டதவரு ;- துடுக்குத்தனம் நிறைந்தவர்.
புட்டாலதவரு ;- கர்நாடகாவில் உள்ள புட்டால பட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூஷணதவரு ;- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர்.
மைத்ரேயிதவரு ;- மைத்ரேய மகரிஷியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
முடுகிதவரு ;- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் செய்கின்றனர்.
குல்லுபத்திதவரு, பிரிணதவரு, புண்டகுத்திதவரு, ரத்காரதவரு.

72 .சிருக்க மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி சிருங்கி மகரிஷியாக இருக்க வேண்டும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு ;- உறுதியான தன்மை கொண்டவர்.
மாவந்திதவரு :-

73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் :

விபண்டக மகரிஷியின் குமாரர் இம்மகரிஷி. வேதம் எனும் கொடி தன் மீது படர் கொழுகொம்பாக இருந்தவர். வேதங்களில் மிகவும் வல்லவர். சிறந்த தவசி. இவர்க்குத் தலையில் மான் கொம்பு ஒன்று முளைத்து இருந்தது. மான் வயிற்றிலிருந்து பிறந்தார்.

சிருங்கம் = மான்.

அங்க நாட்டை உரோமபாத மன்னன் அரசாண்டு வந்தான். அவன் நாட்டில் மழை இன்றிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ரிஷ்ய சிருங்கர் அங்க நாட்டில் காலடிவைத்தால் மழை பொழியும் என்று கூறினர். தவசிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் இம் மகரிஷி அவரை எப்படி அழைத்து வருவது என்று புரியாமல் அனைவரும் தடுமாறி நின்றனர்.

இரண்டு வேசையர் அப்பெரும் பணியை ஏற்றனர். தவசிகளைப் போன்ற வேடம் இட்டனர். விபண்டகமுனிவர் இல்லாத நேரம் பார்த்து ரிஷ்ய சிருங்கரின் ஆசிரமம் சென்றனர். ரிஷ்ய சிருங்கர் இவர்களைத் தவசியாக எண்ணி வரவேற்றார். நன்றாக உபதேசித்தார்.

இங்ஙனமே விபண்டகர் இல்லாத நேரம் பார்த்து ஆசிரமம் சென்று ரிஷ்ய சிருங்கரின் நட்பினைப் பெற்றனர். அவரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆயினர்.

தம் ஆசிரமத்திற்கு வருகை தந்து தம் உபசரிப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினர் போலித்தவசிகள். ரிஷ்ய சிருங்கர் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் கிளம்ப அவர்கள் முனிவரை அங்க நாட்டு எல்லைக்குள் அழைத்துச் சென்றனர்.

முனிவரின் திருவடிப்பட்டவுடன் நாடு மலிய மழை பொழிந்தது. உரோ'மபாதன் முனிவரின் வருகையைப் பெய்த மழையால் உணர்ந்தான். முனிவரைத் தன் நாட்டு எல்லையில் வரவேற்றான். வேசையரின் சூழ்ச்சியை எண்ணி சினம் கொண்ட அவரை மன்னன் சமாதானப்படுத்தினான். பெருமானே! தங்கள் வருகையால் இந்நாட்டு மக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் மழை பெற்று உயிர் பிழைத்தனர் என்று பணிந்த மன்னனை மணம் மகிழ்ந்து ஆசிகள் வழங்கினார் முனிவர். அரண்மனைக்கும் விஜயம் செய்தார்.

உரோமபாதன் தன் வளர்ப்பு மகள் சாந்தையை முனிவருக்கு மணம் முடித்துத் தந்தான். இச்சாந்தை தசரத மன்னரின் மகள். இப்பெண்ணை உரோமபாதன் தத்தெடுத்து வளர்த்து வந்தான்.

தசரத மன்னன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ரிஷ்ய சிருங்கரை அழைத்துச் சென்றான். ரிஷ்ய சிருங்கர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய அதனால் இராமன், பரதன், இலக்குவன் சத்ருக்கனன் ஆகியோர் பிறந்தனர் என்பன போன்ற வரலாற்றினை இராமாயணத்துள் காணாலாம்,

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு :- உறுதி உடையவர்.
கடுபுலதவரு :- இப்பெயர்தான் கடுபேலாரு என்று வழங்கப்படுகின்றது. கடுப்பு என்றால் தெலுங்கில் வயிறு. இதனைப்பற்றி வந்த ஒரு பெயர்.
குக்கிள்ளதவரு :- அவரை முதலிய நவதான்யங்களைச் சுண்டலாகச் செய்து நிவேதனம் செய்பவர்.
சந்தாதவரு :-
துக்குலதவரு :- துக்குக்கெச்சாள. துக்கு வியாபாரம் செய்தவர். - கெச்சாள வியாபாரம் செய்தவர்.
புட்டாதவரு :-
பூடிதவரு :- சென்னைக்கு அருகில் உள்ள பூடி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
முச்சளதவரு :-
கட்டியதவரு :-
காடலதவரு, சல்லாதவரு, ரூகலதவரு, கண்டுபலதவரு, மாசந்ததவரு, முகலிதவரு, குன்ச்சதவரு, மாடதவரு, கடபியதவரு - கடப்பா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர், குக்கேதவரு, முவ்வலதவரு.

74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அல்லகதவரு :- அல்லகம்=பின்னல்; சொற்களை மேலும் மேலும் பின்னிச் சொல்லும் ஆற்றல் உள்ளவர்.
தாராதவரு :- தாரா தேவியைப் பூசிப்பவர்.
பஞ்சார்த்திதவரு :- ஐந்து திரி போட்ட பஞ்சார்த்தி கொண்டு வழிபடுபவர்.
துத்தூரபுஷ்பம்தவரு :- சிவனுக்குப் பரீதியான ஊமத்தை பூக்கொண்டு வழிபடுபவர்.
ரேல்லகதவரு :- ரேல்லகம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வல்லலதவரு :-
ஹெபனதவரு :-

75 .சுக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- இவர் வேத வியாசரின் குமாரர். வேதவியாசருக்கு அரணியிடமாகப் பிறந்தார். பிறந்தவுடன் மகா ஞானியாய்ப் பிரம்ம ஞானியாய் இருந்தார். நாரதமா முனிவர் இவர்க்கு மேலும் ஞானோபதேசம் செய்தார்.

முழுஞானம் பெற்ற இவர் சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார். இவரின் பிரிவு தாங்காத வியாசர் மகனே! மகனே! என்று அழைத்துப் பின் செல்ல தாவரங்கள் அனைத்தும் ஏன்? ஏன்? என்று பதில் கூறின. எனவே சுகப்பிரம்மம் அனைத்திலும் வியாபித்து இருக்கின்றார் என்று அறிந்தார் வியாசர்.

தந்தையைக் காட்டிலும் தவவன்மை மிக்கவர் சுகப்பிரம்மம். சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.

வியாசரும் சுகரும் ஒருமுறை நதிக்கரை வழியே சென்று கொண்டு இருந்தனர். நதியில் தேவப்பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். முன்னால் சென்ற சுகமகரிஷியைக் கண்டும் கவலையின்றி நீராடிய தேவப்பெண்கள் பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.

இதனைக்கண்டு வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார். என்மகன் வாலிபன், அவனைக்கண்டு வராத வெட்கம் கிழவனான என்னைக்கண்டு உங்களுக்கு வந்ததேன் என்று கேட்டார்.

சுவாமி! அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண் பெண் என்னும் வேறு பாடுகள் உமக்குத் தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்கமுற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.

எனவே அனைத்திலும் பிரம்மத்தைத் தரிசிக்கும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காருபா்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபா்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அரணியதவரு :- அரணி - நெருப்பு, நாள்தோறும் தவறாது யாகம் செய்பவர்.
கங்காதவரு :- கங்கா தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
கண்டசரதவரு :- கண்டம் - கழுத்து. கழுத்தில் சரம் அணிந்தவர். கண்டசரம் என்னும் அணியை அணிந்தவர்.
குடிகலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
குர்ரம்வாரு :- குர்ரம்-குதிரை. குதிரைச் செல்வம் மிக்கவர். குதிரை வாகனம் உடையவர்.
கெரடிதவரு :- சிலம்ப விளையாட்டிற்குக் கெரடி என்று பெயர். சிலம்பத்தில் வல்லவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். விருதுகளில் ஒன்றாக பிற்காலத்தில் துப்பாக்கியும் சேர்க்கப்பட்டது.
நாகப்பதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். நாகப்பன் என்பவர் வம்சாவளியினர். குடும்பத்தில் முதல் மகனுக்கு நாகப்பன் என்றும் முதல் மகளுக்கு நாகம்மா என்றும் பெயர் சூட்டுபவர்கள்.
நேபாளதவரு :- நேபாளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
அரசணதவரு :- மஞ்சள் நிறம் உடையவர்.
கங்காதரதவரு :- கங்காதரனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
கல்யாணதவரு :- மங்களமானவர். மங்கள காரியங்களைத் தர்மமாக நடத்திக் கொடுப்பவர்.
கர்ஜினைதவரு :- மேக முழக்கம் போல் கர்ஜிப்பவர். பேசினால் கர்ஜினையாக இருக்கும்.
தசிமாணிக்யதவரு :- மாணிக்கம் முதலான ரத்தின நுணுக்கங்கள் உணர்ந்தவர்.
வாசிதவரு :- வாசியோகம் கற்றவர்.
முத்துதவரு :- முத்து நகை அணிபவர்.
ராகதவரு :- ராகதீபம் எடுப்பவர்.
மேளதவரு :-
நெரதாதவரு :- நிர்ணயம் தவறாதவர்.
பில்லளதவரு :- அதிகமான மக்களைப் பெற்று வாழ்ந்தவர்.
ப்ருத்திவிதவரு :- பிருதிவியை - மண்ணை வணங்குபவர்.
மரளிதவரு :- மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாதனதவரு :- செல்வந்தர்களாக வாழ்ந்தவர்.
இந்தனதவரு :- யாகத்திற்குச் சமித்துக்கள் கொடுத்தவர்.
வ்ராசேட்டிதவரு :- சித்திரக்கலை வல்லவர்.
அரகணதவரு :- அரகணதவரு என்பது அரசணதவரு என்றும் வழங்கப்படுகிறது.
கராதவரு, கெட்யம்தவரு, கரதிலம்தவரு, சண்டாதவரு, சினகூடதவரு, நிடதலதவரு, பக்குலதவரு, பம்மிதவரு, பெக்குலதவரு, முசலிதவரு.

76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் :

சுகம்=கிளி; சுகோத்பவர் எனில் கிளியிடம் தோன்றியவர் என்று பொருள். எனவே இந்த மகரிஷி; சுக மகரிஷியே யாவர். எனவே இவ்விரண்டு கோத்ரங்களும் 75ம் - 76ம் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காமவார்த்ததவரு :- கேட்பவர் ஆசைப்படும் வண்ணம் பேசுபவர்.
சிருங்கிதவரு ;- சிருங்கி மகரிஷியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப்பூனையை வளர்த்துப் புனுகு தந்தவர்.
போதனதவரு :- மற்றவர்களுக்குச் சத்விஷயங்களைப் போதிப்பவர்கள்.

77 .சுத்மல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அயில்லதவரு :- அயிலு - சிறுபெண்; பெண் குழந்தைகளைத் தெய்வமாகப் பாவித்து பூசனை செய்பவர்கள்.

78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறும், இக்கோத்திரத்தினுள் காணப்படும் கரீபைசனதவரு, பிச்சனதவரு, பிஜ்ஜலதவரு என்னும் மூன்று வங்குசங்களுக்கும் விவரம் புலப்படவில்லை.

79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் :

நரசிம்ம மூர்த்தியின் பூஜா விதிகளைக் கேட்டு மேன்மை பெற்றவர். மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உங்கரதவரு :- உங்கர - மோதிரம். மோதிரம் அணிந்தவர்.
கொண்டஊவினதவரு :- கொண்டையில் பூ வைத்துக் கொண்டவர்.
தத்துவதவரு :- வேதாந்த, தத்துவ, விசாரங்களில் வல்லவர்.
போஜனதவரு :- போஜனம் - அன்னம். அன்னதானம் செய்தவர்கள்.
போதனதவரு :- போதனை செய்பவர்.
பெண்டனதவரு :-

80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அவுலபல்லதவரு :- ஆந்திராவில் உள்ள அவுலபல்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கந்துகூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கந்துகூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்லூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கல்லூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சங்கதவரு :- சத்சங்கத்தில் பிரியம் கொண்டவர். எப்போதும் உத்தமர்களுடன் சேந்துதான் காணப்படுவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். 32 விருதுகளில் பிற்காலத்தில் துப்பாக்கியும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
கட்டாதவரு, நிறபம்தவரு.

81 .சோமக மகரிஷி கோத்ரம் :

யமுனா நதிக்கரையில் வசித்த ஒரு முனிவர். இவருக்கு யமுனா நதியிடமாக அர்க்கதந்தர் என்னும் முனிவர் மகனாகப் பிறந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ ராமுலதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டு தெய்வமாகவும் ஸ்ரீ ராமநவமி விழாவையும் கொண்டாடுபவர்.
கலிசெட்டிதவரு :- கலிசெட்டி வம்சாவளியினர்.
கலைவிதவரு :- கலைகளில் வல்லவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
காஞ்சனதவரு :- தங்க வியாபாரம் செய்தவர். தங்கமானவர்.
கினிசெட்டிதவரு :- கினிசெட்டி என்பவரின் வம்சத்தினர்.
குந்ததவரு :- வாசனை திரவியங்களுள் குந்தம் ஒன்று. இது பற்றி வந்த ஒரு பெயர்.
கோகிலதவரு :- கோகிலம் - குயில்; குயில் போல இனிய குரல் உடையவர்.
செங்கனதவரு :- செங்கஞ் செடியின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
சின்னகுட்லாதவரு :- சிறிய கொட்டகையில் வசித்தவர்.
சின்னதவரு :- சின்னம் - தங்கம். தங்கவணிகம் செய்தவர்.
தூபம்தவரு :- அம்மனுக்கும் ஆலயங்களுக்கும் தூப திரவிய தருமம் செய்பவர்கள்.
பக்தராஜூதவரு :- ராஜ பக்தி கொண்டவர்.
பூஜைநேசதவரு :- பூசனை வழிபாடுகளில் நேசம் கொண்டவர்.
ப்ரம்மதந்த்ரதவரு :- பிரம்மத்தைப் பற்றிய நூல்களில் - வேதாந்த சாஸ்திரங்களில் - வல்லவர்
பண்ணதவரு :- சாயத் தொழில் நடத்துபவர்.
பண்ணதசரதவரு, குர்ரெம்தவரு, கிட்டாதவரு, குடம்தவரு.

82 .சோமகுல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அக்நிஸ்தம்பதவரு :- அக்நியைக் கட்டுபவர்கள். பஞ்சாக்னிகளுக்கு நடுவே தவம் செய்பவர்.
அநந்தபட்டணதவரு :- ஆந்திராவில் உள்ள அநந்தபட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அம்மணசெட்டிதவரு :- இப்பெயர் கொண்டோர் வம்சாவளியினர்.
அல்லம்தவரு :- அல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அவுலபல்லதவரு :- அவுலபல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கங்காதவரு :- கங்காதேவியைப் பூசிப்பவர்.
காமிசெட்டிதவரு :- காமிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கின்னிசெட்டிதவரு :- கின்னிசெட்டி என்போர் வம்சாவளியினர்.
குடரேதவரு :- ரிஷிகள் வசிக்கும் பர்னகசாலை. இச்சாலைகளில் வசித்த தவசிகள்.
குருபத்திதவரு :- குருபக்தி கொண்டவர்.
கொண்டவீடுதவரு :- கொண்ட- மலை. மலைகளில் வீடுகட்டி வசித்தவர்.
சக்ரராஜூதவரு :- ஸ்ரீ சக்கரம் அமைத்துப் பூசித்தவர். உடம்பில் சக்கரமுத்திரை தரித்தவர். இவர்களின் சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப்பெரும்.
சங்கனதவரு :- சங்கஞ் செடிக்கீழ் வீட்டுத் தெய்வத்தை வழிபாடு செய்பவர்கள்.
தடாகதவரு :- பல்வேறு வகைப்பட்ட அறங்களில் குடிதண்ணீர்க் குளம் வெட்டுதல் ஒரு அறம். இதனைச் செய்தவர்.
தின்னிசெட்டிதவரு :- தின்னிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
துஸ்ஸாதவரு :- துஸ்ஸா-கட்டுக்கொடி. தண்ணீரைக் கட்டியாக மாற்றும் ஒருவகைக் கொடி மூலிகை. வேலிகளில் படர்ந்து இருக்கும். சிறுகட்டுக்கொடி, பெருங்கட்டுக்கொடி என இதனுள் இருவகை உண்டு. இது உஷ்ணத்தை நீக்கும். இதைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
நாடுகொண்டதவரு :- நாடுகொண்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பர்ணதவரு :- பரண்கட்டி ஜபதபங்கள் செய்தவர்.
பெகடதவரு :- ஆந்திராவில் உள்ள பெகட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போகனதவரு :- வைபோகமாக வாழ்ந்தவர்.
மங்களகிரிதவரு :- ஆந்திராவில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மசானதவரு :- மசான ருத்திரனை மயானத்தில் வழிபடுபவர். பெரிய நாயகியம்மனை வழிபடுபவர்.
முத்துதவரு :- முத்தணிந்தவர். முத்து வணிகம் செய்தவர்.
இந்தனதவரு :- இந்தனம் - சமித்து விறகு. இதனைத் தருமமாகக் கொடுப்பவர்.
ஏந்தேலாரு :- அந்தலம் என்னும் சிலம்பு போன்ற ஒரு வகைக் கழலைக் காலில் வீரத்தின் சின்னமாக அணிபவர். இது ஒற்றைக் காலில் அணியப்படும்.
ராமாயணதவரு :- ராமாயணப் பிரசங்கம் செய்பவர்.
வன்னிகுலதவரு :- அக்நிஹோத்ரம் செய்பவர்.
ஜலஸ்தம்பதவரு :- நீருள் மூழ்கித் தவம் செய்பவர். நீரைக் கட்டி அதன் மீது நடப்பவர்.
ஸ்தம்பதவரு :- வெற்றிக் கொடி நாட்டியவர். கொடிக்கம்பங்களை ஆலயங்களுக்குத் தானம் செய்தவர். கொடியேற்றத்திற்குக் கொடித் துணி தருபவர்.
ஸ்தலனதவரு :- ஸ்தலத்தைச் சேர்ந்தவர். பட்டகாரருக்கு ஸ்தலனதவரு என்று பெயர்.
அண்டிண்டிதவரு, குண்டோடிதவரு, புக்கராஜீதவரு, குசயாவிதவரு, கொத்தியிண்டிதவரு, ஜலுகுதவரு, குடிரிதவரு, சாமந்திதவரு, ஜீனிகிதவரு, சூர்யகுலதவரு, ஹொபயணதவரு.

83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கள்ளினதவரு :- கள்ளிச் செடியின் கீழ் வீட்டுத் தெய்வத்தை வழிபடுபவர்.
கன்சிதவரு :- ஸ்ரீ கன்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்தவர்.

84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கந்தம்தவரு :- கந்தம் = வாசனை. நறுமணப் பொருள்களில் விருப்பம் கொண்டவர். ஆலயங்களுக்கு வாசனாதி திரவியங்களைத் தருமமாகக் கொடுப்பவர்.
சிருங்கிதவரு :- சிருங்கி - மான்; சிருங்கி மகரிஷியையும், மானின் இயல்புகள் கொண்டவளாக வேதங்களால் வருணிக்கப்படும் ஸ்ரீ தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். ஸ்ரீ சூக்தம் "ஹரிணீம்" என ஸ்ரீ தேவியை அழைக்கும்.
பாலதவரு :- வேணுகோபால ஸ்வாமியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப் பூனையை வளர்ப்பவர். ஆலயங்கட்குப் புனுகினை வழங்கியவர்.
வார்த்ததவரு :- வார்த்தையாடுவதில் வல்லவர். பேச்சுக்கலையில் வல்லவர். சொன்ன சொல்லைக் காப்பவர்.
கட்டுதவரு, பெத்தனதவரு, வாசதிதவரு, குட்டுதவரு, பைள்ளதவரு, கோரகதவரு, போதுலதவரு, தாசரிதவரு, முனகதவரு, பாதலதவரு, வசந்ததவரு.

85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாலேலாரு :- வேணுகோபால சுவாமியை வழிபடுபவர். பாலாபரமேஸ்வரியை வழிபடுபவர்.

பாலேலாருக்குள் சில பிரிவுகள்.

காமாட்சியம்மனை வணங்குபவர் காமாட்சி பாலிலாரு என்றும்

புளியமரத்தடியில் வீட்டு தெய்வ வணக்கம் செய்பவர் உணிசமர பாலிலாரு என்றும்

சங்கர நயினார் கோயிலில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர் சக்கர்குடிபாலிலாரு என்றும் சங்கரங்குடிபாலிலாரு என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் சங்கர நயினார் கோயிலில் அறுபது கூடி வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வீட்டுத்தெய்வமாக வணங்குபவர் திருச்செங்கோடு பாலிலாரு என்று அழைக்கப்படுகின்றனர். இன்னும் மநுமகரிஷி கோத்திரத்தினுள்ளும் பாலிலாரு என்ற வங்குசம் இருக்கின்றது. மநுமகரிஷிகோத்ர பாலிலாரு சேலத்தில் பலர் வசிக்கின்றனர்.

86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
இவர் சாக்கிய தேவரிஷி என்றும் அழைக்கப்படுகின்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வவைத்யதவரு :- அசுவினி தேவர்களைப்போல் வைத்தியத்தில் வல்லவர்கள். குதிரை மருத்துவ சாஸ்திர நிபுணர்கள்.
காலபுதவரு :- ஆந்திராவில் உள்ள காலபு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குடகோலதவரு :- இப்பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர்.
இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வீட்டில் வைத்து இருக்கலாம். அல்லது குடகோலிகளைத் தயாரித்து வியாபாரம் செய்து இருக்கலாம்.
கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே இருக்கும் வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்பது பெயர். அவற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
கோடிதவரு :- கோடி = சேலை; கோடி சேலை நெய்தவர்கள். கோடி சேலைகள் தானம் வழங்கியவர்.
நக்கதவரு :- தந்திரம் மிக்கவர்.
நந்திவாகனதவரு :- கோயில்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர். பிரதோஷ நாட்களில் நந்தி பூசனை செய்பவர்.
புட்டகண்டிதவரு :- ஆந்திராவில் உள்ள புட்டகண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொப்பண்ணதவரு :- பொப்பண்ணன் என்பவர் வம்சத்தினர்.
போடாதவரு :- போடா என்னும் மலையை பூர்வீகமாகக் கொண்டவர்.
களெபதவரு, காளவதவரு, கானிபதவரு, சாதாதவரு.

87 .சௌநக மகரிஷி கோத்ரம் :

நைமிஷ ஆரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுக் காலம் மாபெரும் யாகம் ஒன்றினை நடத்திய மாமுனிவர் இவர். இவருக்குக் குலபதி மகரிஷி என்றும் பெயர். இவர் நைமிஷாரண்யத்தில் நடத்திய யாகத்திற்கு அநேக மகரிஷிகள் வந்தனர். யஜமானர்களே ரித்விக்குகளாக இருந்து நடத்திய சிறப்பான யாகம் அந்த யாகம் என்று வியாசபாரதம் கூறுகின்றது.
இங்குதான் சௌநகர் முதலான மகரிஷிகள் அனைவருக்கும் சூதபௌராணிகர் மகாபாரதம் கூறினார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொண்டபள்ளிதவரு :- கொண்டபள்ளிதவரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரை தீரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சபலதவரு :- மனக்கிலேசம் கொண்டவர்.
சேகத்திதவரு :- சே=கை; கையும் கத்தியுமாக இருப்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரியின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. அம்மனுக்குக் கத்திவிருது பிடிப்பவர். கத்தி வழிபாடு செய்பவர்.
தட்டிதவரு :- தட்டி நெய்பவர்
சகடமூலதவரு :- சகடம்=வண்டி. தானியங்களையும் கிழங்கு வகைகளையும் வண்டி வண்டியாக உடையவர். அ - இவற்றை வண்டி கட்டிச் சென்று வியாபாரம் செய்தவர்.
பகடாலதவரு :- பகடாலம்=பவளம்; பவளம் அணிபவர். பவள வணிகம் செய்தவர்.
பெண்டம்தவரு :- இப்பெயர் பிண்டம்தவரு என்றும் அழைக்கப்படுகின்றது. அமாவாசை நாட்களில் பிதுர்களுக்குத் தவறாது பிண்டம் தருபவர்கள்.
பெத்தகுண்டதவரு :- ஆந்திராவில் உள்ள பெத்தகுண்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோகுலதவரு :- கோகுலக் கண்ணனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பிருதிவிதவரு :- பூமியை - மண்ணை வழிபடுபவர்.
முலகதவரு :- முலைப்பாலிகை இட்டு வணங்குபவர்.
மோபூரிதவரு :- மோபூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மந்த்ர சித்திதவரு :- மந்திரங்களில் சித்திபெற்றவர்.
லக்கினதவரு :- சிறந்த ஜோதிடராக இருந்து லக்கினம் குறித்து தருபவர்கள்.

குறிப்பு :- எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தும் இவர்களுக்கு மட்டும் லக்கினதவரு என்று பெயர் வரக் காரணங்கள்.
1. லக்கினத்தைப் பிழை இல்லாமல் குறிப்பவர்.
2. லக்கினம் குறிப்பதைத் தருமமாகக் கொண்டவர். இதற்குத் தட்சிணை பெறுவது இல்லை.
இன்றும் தேவாங்கரில் சிலர் சிலவகை வைத்தியங்களை, குடும்ப பாரம்பரியமாக இலவச வைத்தியமாகச் செய்வதை காண்கின்றோம்.

கனகதவரு :- தங்கத்தை விரும்பி அணிபவர். தங்க வியாபாரம் செய்தவர். தங்கமான மனிதர்.
தம்மையதவரு :- தம்மைய்யா என்பவர் வம்சாவழியினர்.
துப்பரதவரு :- என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நீடிநோருதவரு, மஞ்சிதவரு.

88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ருத்திராசியவருக :- ருத்திராட்சம் தரித்தவர்.

89 .தத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காஞ்சனதவரு :- காஞ்சனம் - தங்கம். பொன்னாபரணங்கள் அணிந்தவர். பொன் வணிகம் செய்தவர்.
சப்ரபுதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் சப்பரம் எடுக்கும் உரிமை பெற்றவர். அ - அம்மன் திருவீதி உலாவிற்குச் சப்பரங்கள் அமைத்துத் தந்தவர்.
போகனாயிகம்தவரு :- வைபோகத்துடன் வாழ்பவர்.
மளசிதவரு :- மளசி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

90 .தசீத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அர்த்ததவரு :- வியாக்கியானம் இயற்றியவர். உட்பொருள் விளக்கங்கள் எழுதியவர்கள். அர்த்த சாஸ்திரத்தில் வல்லவர். சாணக்கியரால் இயற்றப்பட்ட இந்நூலில் வல்லவர். தமிழில் இது பொருள்நூல் என்று அழைக்கப் பெரும். குடி, படை, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறினைப் பற்றிய நூல் அர்த்த சாஸ்திரம் எனப்படும்.
அல்லகதவரு ;- கர்நாடகாவில் உள்ள அல்லகம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கனகதவரு ;- பொன்நகை அணிந்தவர். பொன் வணிகம் செய்தவர். தங்கமான குணம் கொண்டவர்.
ஊர்த்தரபுண்டரதவரு ;- ஊர்த்துவபுண்டரமான திருமண் இட்டுக்கொள்பவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித்திலகம் இட்டுக்கொள்பவர்.
யாராசிதவரு :- யாராசி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

91 .ததீசி மகரிஷி கோத்ரம் :

அதர்வ என்னும் மகரிஷிக்கும் சாந்திக்கும் உதித்த குமாரர் ததீசி மகரிஷி. இவருக்குத் தத்தியங்கர் எனவும் பெயர் உண்டு. இவர் குதிரை முகம் உடைய மகரிஷி எனவும் கூறுகின்றனர். துவஷ்டாவிற்கு நாராயண கவசம் உபதேசித்தவர் இவர்.

இந்திரன் பிரம்மஹத்யா தோஷம் பெற்றுத் துன்புற்றான். இதனால் இந்திரனைக் கொல்ல விருத்திராசுரன் பிறந்தான். இந்திரன் அசுரனிடம் போர் புரிந்து தோல்வியுற்றான். அசுரனை வெல்ல வேண்டும் எனில் புதிய வஜ்ராயுதம் பெற வேண்டும் என எண்ணினான்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய வருகையில் இருதிறத்தாரும் ஆயுதங்களுடன் வந்தனர். அவ்வாயுதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீ மகாவிஷ்ணு வாங்கி ததீசி முனிவரிடம் கொடுத்தார். முனிவர் அவ்வாயுதங்கள் அனைத்தையும் வாயிலிட்டு விழுங்கினார். அவை அனைத்தும் முனிவரின் முதுகுத் தண்டில் தங்கி இருந்தன. எனவே அவரின் முதுகுத்தண்டு பெருவன்மை பெற்று இருந்தது.

அதனை இந்திரன் உணர்ந்தான். முனிவரிடம் சென்றான். அவரின் முதுகெலும்பை யாசித்தான். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்ற தெய்வப் புலவர் வாக்கினுக்கு ஏற்பத் ததீசி முனிவரும் தம் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாது, தம்முதுகெலும்பை இந்திரனுக்குத் தானம் தந்து, தபோமகிமையால் உடலையும் உயிரையும் பிரித்துக் கொண்டார். அவரின் முதுகெலும்பில் வஜ்ஜிராயுதம் செய்து அகத்திய மகரிஷியின் துணையுடன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்றான். கருணாமூர்த்தி இம்முனிவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கிண்டியதவரு ;- கிண்டி சாஸ்திரத்தில் வல்லவர். திருமணச் சடங்கினைப் பற்றிக் கூறுவது இச்சாஸ்திரம்.
சூன்யதவரு :- ஏவல், பில்லி, சூன்யம் இவற்றை நிவர்த்தி செய்பவர்.
மிஞ்சலதவரு :- கால் விரலில் மிஞ்சு - மெட்டி அணிபவர்.
மிதேதவரு, கச்சிசதவரு.

92 .தம்ப மகரிஷி கோத்ரம் :

அசுவினி தேவர்களுக்குத் தாம் செய்த சையாதி யாகத்தில் சியவன மகரிஷி அவிர்ப்பாகம் கொடுக்க ஆரம்பித்தார். இந்திரன் இதனால் கோபம் கொண்டான். மகரிஷியின் மீது தன் வஜ்ஜிராயுதத்தை ஏவக் கையை உயர்த்தினான். முனிவர் இந்திரன் கையை ஸ்தம்பிக்கச் செய்தார். இதனால் இம்மகரிஷியைத் தம்ப மகரிஷி - ஸ்தம்ப மகரிஷி என்று அழைத்தனர். மேலும் இம்மகரிஷி ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்து தவம் செய்வதில் வல்லவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.
லாடதவரு :- லாட பாஷையில் வல்லவர்.
ஸ்தம்பதவரு ;- ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்வதில் வல்லவர். யாகம் செய்து தவவன்மை மிக்கவர். கோத்ர ரிஷியும் ஸ்தம்ப மகரிஷி, வங்குசமும் ஸ்தம்பதவரு.

93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கங்கயதவரு :- கங்காபூசனை செய்பவர்.
மிடியதவரு :-

94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி புலஸ்திய மகரிஷியின் மாணாக்கர். இவர் பாஞ்சால மன்னனிடம் ஒரு முறை பசுக்களைத் தானம் கேட்டார். மன்னன் இறந்த பசுக்களைக் கொண்டுபோங்கள் எனக்கூறக் கோபம் கொண்டார். அவாகீர்ண சேத்திரத்தில் முனிவர் யாகம் தொடங்கினார். அதனால் மன்னன் ராஜ்யம் வளங்களை இழந்தது. மன்னன் முனிவரைப் பிழைபொறுக்க வேண்டினான். கருணை கொண்ட முனிவர் யாகத்தை நிறுத்தி நாட்டிற்கு நலம் பல புரிந்தார். இம்முனிவருக்குப் பகர் என்று ஒரு பெயரும் உண்டு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குண்டக்கல்லதவரு ;- குண்டக்கல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
சொபகினதவரு :-

95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வவைத்யதவரு :- குதிரை மருத்துவத்தில் வல்லவர். அஸ்வினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்.
கங்காளதவரு :- கங்காள பரமேசுவரியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.
கமலதவரு :- வழிபாட்டில் தாமரைப் பூவைப் பயன்படுத்துவபர்கள்.
குடகோலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
பிக்குலதவரு, பெக்குகுலதவரு :- பெக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொப்பனதவரு :- ஆந்திராவில் உள்ள பொப்பன பல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போடதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மஹாபக்திதவரு :- பக்தி மிக்கவர்.
மீசாலதவரு :- மீசையால் வந்த பெயர். அழகான மீசை உடையவர்.
முக்தாபுரதவரு :- ஆந்திராவில் உள்ள முக்தாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜண்டாதவரு :- அம்மனுக்கு ஜண்டா பிடிப்பவர்.
மந்துலதவரு :-

96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கும்பதவரு :- கும்பங்கள் வைத்து - கலசம் வைத்து வழிபாடு செய்பவர்.
சம்பாதவரு :- சம்பா என்பது ஒருவகை விளையாட்டு. அதில் வல்லவர். விருப்பம் மிகக் கொண்டவர்.
சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.
தாமோதரதவரு :- தாமோதரனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள். எம்பெருமானின் பன்னிரு திருநாமங்களுள் தாமோதரன் என்பது ஒன்று.
பங்காருதவரு :- பங்காரு - தங்கம். தங்கமானவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் பண்டாரம் எடுத்து ஊர்வலம் வருபவர். விழாவிற்கு பண்டாரம் தருபவர்.
ப்ருதுதவரு :- அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு விருது பிடித்து வருபவர்கள். அரச விருதுகள் பெற்றவர்கள்.
பிக்குலதவரு :- பிக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஸ்தம்பதவரு :- அக்நிஸ்தம்பம், ஜலஸ்தம்பம் செய்து தவம் இயற்றியவர்கள். தவவன்மை பெற்றவர்கள்.
குத்தலதவரு, டிட்டிதவரு, சலுவந்ததவரு, லாடவதவரு, ஜிட்டாதவரு.

97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் :

பந்து என்பவரின் குமாரர். இவருக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.
1) விசாலன்
2) சூண்யபந்து
3) தூம்ரகேது
இம் மூவரும் ஆண்மக்கள். இனிபிளை என்பவள் மகள். காசியபருக்கும் புலஸ்தியருக்கும் இவர் மாமனார் என்றும் கூறுவர். இவரின் தவத்தைக் கெடுக்க தேவர் அரணி என்னும் தேவப் பெண்ணை அனுப்ப அவளை மானுடப் பெண்ணாகச் சபித்தார். இப் பெண் இந்துமதி என்னும் பெயருடன் போஜ நாட்டை ஆண்ட மன்னனுக்குப் பிறந்தாள்.
சிவபிரான் இம்முனிவருக்கு ஒரு குடத்தினுள் இருந்து தரிசனம் தந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சீமெயதவரு :- கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவரைச் சீமைக்குச் சென்று வந்தவர் என்று இன்றும் அழைக்கின்றோம்.
பரிச்சந்ரதவரு :- சந்ர கௌரி விரதம் இருப்பவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குங்குமதவரு :- ஆலயங்களுக்குக் குங்குமம் தரும் திருப்பணி செய்தவர். குங்குமம் தர்மம் செய்தவர்.
கோரண்டலதவரு :- கோரண்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சயனதவரு :- சயன சுகம் மிக்கவர். சயனாசனம் இட்டு ஜெபதபங்கள் செய்தவர்.
சிய்யம்தவரு :- சிய்யம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாமரதவரு :- தாமரைப் பூக்கள் கொண்டு வழிபாடு செய்தவர்.
பண்ணசரதவரு :- பல நிறங்கள் கொண்ட சரங்களை அணிந்தவர்.
பாலாதவரு :- பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர்.
பில்வதவரு :- வில்வதலைகளை கொண்டு பூசிப்பவர்.
பூஷணதவரு :- சிறந்த ஆபரணங்கள் அணிபவர்.
ஜாஜூலதவரு :- ஜாஜூல புஷ்பம் - சாதிமல்லி கொண்டு வழிபடுபவர்.
பைஜனதவரு, பௌஞ்சலதவரு, மக்குலதவரு, யராம்சதவரு, சமதவரு.

98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வவைத்யதவரு :- குதிரை வைத்தியத்தில் வல்லவர். அஸ்வினி தேவர்களைப் போல வைத்தியத்தில் வல்லவர்கள்.

99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ராகதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் எடுக்கும் மகாஜோதிக்கு ராகதீபம் என்று பெயர். எனவே இவர்கள் ஜோதி எடுக்கும் உரிமை பெற்றவர்.
தாளெதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை. ஓலைச்சுவடிகள் சேகரித்து வைத்தவராய் இருக்கலாம்.மந்திரங்கள், ஜாதகங்கள் மற்றும் ஏடுபடுத்தப்பட வேண்டியவற்றை ஓலையில் எழுதித் தந்தவர்களாய் இருக்கலாம்.
குறிப்பு :- சேலம் மாவட்டத்தில் இத்தகைய ஓலைகளைச் சீட்டு என்று கூறுகின்றனர். குழந்தைகளுக்கு சந்து, முடி போன்ற தோஷங்களை நீக்க இன்றும் இத்தகைய சீட்டுக்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கட்டுகின்றனர். இம் மந்திரங்கள் இன்றும் பனை ஓலையில் எழுதித் தரப்படுகின்றன.
கன்னடத்தில் இத்தகைய ஓலைகள் சந்தினு சீட்டு என்று அழிக்கப்படுகின்றன.
திதியதவரு :- திதிப்பூசனை செய்பவர். பஞ்ச அங்கங்களுள் திதியும் ஒன்று.

100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் :

பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் த்வீபத்தில் - தீவில் பிறந்த வேதவியாசரே துவைபயனர் என்று அழைகப்ப்டுகின்றார். த்வீபத்தில் பிறந்தவர் த்வை பாயனா் எனப்படுகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

புட்டொட்டயதவரு :- பெரிய வயிறு உடையவர்கள்.
பட்டயதவரு :- கலைகள் முதலான அரிய திறமைகளுக்காக மன்னரிடம் பட்டயங்கள் பெற்றவர்கள்.
குறிப்பு : த்வைபாயனர், கிருஷ்ணத்துவைபாயனர், வியாசர் ஆகிய பெயர்கள் வேத வியாசரையே குறிக்கின்றன.
பட்டகாரதவரு, ஹேமாத்ரிதவரு.

101. துர்வாச மகரிஷி கோத்ரம் :

அத்ரி மகரிஷிக்கும் அனசூயைக்கும் சிவபிரானின் அம்சமாக உதித்தவர். சாபமிட்டால் மகரிஷிகளின் தவப் பயன் குறையும். ஆனால் இவர் சாபமிட்டால் இவரின் தவப்பயன் வளரும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

புஜங்கதவரு :- நாகபூசனை செய்பவர்.

எடமாலையதவரு :- இடப்புரம் மாலையணிபவர்.

பரட்டெயதவரு :- ஆந்திராவில் உள்ள பரட்டெயம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆலவட்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் உலாவின் போது ஆலவட்டம் பிடிப்பவர்.

மத்தளதவரு :- மத்தளம் வாசித்தவர்.

அலட்டிண்டிதவரு :- அலட்டிண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கபோததவரு :- கபோதபட்சி வடிவில் தெய்வத்தை வழிபட்டவர்.

காசினிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சந்திரதவரு :- சந்திரனை வழிபடுபவர். பௌர்ணமி பூசனை செய்பவர்.

சண்டிதவரு :- சண்டிகா பறமேஸ்வரியை வழிபடுபவர்.

சாகரம்தவரு :- சமுத்திரக்கரையை ஒட்டிய பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சிவபூஜைதவரு :- சிவபூசனை செய்பவர்.

சென்னபட்டணதவரு :- தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

செருகூரதவரு :- செருகூர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

திம்மகட்டதவரு :- மைசூரில் உள்ள திம்மகட்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

திலலாஜதவரு :- யாகத்திற்கு எள் மற்றும் நெற்பொரி உபயம் செய்பவர்கள். திலம்-எள்;லாஜம்-பொரி.

துக்காணிதவரு :- இருகாசு. ஒந்தாணி - ஒரு காசு. து+காணி=இரண்டுகாசுகள். இரண்டு காசுக்காரர்கள் என்று இவர்க்குப் பெயர்.

துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்பவர்கள்.

துர்வாசதவரு :- துர்வாசமுனிவரை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.

தோரணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மகர தோரணம் பிடிப்பவர்கள்.

நிம்மனதவரு :- ஏழுமிச்சம்பழம் மந்திரித்துத் தருபவர்கள்.

பகடாலதவரு :- பவளமாலை அணிபவர்.

பலிதவரு :- தேவபூசனை செய்பவர்.

பிட்டலதவரு :- பிட்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

மசானதவரு :- மசான ருத்திரனையும் பெரிய நாயகி அம்மையையும் மசானத்தில் வழிபடுபவர்.

மடதவரு :- மடம் கட்டித் தகுந்தவர். மடத்தில் வசித்தவர்.

மண்டியாதவரு :- மண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

மரளிதவரு :- கொள்ளேகாலம் அருகில் உள்ள மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். மரளி புகழ் பெற்ற சந்தையாகும்.

மத்யானதவரு :- மத்யான பூசனை செய்பவர்.

யடமால்யதவரு :- இடது பூசனை செய்பவர்.

யாதவாரபல்லிதவரு :- யாதவாரபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அரசணதவரு :- மஞ்சள் நிறம் உள்ளவர். மஞ்சள் தருமம் செய்பவர்.

சும்மானதவரு, சாகரதவரு, பொம்மத்திதவரு, கொட்டேதவரு, பரிட்டிதவரு, கோமிரம்தவரு, புஜங்கதவரு, சகூலதவரு.

102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பிரதானியதவரு :- அரசப் பிரதானியராக இருந்தவர்.
காலபைரவதவரு :- காலபைரவ மூர்த்தியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பட்டதவரு :- பட்டம் பெற்றவர்கள். பட்டயங்கள் பெற்றவர்.

103 .தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தவனதவரு :- தவனம் - மருக்கொழுந்தால் வழிபாடு செய்பவர்.
மோஹனதவரு :- மோகனமாக வாழ்ந்தவர்.
ராகதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மஹாஜோதி என்னும் ராக தீபம் எடுப்பவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிபவர்.
சிம்மாசனதவரு :- தேவாங்க சிம்மாசனங்கள் நான்கில், ஒரு சிம்மாசனத்திற்கு அதிபதியான உரிமை பெற்றவர்.
சிம்மாசனங்கள் நான்காவன :-
1. ஷகர சிம்மாசனம்
2. மொதனூரு சிம்மாசனம்
3. பெனுகொண்டா சிம்மாசனம்
4. படவீடு சிம்மாசனம் என்பனவாம்.
ஷகர சிம்மாசனம் ஸ்ரீ காசிகுரு பீடத்திற்கும். மொதனூரு சிம்மாசனம் ஸ்ரீ சைலகுரு பீடத்திற்கும் , பெனுகொண்டா சிம்மாசனம் ஸ்ரீ ஹேமகூடகுரு பீடத்திற்கும் , படவீடு சிம்மாசனம் ஸ்ரீ ஸோணாசல குரு பீடத்திற்கும் உரியனவாம். ஸ்ரீ சம்புசைல குரு பீடத்திற்குச் சிம்மாசனம் இல்லை. காரணம் இக்குரு பீடம் மட்டும் சன்யாச ஆசிரமத்திற்கு உரியது. இல்லறவாசிகள் மற்ற குரு பீடங்களில் குருமார்களாக இருந்து வந்தனர்.
லிங்கதவரு :- லிங்கதீட்சை பெற்றவர்.

104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் :

பற்பல யாகங்களை ரித்விக்காக இருந்து செய்து தந்த மாபெரும் மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நேமதவரு :- நியம நிஷ்டைகளில் முறையான வைராக்யம் கொண்டவர்.
மயூரதவரு :- மயில் வழிபாடு செய்தவர்.
குலஜீவனதவரு :- பலருக்கும் ஜீவன உபகாரம் - வாழவழி செய்த உத்தமர்கள்.

105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் :

தேவல மகரிஷி தேவாங்கரின் ஏழு அவதாரங்களில் முதல் அவதாரமாவார். இதன் பின் வித்யாதரர் முதலான ஆறு அவதாரங்கள் எடுக்கப்பட்டன. இவ்வவதார காலங்களுக்குப்பின் காளசேன மன்னன் காலத்தில் வம்ச விருத்தி அற்றுப் போனது. கௌதமர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய, யாகத்தின் பயனாய் காளசேனனுக்கு 10,000 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளுக்கு 700 மகரிஷிகளைக் கொண்டு உபநயனம் முதலான வைதீக காரியங்களையும் தீட்சைகளும் செய்விக்கப்பட்டன. எந்தெந்த மகரிஷிகள் எந்தெந்தக் குழந்தைகளுக்குத் தீட்சை செய்வித்தார்களோ அக்குழந்தைகளும் அவரின் வழிவந்தோர்களும் அந்தந்த மகரிஷிகளின் கோத்ரங்களைச் சார்ந்தவர்.

ஒருவேளை மகரிஷிகள் தீட்சை தருங்கால் தம் குலத்தோரை ஆசீர்வத்திக்க ஆதி தேவாங்கரான தேவல மகரிஷி வருகை தந்து இருக்கலாம். அவரும் ஒரு மகரிஷியாதலின் சில குழந்தைகளுக்குத் தீட்சை செய்து இருக்கலாம். இக்கோத்ர மகரிஷி தேவலரின் பெயரைத் தாங்கிப் பிற்காலத்து விளங்கிய ஒரு மகரிஷியாக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சல்லாதவரு :- நீர்மோர் தானம் வழங்குபவர்கள்.

கோமுகதவரு :- பசுவின் முகம் போல் உள்ள கமண்டலத்தால் அபிஷேகம் செய்து செய்து சிவ வழிபாடு செய்பவர்கள்.

ஜிடாதவரு :- சேராங்கொட்டை மரத்தின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்கள். சேராங்கொட்டை கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்கள்.

ரெப்பகதவரு, ரெப்பிதவரு.

106 .தேவராத மகரிஷி கோத்ரம் ;

108ல் காணப்படும் தைவராத மகரிஷியும் இவரும் ஒருவரே. தெய்வம் என்ற சொல் வடமொழியில் தைவம் என்று வழங்கப்படும். தைவராத மகரிஷி என்பதே தேவராத என்று வழங்கப்பட்டு இருக்கலாம். இவ்விரண்டு கோத்ரங்களினுள் வருகின்ற வங்குசங்களும் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- குசம் = தர்ப்பைபுல்; தர்ப்பையைக் கொண்டு வழ்பாடும், வைதிகச் சடங்குகளும் செய்தவர். தர்ப்பையும் கையுமாக இருந்தமையின் இவர் குசதவரு எனப்பட்டனர்.
தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.

107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கேட்யம்தவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குரிய 32 விருதுகளில் கேடயம் ஒன்று. இவர்கள் கேடயம் பிடிக்கும் உரிமை பெற்றவர்.
பத்மகந்திதவரு :- உடம்பில் தாமரைப் பூ மணம் வீசுமாறு உள்ளவர்கள். இது சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று.
மாசெர்லதவரு :- ஆந்திராவில் உள்ள மாசெர்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

108 .தைவராத மகரிஷி கோத்ரம் :

106ல் கண்ட தேவராத மகரிஷியும் இவரும் ஒருவர் தான் விளக்கம் 106ல் காண்க.

அஷ்டசித்திகளில் ஜயை என்பாள் ஒருத்தி. ஜயை பார்வதி தேவியின் தோழி. ஜயை ஒருமுறை பார்வதி தேவியிடம் இல்லற தருமம் பற்றி அறிய ஆசைப்பட்டு, அதனைப்பற்றித் தேவியிடம் கேட்டாள்.

ஜயையின் எண்ணத்தை உணர்ந்த எம்பிராட்டி; ஜயையே! உனக்கு மனிதப் பிறப்புத் தருகின்றேன். அப்பிறப்பில் நீ இல்லற தருமத்தைப் பற்றி அனுபவபூர்வமாக உணரலாம் என்றனள்.

அதன் படி ஜயை மானிடப் பெண் ஆனாள். தேவராத முனிவர் கற்பிற் சிறந்த கன்னி ஒருத்தியைத் தேடிக் கொண்டு இருந்தார். தாம் தேடிய உத்தமப் பெண் இச் ஜயை என முனிவர் உணர்ந்தார். அவளைச் சோதிக்க எண்ணினார். தாம் ஓர் அரக்க வடிவம் கொண்டார். ஜயையைத் தூக்கிக் கொண்டு சென்றார். ஜயையைக் கலக்க முனிவர் முனைந்தார்.

ஜயையோ தர்மதேவதையைச் சரண் புகுந்தாள். இவ்வரக்கனால் கற்பழியாது இருக்க என்னைக் கல்லாக மாற்றுக என வேண்டினாள். தர்மதேவதையின் அருளால் அவள் கல்லாக மாறினாள். அவள் மன உறுதிக்கு மகிழ்ந்த முனிவர் தம் தவ மகிமையால் அவள் கல்லுருவை மாற்றி மனிதப் பெண் ஆக்கினார். தம் வடிவையும் மாற்றிக் கொண்டார். அவளைச் சோதித்த உண்மையை உணர்த்தினார். ஜயையை மணந்து கொண்டார். இங்கனம் ஜயை இல்லற தருமம் கற்புடைமையே என்று அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையைப் பயன்படுத்தி யாகாதி காரியங்கள் செய்பவர். வழிபாட்டில் தர்ப்பையைப் பயன்படுத்துபவர். தர்ப்பையும் கையுமாக எப்போதும் இருப்பவர்.

சந்திரகிரிதவரு :- ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சரந்திதவரு :- உபகுருக்கள். குருவினிடமோ குருபீடாதிபதிகளிடமோ தீட்சை பெற்றுக் கொண்டு அவர்களைப் போல தேச சஞ்சாரம் செய்யும் உரிமை பெற்றவர். தட்சிணைகள் பெற்றுக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவர்.

சல்லாதவரு :- நீர்மோர் தானம் செய்பவர்.

குன்சதவரு :-

109 .தௌபாய மகரிஷி கோத்ரம் :

வேதவியாச மகரிஷியின் பெயர்களுள் இதுவும் ஒன்று.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அல்லாடிதவரு :- ஆந்திராவில் உள்ள அல்லாடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சித்தாதவரு :- சித்திகளைப் பெற்று வாழ்ந்தவர்.
சிவகங்கையவரு :- கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் சிவகங்கை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிவத்யானதவரு :- சிவனைத் தியானம் செய்து வாழ்ந்தவர்.
செந்திதவரு :- செந்தி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாகஅஞ்சுதவரு :- நாகப்பாம்பின் உருவம் விளங்கும் கரையை உடைய ஆடையை மட்டும் உடுக்கும் பழக்கம் உடையவர்.
பவடம்தவரு :- பவள நகையை அணிபவர்.
ஜூரஜாதவரு :-

110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் :

த்ரயம்பகம் வேத மந்திரங்களுள் ஒன்று. இம்மந்திரத்திற்குக் கர்த்தாவாகவோ அல்லது இம்மந்திரத்தில் சித்திபெற்றே விளங்கிய ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ருத்திரவரதவரு :- ருத்திரனிடம் வரம் பெற்றார்.
ருத்திரகண்டிதவரு :- ருத்திராட்சத்தைக் கழுத்தில் தரித்தவர்.

111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையும் கையுமாகக் காலம் கழித்தவர். யாகாதி காரியங்கள் செய்தவர். தர்ப்பை கொண்டு வழிபட்டவர்.
சந்தராதவரு :- சந்திரனை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர். பௌர்ணமி பூசனை செய்தவர்.
சிருங்காரதவரு :- அழகு மிக்கவர்.
தானதவரு :- தானதருமங்கள் செய்பவர்.
பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமான குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பாலகவியவரு :- இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.
மதரெதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாமந்திதவரு :- சாமந்தி மலர் கொண்டு வழிபட்டவர்.
சல்லாதவரு :- நீர் மோர் தானம் செய்தவர்.

112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷியின் பெயரால் ஒரு லிபி - எழுத்து வடிவம் இருக்கின்றது. அது நாகர லிபி எனப்படுகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

முண்டகாசனதவரு :- முண்டகாசனம் இட்டுத் தியானம் செய்தவர். முண்டகாசனம் - பத்மாசனம்.
தட்டியதவரு :-
சள்ளெயதவரு :-

113 .நாரத மகரிஷி கோத்ரம் :

பிரம்மாவின் வயற்றில் இருந்து தோன்றியவர். தம் மூன்றாவது பிறப்பில் இவர் பிரம்மாவின் பிள்ளை. இவர் பத்தாவது பிரஜாபதியும் ஆவார்.

ஹர்யச்வர்களையும் சபலாச்வர்களையும் பிரஜாவிருத்தி செய்யாமல் மோட்ச மார்க்கத்தை உபதேசித்தார். அதனால் பிரம்மா இவரைக் கந்தர்வத் தலைவனாகும்படி சபித்தார். தட்சன் குமாரர்களுக்கு ஞானோபதேசம் செய்து மோட்சமடையச் செய்தார். அதனால் இவரை ஒருநிலையில்லாமல் சுற்றுமாறு தட்சன் சபித்தான். அதனால் திரிலோக சஞ்சாரியானார்.

இவர் கையில் உள்ள வீணைக்கு மகதி என்று பெயர். வீணாகானத்தில் நிகரற்றவர்.

வேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மரகஸ்யம், பூர்வகல்பசரிதம், பிரம்மாண்டத்தின் அமைப்பு, ராஜநீதி, வித்யைகள், கலைகள், சங்கீதம், நாட்டியம் முதலிய சகல ஞானத்திலும், பேசுந்திறமையிலும் நிகரற்றவர். தேவர்கள் அசுரர்கள் இருவருக்கும் வேண்டியவர். இவ்விருவகையினரும் இவரை வணங்கினர்.

சகல நற்குணங்களும் உடையவர். நடுநிலை உடையவர். பற்றற்ற புண்யாத்மா , கந்தர்வ கணங்களுள் தும்புருவுடன் சேர்க்கப்படுகிறார். இவருடைய சகோதரி மகன் பர்வதர்.

முன்கல்பங்களில் வழங்கிவந்த ப்ரும்ம ஞானத்திற்கு இருப்பிடம் நாரதரே. ஸ்வேதவராக கல்பத்திற்கு இவர் ஆதிரிஷி. பகவானுடைய குணங்களை மஹதி என்னும் யாழில் வாசிப்பதும், ஏழு மார்க்கங்கள் உள்ள ப்ரம்ஹ வித்தையை உபதேசிப்பதும் இவருடைய பணி.

கர்மகதியை பின் தொடர்ந்து ஜீவகோடிகளுக்கும் உலகங்களுக்கும் நன்மை செய்வதே இவர் நோக்கம், ஜீவாத்மாக்களின் வினைக்கர்மங்கள் தகுந்த காலங்களில் தகுந்தபடி பயனைக் கொடுக்கும்படி கவனிப்பர். சாதாரணமாகப் பார்க்கும் போது இவர் செயல்கள் கலகம் உண்டாக்குவதாகத் தோன்றும். ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி. அதனால் இவர் கலகப்பிரியர் என்று அழைக்கப்பட்டார். கர்ம தேவதைகளுக்கு இவர் தலைவர். இவரில்லாமல் ஈஸ்வரனின் காரியங்கள் நடப்பது இல்லை.

நாரதர் பெயரால்
1) நாரதீய புராணம்
2) நாரத ஸ்மிருதி
3) நாரத பக்தி சூத்ரம்
4) நாரதசாகை
5) நாரத சங்கீத மகரந்தம் ஆகிய நூல்கள் விளங்குகின்றன.

நாரதரிடம் உபதேசம் பெற்ற காட்டு வேடன் தான் வால்மீகி மகரிஷி.

"தேவரிஷிகளுள் நாரதன் நானே " என்று கீதையில் பகவான் அருளிச் செய்தான்.

இங்கனம் நாரதர் வரலாறு விரிக்கில் பெருகிக்கொண்டே போகும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஆகாசதவரு :- தவத்தாலும், யோக பலத்தாலும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றல் பெற்று இருந்தவர். பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாசத்தை வழிபாடு செய்பவர்.

இட்டூரதவரு :- இட்டூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

உப்பள்ளதவரு :- கடற்கரையில் உள்ள உப்பளங்களுக்கு கன்னடத்தில் உப்பள்ள என்று பெயர். உப்பள்ளங்களை ஒட்டி வாழ்ந்து வந்தவர்.

கரிகெதவரு :- அறுகம் புல்லைக் கொண்டு வழிபாடு செய்பவர்.

குண்டம்தவரு :- அக்நிகுண்டத்தில் முதலில் இறங்கும் உரிமை பெற்றவர். அக்நிஹோத்ரம் முதாலன யாககாரியங்களை விடாது வீட்டில் செய்பவர்.

கெரடிதவரு :- சிலம்பு விளையாட்டில் வல்லவர்.

கோவூரதவரு :- ஆந்திராவில் உள்ள கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கோவூர்க்கிழார் என்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்து வந்தார்.

கோவிலதவரு :- கோவில்களில் சேவை செய்தவர்.

சங்கதவரு :- அம்மன் திருவிழாவில் சங்க முழக்கம் செய்பவர்.

சமாதிதவரு :- அஷ்டாங்கயோகத்தில் ஒன்றான சமாதியோகம் கைகூடின ஜீவன் முக்தர்கள்.

பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாக்களுக்குப் பண்டாரம் வழங்குபவர்.

பாகலதவரு :- தலைப்பாகை அணிந்தவர்.

புத்சலதவரு :- வரிக்குருமத்தங்காய் என்னும் குமட்டிக்காயைக் கொண்டு பலவகை வைத்தியங்கள் செய்தவர்.

பொஜ்ஜம்தவரு :- பெரிய வயிறு உடையவர்.

பிரம்மாண்டதவரு :- பதினெண் புராணங்களுள் மிகவும் பெரியது பிரம்மாண்ட புராணம். இதனைக் கற்றுப் பிரசங்கம் செய்தவர்.

முனிகூட்டதவரு :- முனிவர் கூட்டத்தை வழிபட்டவர்.

லாடதவரு :- லாட என்பது ஒரு வகை மொழி. லாட மொழியில் வல்லவர்.

குட்டனூருதவரு :- குட்டனூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பாபட்லதவரு :- வகிடு எடுத்துக் கொண்டவர். ஆந்திராவில் பாபட்டலம் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கூரடிதவரு, கொம்மரதவரு, தட்டிதவரு, தட்டுதவரு, படலம்தவரு, மானகுருவவுரு, பெண்டிதவரு, ஹஸிகெயதவரு, முசலதவரு, பஜ்ஜதவரு.

114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சிந்திதவரு,சிந்துதவரு :- சிந்து தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

115 . பகதேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு :- தாலப்பிய மகரிஷிக்குப் பகர் என்று பெயர். இவருடைய வரலாற்றைத் தாலப்பிய மகரிஷி கோத்ரத்தில் காண்க.

குறிப்பு :- அடுத்த கோத்ரம் பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்.

தால்ப்பிய மகரிஷி, பகதேவ மகரிஷி, பகதால்ப்பிய மகரிஷி-மூவரும் ஒருவரே. மகரிஷிகளின் வரலாறுகளையும் பெயர்களையும் சரிவர அறியாமல் ஒருவரையே பல இடங்களில் கொடுத்துள்ளனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கண்ணபுலிதவரு :- புலிக்கண்களை உடையவர். புலி போன்ற வீரப்பார்வை உள்ளவர்.
பாலாஜிதவரு :- பாலாஜி என்ற பக்தர்களால் அழைக்கப்பெறும் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குபவர்.
மண்டிதவரு :- மண்டியிட்டுப் பூசனை செய்பவர்.
சஞ்சிகதவரு :- தேவாங்ககுல சம்பந்தமான சஞ்சிகைகளை - நூல்களை வெளியிட்டவர்.
ரஞ்சிததவரு :- ரஞ்சிதமாக வாழ்ந்தவர்.
சயதவரு :-

:116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்

115ல் காணப்படும் மகரிஷியும் இவரும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சோபனதவரு :- மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர், மங்களத்துடன் வாழ்ந்தவர், மங்கள காரியங்களை முன் நின்று செய்பவர்.
சம்பாரதவரு :- மேன்மையுடன் வாழ்ந்தவர்.
ஜீரிகியதவரு :-

117 .பத்ம மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாரங்கிதவரு :- கடைச் சரக்குகள் பலவற்றை ஒன்று சேர்த்து மருந்து செய்தவர்.
பீரகதவரு :- பீர்க்கங்காய்ப் பற்றி வந்த பெயர்.

118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் :

அத்திரி மகரிஷியின் பத்தினியாகிய அனசூயையிடம் அவதாரம் செய்தவர். இவர் ஆதிசேஷனின் அம்சம்.

தாருகவனத்தில் சிவபிரானின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தார் மகாவிஷ்ணு. அதனால் அவர் திருமேனி புளகாங்கிதம் அடைந்தது. புளகாங்கிதத்திற்கு காரணம் கேட்டார் ஆதிசேஷன் . ஆனந்த தாண்டவ தரிசனம் காரணம் எனப்புகன்றார் மகாவிஷ்ணு. தானும்நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன். அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான்.

பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினர். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். ஆனந்த தாண்டவம் தரிசனம் செய்யும் பாக்கியத்தை வரமாகப் பெற்றார்.

" அனசூயையிடம் குழந்தையையாய் வளர்ந்து சிதம்பரம் அடைவாயாக அங்கே என் நடன தரிசனம் காணத் தவம் செய்து கொண்டு இருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம் " என்று இறைவன் அருள் செய்து மறைந்தனன்.

இவ்வரம் காரணமாக ஆதிசேஷன் ஒருநாள் சிவத்யானத்துடன் கையேந்தி இருந்த அனசூயையின் கைகளில் விழ, அம்மாதரசி பாம்பென்று கையை உதறிவிட அவள் பாதத்தில் விழுந்தான். பாதத்தில் விழுந்ததாலும் அஞ்சலித்த கரங்களில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக்காரணப்பெயர் பெற்றார்.

பின் சிதம்பரம் அடைந்தார் பதஞ்சலி. வியாக்கிர பாதருடன் சேர்ந்தார். திருநடனம் கண்டு மகிழ்ந்தார். இன்றும் தில்லைத்திருத்தலத்தினுள் காணப்படுகின்றார்.

இவர் பாணினி சூத்திரத்திற்குப் பாஷ்யம் - விளக்கவுரை எழுதினார். பதஞ்சலி யோகசூத்ரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சித்துகொள்னேரு ;- சித்த புருஷர் ஒருவரைத் தம் வீட்டுத்தெய்வமாக வணங்குபவர்.

மாலிலாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கும், அம்மன் திரு விழாவிற்கும் பூ மாலை தரும் திருத் தொண்டு செய்பவர்.

அங்கப்பதவரு :- அங்கப்பன் என்ற ஒருவரின் வம்சா வழியினர்.

கர்ணதவரு :- காது பற்றி வந்த ஒரு பெயர்.

கட்கதவரு :- கட்கம்=கத்தி. வாள், கத்தி வைத்து இருப்பவர். கத்தியை வழிபடுபவர்.

கடகதவரு :- ஒரிஸாவில் உள்ள கடக் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

குசுமசித்லூவாரு :- மலர்கள் மொட்டுக்களாய் இருக்கும் போதே; அம்மொட்டுக்களைச் சேகரித்து அவற்றை மாலையாய்க் கட்டித் தெய்வத்திற்குச் சூட்டி மகிழ்பவர்.

குடாரம்தவரு :- துணிக் கூடாரம் பற்றி வந்த ஒரு பெயர்.

கோடூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கோடூர் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோரண்டதவரு :- நாகார்ஜூன மலையை அடுத்துள்ள கோரண்டமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோவூருதவரு :- நெல்லூரை அடுத்து பெண்ணை நதிக்கு வடக்கில் உள்ளது கோவூர். இக்கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சங்குதவரு :- சங்க முழக்கத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்.

சந்தாவாரு :- சந்திரனை வீட்டு தெய்வமாக வணங்குபவர். ஆந்திராவில் இவர்களை சந்திராலுவாள்ளு என்று அழைக்கின்றனர்.

சிருங்காரதவரு :- அழகாகத் தோற்றமளிப்பவர்.

சிந்தனதவரு :- சிந்தனையில் சிறந்தவர்.

தாள்ளதவரு :- கயிறு திரித்தவர். கயிறு விற்றவர்.

தேவனதவரு :- தேவாலய காரியங்கள் நடத்துவதிலும் ஆலய வழிபாட்டிலும் சிறந்தவர்.

நாரிகேளம்தவரு :- தேங்காய் பற்றி வந்தவொரு பெயர்

பதிபக்தினவரு :- பதிபக்தி மிக்க பெண்களை உடைய வம்சமிது.

பாண்யாதவரு :- ஆந்திராவில் உள்ள பாணியம் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பிசனதவரு :- சிக்கனம் மிக்கவர்.

பிச்சுதவரு :- பக்தி வெறிகொண்டவர்.

பிட்சாவதினதவரு :- பிட்சையிட்டு வாழ்ந்தவர்.

புச்சகிஞ்சலதவரு :- புச்சக்காய் என்னும் வரிக்குருமத்தங்காய் கொண்டு பலவகை வைத்தியம் செய்தவர்.

ராகதவரு :- ராகதீபம் எனப்படும் ஜோதி எடுப்பவர்.

மாசிப்பத்ரியவரு :- மாசிப்பத்ரி இலை பற்றி வந்த ஒரு பெயர்.

ஜாஜினவரு ;- வழிபாட்டிற்கு ஜாதிமல்லி மலரைப் பயன்படுத்துபவர்.

இருமனெவாரு :- பெரிய வீட்டுக்காரர்.

காடனதவரு :- தெலுங்கில் ஏர் உழுதலுக்குக் காடன என்பது பெயர். எனவே இவர்கள் உழுது பயிறிட்டு வாழ்ந்தவர்.

ஹொன்னுபுட்டியதவரு :- பெட்டி பெட்டியாகத் தங்கத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

காரணதவரு :- எதற்கும் காரணம் கேட்பவர்.

தாராபுரதவரு :- தாராபுரம் தலத்தைச் சார்ந்தவர்.

மல்லதவரு :- மற்போரில் வல்ல மல்லர்கள்.

சின்னதவரு :- கன்னட மொழியில் சின்னம் என்றால் தங்கம். தங்கமான குணம் கொண்டவர். தங்கம் மிகுதியாகக் கொண்டு வாழ்ந்தவர்.

அன்காபத்திதவரு, அன்காபத்துனிதவரு, ஆகாசவத்துனதவரு, ஆட்ரதவரு, கோவரதவரு, சிச்சுதவரு, தோகுபர்த்திதவரு, தோனபாத்திதவரு, பதிம்தவரு, புசனதவரு, முலிகிதவரு, மோனிபத்ரிதவரு, யெண்டிதவரு, மல்கததவரு.

119 .பராசர மகரிஷி கோத்ரம் :

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் திரசந்தி. பராசரர் தம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி உதிரன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும்போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திரயாகம் செய்தார்.

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும் புலஸ்திய பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்தியர் பராசரருக்குப் புராணம் பாட அருள் செய்தார்.

விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்பவாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் - தோல்வி அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார். மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் - காமத்தை வென்றவர் என்று பொருள் - பராசரர் எனப்பட்டார்.

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார். தாயின் கர்ப்பத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டு வயிற்றைப் பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார்.

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணுமூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சி பூமியில் புதைத்தார்.

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவரமுயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினிவீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்தது அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ளநதி இதுவாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாதனதவரு ;-
1) சரியை
2) கிரியை வ் 3) யோகம்
4) ஞானம்
என்னும் சாதன சதுஷ்டயத்தில் ஊற்றமுடையவர்கள்.

துவாபாலகதவரு ;- அம்மன் திருவிழாவில் துவாரபாலகர்களாக திருத்தொண்டு செய்பவர்.

பில்வபத்ரதவரு ;- வில்வதளைகளால் வழிபாடு செய்பவர்.

பிண்டதவரு ;- பிதுரர்களுக்குத் தவறாது பிண்ட தர்ப்பணம் செய்பவர்.

போஜனதவரு ;- ஏழைகளுக்குப் போஜனம் வழங்கியவர்.

யெதலூரிதவரு ;- ஆந்திராவில் உள்ள யெதலூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பக்கனதவரு ;- பக்கனபள்ளி என்னும் ஊர்க்காரர்.

சாமந்திதவரு ;- சாமந்தி மலர்களால் வழிபாடு செய்பவர்.

காஜிலதவரு, பூபெதவரு, பக்காதவரு, சும்மானதவரு.

120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் :

ரிக்வேதத்தில் 9-67; 11-1-30; 37-43; 53-74 வது ரிக்குகளுக்குப் பரத்வாஜர் கர்த்தா. இம்முனிவர் நாள்தோறும்அக்நிஹோத்ரம் செய்வார்.

கங்கையில் இவர் நீராடச் செல்கையில் தம் வீரியத்தைத் துரோண கும்பத்தில் வைத்தார். இத்தேஜஸினால் துரோணர் பிறந்தார். துரோண கும்பத்திலிருந்து பிறந்தமையின் துரோணர் எனப்பட்டார்.

ரிக்வேதத்திலும், சாமவேதத்திலும் பல சூக்தங்களுக்குப் பரத்வாஜர் கர்த்தா.

மிகவும் வயதானவர். நீண்ட காலம் வாழ்ந்தவர். முந்நூறு ஆண்டுக்காலம் பிரம்மச்சரியத்துடன் வேதங்களை ஓதியவர். அங்கங்கள் நொந்து முதிர்ந்து தளர்ந்து படுக்கையில் இருந்த இவரிடம் வந்த இந்திரன் இன்னும் நூறாண்டு காலம் ஆயுளை உமக்குத் தந்தால் என்ன செய்வீர் ? என்றான். அந்நூறாண்டு ஆயுளிலும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்வேன். வேதம் ஓதிக் காலம் கழிப்பேன் என்றார் பரத்வாஜர்.

வனவாசம் மேற்கொண்டு இராமபிரான் இவர் ஆசிரமத்திற்குச் சென்றான். மீண்டும் இராவணவதம் முடிந்து அயோத்தியைக்கு மீண்டு வருகையில் இவரது ஆசிரமம் வந்து விருந்து உண்டனன் எம்பிரான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாகுளதவரு :- ஸ்ரீ காகுளம் என்னும் ஊர்க்காரர்.

கங்காளதவரு :- கங்காள ருத்திரனை வழிபடுபவர்.

கமலதவரு :- தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்பவர்.

குத்தாலதவரு :- குத்தால மகரிஷியை வணங்குபவர் குத்தாலம் என்னும் ஊர்க்காரர்.

கொசனதவரு :-

சிகாகோலதவரு :- கூந்தலை மிக அழகாக அலங்கரித்துக் கொள்பவர்.

சிலுகதவரு :- கிளி வளர்த்தவர்.

சீலவந்துதவரு :- சீலத்துடன் விளங்குபவர்.

சென்னூறுதவரு :- சென்னூரு என்னும் ஊர்க்காரர்.

நிரஞ்சனதவரு :- மனநிறைவுடன் செல்வத்துடன் வாழ்பவர்.

நீகூரிதவரு :- நீகூரி என்னும் ஊர்க்காரர்.

பகடலதவரு :- பவள நகை அணிபவர். பவள வணிகர்.

பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமானவர்.

பட்டதவரு :- அரசனிடம் பட்டயங்கள் பெற்றவர்.

பயிடிதவரு, பைடிதவரு :- பசுக்களை வளர்த்தவர்.

பாபகதவரு :- நேர் வகிடு எடுத்துக் கூந்தலை முடித்துக் கொள்பவர்.

மத்திகூடிதவரு :- மத்திகூடி என்னும் ஊர்க்காரர்.

மராபத்திரைதவரு :- மராபத்தினி என்னும் ஊர்க்காரர்.

முங்குரதவரு :- மூக்குத்தி அணிபவர்.

முத்யதவரு :- முத்துநகை அணிபவர். முத்து வணிகர்.

மதுரதவரு :- மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கட்கதவரு :- அம்மனின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. கத்தியை வழிபாடு செய்து வணங்குபவர்.

முத்கரதவரு :- காயத்ரி மஹாமந்திரத்தின் 24 முத்திரைகளில் முத்கரம் ஒன்று. இம் முத்கா முத்திரையை உடம்பில் தரித்தவர்.

121 .பர்வத மகரிஷி கோத்ரம் :

பர்வத மகரிஷி தேவரிஷிகளுள் ஒருவர். நாரதரின் சகோதரியின் புத்திரர். இவர் நாரதமகரிஷியைத் தன் குருவாகக் கொண்டவர். இருவரும் மிக ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்ததால் பர்வத நாரதர் என்று அழைக்கப்பட்டார்.

தேவாங்க சம்பிரதாயத்தில் பர்வதம் என்றால் அது ஸ்ரீ சைலத்தைக் குறிக்கும் - எனவே இவர் ஸ்ரீ சைலத்தில் தவம் செய்தவர் என்றும் கூறப்படுகின்றது. நாரதர் ஒரு முறை பர்வதரைப் பூவுலகில் சுற்றி வரும்படி நியமித்தார். அப்போது பர்வதர் ஸ்ரீ சைலத்தில் தங்கித் தவம் செய்து இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கஞ்சலகுண்டதவரு :- கஞ்சம் = தாமரை. தாமரை வடிவமாக யாககுண்டம் அமைத்து யாகம் செய்வது என்பது ஒருமுறை.

கோமயத்திற்கு - பசுவின் நீர்; கஞ்சல என்பது பெயர். சுத்திக் கிரமங்கள் செய்வதற்குக் கஞ்சலம் தெளிப்பது முறை. கஞ்சலம் தெளித்து தலசுத்தி முதலியன செய்து யாகம் வளர்த்து ஆசாரசீலர்களாக வாழ்ந்தவர்கள்.
சக்கரதவரு, சக்ராலதவரு :- சங்குசக்ர முத்திரை தரித்துக் கொண்டவர். சமஸ்காரம் செய்து கொண்டவர். இவர்களுடைய சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப் பெறும்.
சங்கரதவரு :- சங்கரனை வழிபடுபவர்.
சப்தகவியவரு :- ஏழுவிதமாகக் கவி பாடுபவர்.
சரபகவியவரு :- சிங்கத்தை வெல்லும் பறவை சரபம் என்பது. எனவே சரபத்தைப் போன்று யாராலும் வெல்ல முடியாத கவிஞர் இவர்.
சஜ்ஜாதவரு :- வெள்ளிப் பெட்டியில் சிவலிங்கம் வைத்துப் பூசிப்பவர்.
ரங்கதவரு :- ஸ்ரீ ரங்கநாதனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்.
மாதனதவரு :- செல்வந்தர்கள்.
சாந்திதவரு :- அமைதியாக வாழ்பவர்.
பெக்லாலதவரு, முப்பனதவரு, முள்ளதவரு, யுர்மனதவரு, அங்கபுதவரு.

122 .பாக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மஞ்சரியதவரு :- மஞ்சரி என்னும் வியாகரண சாஸ்திரத்தில் வல்லவர்கள்.
குத்தியதவரு :-

123 .பாபால மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உள்ளினவரு :- வெங்காயம் பற்றி வந்தவொரு பெயர்.
கந்தனதவரு ;-

124 .பாவஜ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பின்னலதவரு :- நின்னலதவரு.

125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் :

இரண்டு முகங்களும், நான்கு கைகளும் கொண்ட ஒரு மகரிஷி. இரண்டு கைகளால் சர்வநமஸ்காரம் செய்து கொண்டும். இரண்டு கைகளில் இரண்டு தாமரை மலர்களைப் பிடித்துக் கொண்டும் காட்சி தருவார். நீலரத்தின ஆபரணங்களையும், சிகப்பு வஸ்திரங்களையும் அணிந்து செந்நிறமாக இருப்பார்.

பயிலவ மகரிஷியிடம் ரிக்வேதம் ஓதியவராகவும் கூறப்படுகின்றார்.

பாஸ்கரன் - சூரியன்; எனவே சூரியனின் பெயரைத் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கிதவரு :- அங்கிகள் தயாரிப்பவர்; அணிபவர்.
கச்சதவரு :- பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு வாழ்பவர்.
கந்ததவரு :- சந்தனம் அரைத்து ஆலயங்களுக்குத் தருவதைத் தொண்டாகக் கொண்டவர்.
காசிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குட்டதவரு :- சிறு குன்றுகளில் வசித்தவர்.
கோரகதவரு :- கோரகம் என்னும் ஊர்க்காரர்.
கோரண்டிதவரு :- மைசூரில் உள்ள கோரண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிந்தகிஞ்சலதவரு :- புளியங்கொட்டை பற்றி வந்தவொரு பெயர்.
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர்.
தாசரிதவரு :- திருமால் அடியார்களான தாசர்களைப் பூசிப்பவர். இவர்கள் தாமும் தாசர்களாக விளங்குபவர்கள்.
நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர்.
புனுகுதவரு :- வாசனைத் திரவியங்களுள் புனுகும் ஒன்று. இவர்கள் யாகாதி புனித காரியங்களுக்குப் புனுகு வழங்குவதைத் தொண்டாகக் கொண்டவர்கள்.
போடாதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
முத்ரம்தவரு :- சங்கு, சக்கர முத்திரை தரித்துக் கொண்டவர்.
வார்த்தாதவரு :- அழகாக வார்த்தையாட வல்லவர்.
ஜாலததவரு :- மாயா ஜாலங்கள் கற்றவர்.
ஸ்ருங்கிதவரு :- கலைக்கோட்டு முனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை வழிபடுபவர்.
ஹாஸ்யதவரு :- நகைச்சுவையாகப் பேச வல்லவர்.
பவளதவரு :- பவளம் அணிவதில் விருப்பம் உள்ளவர். பவள வியாபாரம் செய்தவர்.
பாளதவரு :- தென்னம்பாளையை வழிபாட்டில் பயன்படுத்தியவர்.
கணிதவரு :- கணித சாஸ்திரத்தில் வல்லவர்.
குசுமசித்துலதவரு, கும்மனதவரு, சிச்சுதவரு, கரசத்துதவரு, கரவத்துதவரு, பசரிதவரு, பயள்ளதவரு, பஹரதவரு, போதாதவரு, முப்பனதவரு, முள்ளுதவரு, ரபம்தவரு, ரப்பம்தவரு.

126 .பிகி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தும்மிதவரு :- தும்பைப் பூவால் சிவபிரானை வழிபடுபவர்.

127 .பிப்பல மகரிஷி கோத்ரம் :

வேதாந்த விசாரங்களில் கருத்துன்றியிருந்த ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாத்வீகதவரு :- சாந்தகுணம் கொண்டவர்.
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். சிந்தனையாளர்.
மனோமதம்தவரு :- மனத்திண்மை மிக்கவர்.
மாளகொண்டதவரு :- மாள என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ரவலதவரு :- ரவ - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகம் செய்தவர்.
ராவுலதவரு :- நாரதர் போல நன்மையில் முடியும் கலகங்களைச் செய்பவர். கலகப்பிரியர்.
கணேவட்டாரதவரு :- கணேவட்டாரம் என்னும் ஊர்க்காரர்.
கல்லுகோட்டைதவரு :- கல்லுகோட்டை என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கற்கோட்டை கட்டி வாழ்ந்தவராக இருக்கலாம்.
மனெமன்மதவரு, மன்னேதவரு, மன்னேமந்தம்தவரு, மோகட்டியதவரு, பந்துமாத்திதவரு, பந்துமொத்ததவரு.

128 .பிரதாப மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பன்னிபத்ரியதவரு :- வன்னிமர இலைகளைக் கொண்டு வழிபாடு செய்பவர்.

குசுமபூவுலதவரு :- மலர் மொட்டுக்களைக் கொண்டு மாலைகட்டி; அம்மாலைகளைத் தெய்வத்திற்குச் சாத்தி வழிபடுபவர்.

தாரணதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள்.

நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர்.

மான்யதவரு :- தம் கலைத்திறமைகளுக்காகவும் பிறவற்றிற்காகவும் அரசரிடம் மான்யம் பெற்றவர்கள்.

மதுரதவரு :- மதுராபுரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

மீனாட்சியம்மனதவரு :- மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்பவர்.

வீரண்ணதவரு :- வீரபத்திர சுவாமியை வழிபட்டு வருபவர்கள். மேலும் இவர்கள் ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் வீரமுஷ்டிகன் வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

சிந்தாலதவரு :-

129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் :

பிருங்கிமகரிஷி தேவதேவனான சிவபிரானை மட்டும் தரிசிப்பதில் பிரியம் கொண்டவர். மாம்சமில்லாத தேகம் கொண்டவர். வெண்ணிறச் சிகை கொண்டவர். தண்டம், ஜபமாலை இவற்றைத் தரித்தவர். மூன்று கண்கள் உடையவர். நிருத்தனம் செய்யும் தோற்றத்துடன் விளங்குபவர் இம் மகரிஷி.

மோட்சத்தை விரும்பிய மகரிஷி இவர். சிவபெருமானே பரம்பொருள் என நம்பிய இம்முனிவர் சிவமூர்த்தியை மட்டுமே தரிசித்து வணங்கி வந்தார். அம்பிகையை வழிபட மறுத்தார். சக்தியின் சக்தியை முனிவருக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் அம்மை.

உடம்பில் சக்தியின் அம்சங்களான உதிரம், மாம்சம் இவற்றை முனிவரின் உடலில் வற்றச் செய்தாள். நிற்க இயலாத முனிவர் நிலைத்துநிற்க மூன்றாவது காலும், கையில் ஒரு தண்டத்தினையும் இறைவன் வழங்கினான்.

இதனால் அம்பிகைதவம் இயற்றி இறைவனின் இடப்புரத்தினையும், பக்தர் வழிபாட்டில் உரிமையும் பெற்றாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காகண்டியதவரு :- ஆந்திராவில் உள்ள காகண்டி என்னும் ஊர்க்காரர்.

நிகுண்டியதவரு :- ஆந்திராவில் உள்ள நிகுண்டி என்னும் ஊர்க்காரர்.

கொஜ்ஜம்தவரு :- கர்நாடகாவில் உள்ள கொஜ்ஜம் என்னும் ஊர்க்காரர்.

மங்கலதவரு :- ஆந்திராவில் உள்ள மங்களபுரம் என்னும் ஊர்க்காரர்.

கர்ணதவரு :- கர்ணாசனம் செய்பவர்.

சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். சிந்தனையாளர்.

130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் :

129ல் கண்ட பிருங்கி மகரிஷியும், இவரும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கபிகேயதவரு :- கபி - குரங்கு, கேய - நடனம். குரங்கு போல நடனமிட்டவர்.
துளுவசேனதவரு :- துளுவதேசச் சேனைகளுக்குச் சேனைத் தலைவராக இருந்தவர்.
அடிக்யதவரு :-

131 .பிருகு மகரிஷி கோத்ரம் :

பிரம்மதேவரின் மானச புத்திரரில் இவர் ஒருவர். பிருகு மகரிஷிக்குப் புலோமிசை, கியாதி என்போர் பத்தினிகள். ஒரு முறை இம் மாமுனிவர் தம்மனைவி புலோமிசையை யாகத்திற்காக அக்நியை வளர்க்கச் சொல்லி நீராடச் சென்றார்.

கர்ப்பிணியாய் இருந்த புலோமிசையை அரக்கன் ஒருவன் தூக்கிச் சென்றான். கர்ப்பத்தில் இருந்த குழந்தை நழுவி வெளிவந்தது. குழந்தை அரக்கனை எரித்தது. நழுவிப் பிறந்ததால் அக்குழந்தைக்கு சியவனன் என்ற காரணப்பெயர் பெற்றது.

இதனை அறிந்த பிருகு மகரிஷி; அரக்கன் தன் மனைவியைத் தூக்கிச் செல்லும்போது அருகிலே இருந்தும் அவனைத் தடுக்காததால் அக்நி மீது கோபம் கொண்டார். இனி அக்நி சுத்த வஸ்த்துக்கள் அன்றி அசுத்த வஸ்த்துக்களையும் எரிக்கக் கடவன் என்று சபித்தார்.

மும்மூர்த்திகளில் சத்துவகுணம் கொண்ட மூர்த்தி யார் ? என்று அறிந்து கொள்ள மகரிஷிகள் ஒருமுறை விரும்பினார். மகரிஷிகள் பிருகு மகரிஷியைத் திரிமூர்த்திகளிடம் அனுப்பினர்.

கைலாயம் சென்ற பிறகு ருத்திரனை லிங்கவடிவமாக்கியும், சத்தியலோகம் சென்று பிரம்மனுக்குப் பூசனைகள் அற்றுப் போகும் படியும் சபித்து, வைகுண்டம் சென்றார்.

வைகுண்டநாதனை மார்பில் உதைத்தார். திருமால் அவர் கால்களைப் பிடித்து விட்டு அவரின் அகந்தையை அழித்தார். திரிமூர்த்திகளில் ஸ்ரீ மகாவிஷ்ணுவே சத்துவகுணம் கொண்ட மூர்த்தி என அறிந்து வந்து முனிவர்களுக்கு அறிவித்தார்.

வருணனுடைய சந்ததி இவர் என்று யஜூர் வேதம் முழங்கும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜாலகல்லதவரு :- ஜாலகல்ல என்னும் ஊர்க்காரர்.

மாண்டெயதவரு :- மாண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

மாடதவரு :- மாடமாளிகை கட்டி வாழ்ந்தவர். ஆலயங்களுக்கு மாடங்கள் கட்டித் தந்தவர்.

கட்லாபுரியதவரு :- கட்லாபுரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

நாசிகதவரு :- மூக்குபற்றி வந்த ஒரு பெயர்.

கும்மனதவரு :-

132 .பீமக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சிணிகியதவரு :- சிணுங்கல் குணம் கொண்டவர்.
குடகியதவரு :- குடகுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொண்டீவரதவரு :- வடகர்நாடகாவில் உள்ள கொண்டீவர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜலஸ்தம்பதவரு :- தண்ணீரைக் கட்டி அதன் மீது நடப்பதும், உள்ளே மூழ்கி அகமருஷண ஜபம் செய்வதுமாகிய யோகவன்மை மிக்கவர்.

133 .புச மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜாஜிதவரு :- ஜாதி மல்லிகை மலர்களால் வழிபடுபவர்.

134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி பௌண்ட்ர யாகம் செய்தவர். இம்முனிவர் யாகம் செய்கையில் அசுரர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் கேட்டு முனிவரைத் துன்பம் செய்தனர். உடனே முனிவர் மண்டபம் ஒன்றைச் சிருஷ்டி செய்தார். அரக்கரை மண்டபத்தில் தங்கச் செய்தார். வாத்திய கோஷங்கள் முழங்கச் செய்தார். ஒரு விதவைப் பெண்ணையும் ஒரு பிரம்மச்சாரியையும் படைத்தது இருவரையும் மண்டபத்தினுள் உரக்க விவாதம் செய்யவைத்தார். அரக்கர் வாத்திய முழக்கத்தையும், விவாதத்தினையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கையில் தேவர்க்கு அவிர்ப்பாகம் கொடுத்து யாகத்தைப் பூர்த்தி செய்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஞ்சனதவரு :- மை போட்டுப் பார்ப்பவர். பக்தியையே கண்ணிற்கு அஞ்சனமாக இடுபவர்.

உத்தரதேசதவரு :- வடதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கண்ட்ளபுலியவரு :- புலியின் கண்களைப் போன்ற கண்களை உடையவர்.

கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத்தெய்வம் வணங்குபவர்.

துபாகிதவரு :- அம்பிகைக்குரிய 32 விருதுகளில் துப்பாக்கி ஒன்று. துப்பாக்கியை விருதாகப் பிடிப்பவர்.

புலிக்கண்ணதவரு, புலிக்கண்ட்ளதவரு :- புலிக்கண்கள், புலிப்பார்வை உடையவர்.

135 .புரட்ச மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காமரூபதவரு ;- மன்மதன் போன்ற அழகான வடிவினர். காமரூப தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

136 .புருகூத மகரிஷி கோத்ரம் :

பிரகஸ்பதியின் அம்சமான ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுக்ஞானதவரு :- நல்ல ஞானம் உள்ளவர்.
படவலதவரு :- படகுகளில் பயணம் செய்தவர்.
பட்டாதவரு :- மன்னர்களிடமிருந்து பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றவர்.
குருபீடாதிபதிகளிடமிருந்தோ அல்லது சிம்மாசனாதிபதிகளிடமிருந்தோ பட்டகாரராக இருப்பதற்கு நியமனம் பெற்றவர். இந்நியமனத்திற்குப் பட்டயங்கள் வழங்குவது வழக்கம்.

137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் :

புலஸ்திய பிரம்ம மகரிஷியைச் சில இடங்களில் குலஸ்திய பிரம்ம ரிஷி என எழுதி உள்ளனர்.

புலம் என்றால் தவம். வேதங்கள் புலம் என்ற சொல்லால் தவத்தைக் குறிப்பிடுகின்றன. தவத்தால் புகழ் பெற்றவர் இம்மகரிஷி. இவர் பிரம்மாவின் புத்திரர். இவர் திருணபிந்துவின் தவச்சாலையில் தவம் செய்யுங்கால், அரம்பையர் நீரில் விளையாட அத்தவச்சாலைக்கு வந்தனர். அவர்களால் தவத்திற்குத் தொல்லைகள் வருதல் கண்டு, இனி என் கண்ணெதிரில் வரும் பெண்கள் கர்ப்பிணிகள் ஆவர் எனச் சபித்தார்.

இதனை அறியாத திருணபிந்துவின் மகள் நீர் விளையாட புலஸ்தியர் முன்வர கர்ப்பமுற்றாள். இதனை உணர்ந்த திருணபிந்து மகளைப் புலஸ்தியருக்கு மணமுடித்துத் தந்தார்.

கார்த்தவீரியார்ச்சுனன் ஒருமுறை போரில் தன்னிடம் தோற்ற இராவணனைச் சிறைப்படுத்தினான். புலஸ்தியர் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு இராவணஜித் என்னும் பட்டம் தந்து இராவணனைச் சிறை மீட்டார்.

பராசரமகரிஷி அரக்கரை அழிக்க யாகம் செய்கையில் புலஸ்தியர் அந்த யாகத்தைப் பாதியில் நிறுத்தினார். அரக்கரைப் பராசரரின் கோபத்திலிருந்து காப்பாற்றினார்.

தன் தாயான சரஸ்வதி தேவியைப் புலஸ்தியர் நதியாகப் பெறுமாறு சபித்தார். இதனால் சினங்கொண்ட சரஸ்வதி அவரை விபீஷணனாகப் பிறக்குமாறு சபித்தாள். விபீஷணன் உயர்ந்த தர்மகுணங்கொண்டு விளங்கியும், அறத்தின் வடிவமாக விளங்கியதற்கும், தத்துவ ஞானம் கொண்டு விளங்கியதற்கும் பூர்வத்தில் அவன் மாமுனிவராய் விளங்கியதே காரணமாகும். புலஸ்தியருடைய மகன் விச்ரவஸ் பிரம்மா எனப்பட்டார்.

சிவபிரானின் தோழர் என்று புகழப்படும் குபேரன் இவ்விச்ரவஸ் பிரம்மாவிற்கு இளிபிளை என்பாளிடமாகப் பிறந்தவன்.

விச்ரவஸ் பிரம்மாவின் இரண்டாம் மனைவி கேகசி என்பாள். இவர்களுக்கு இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன் ஆகியோர் பிறந்தனர் என்பது இராமாயணத்துள் காணப்படும் வரலாறு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கருடாஜலதவரு :- திருப்பதிக்குக் கருடாஜலம் என்பது ஒரு பெயர். இக்கருடாஜலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கலிகொட்டுதவரு :- கலிகொண்டு என்னும் ஊர்க்காரர்.

கண்டதவரு :- அழகான கழுத்துடையவர்.

கும்மள்ளதவரு :- கும்மள்ள என்னும் ஊர்க்காரர்.

கொண்டெம்தவரு :- கொடெம் என்னும் ஊர்க்காரர்.

கொலுகுலுதவரு :- கொலுகுலு என்னும் ஊர்க்காரர்.

கோவூரிதவரு :- கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சுக்ஞானதவரு :- நல்லஞானம் உள்ளவர்.

சுந்தரதவரு :- உடல் அழகும், குண அழகும் மிக்கவர்.

நாணயதவரு :- நாநயம், நாணயம் மிக்கவர்.

நிம்பிண்டிதவரு :- எலுமிச்சம் பழம் மந்தரித்துத் தந்தவர்.

புண்யதவரு :- புண்ணியச் செயல்கள் அனேகம் செய்தவர்.

ராவூரிதவரு :- ஆந்திராவில் உள்ள ராவூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆசெபுதவரு, சகூலதவரு, சந்துதவரு, சன்னாதவரு, பாசிதவரு, புட்டாதவரு, புல்லாலதவரு, பெண்டுதவரு, மத்தியகோடிதவரு, வுண்டலதவரு, வுப்புதவரு.

138 .போக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தந்தம்செட்டிதவரு ;- இவ்வம்சத்தில் தந்த ஸ்ரேஷ்டி என்பவர் புகழ் பெற்றவர். அவர் வம்சா வழியினர்.

139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாரம்தவரு :- ஸ்ரீ காரம் என்னும் சக்தியின் பீஜ மந்திர ஜெபம் செய்பவர்கள்.
யாக்ஞவல்கியதவரு :- யாக்ஞவல்கிய சூத்திரத்தை அனுஷ்டானம் செய்பவர்கள்.

140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மஞ்சூரிதவரு :- லாபமான செயல்களைச் செய்பவர்.
யாதாளதவரு :- யாதாள என்னும் ஊர்க்காரர்.

141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் :

131ல் கண்ட பிருகுவும் இவரும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்கிதவரு :- கல்கி அவதார பூசனை செய்பவர்.

கிணிபள்ளிதவரு :- கிணிபள்ளி என்னும் ஊரினர்.

குவ்வலதவரு :- சிட்டுக் குருவிக்கு உணவிடும் வழக்கம் கொண்டவர்.

கொனபலிதவரு :- கொனபலி என்னும் ஊரினர்.

சிம்மவாஹனதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி ஆலயத்திற்குச் சிம்மவாகனம் தந்தவர்.

சீலவந்ததவரு :- நற்குண சீலர்கள்.

சில்பதவரு :- சிற்ப சாஸ்திரத்தில் வல்லவர்கள்.

சிவபுஜங்கதவரு :- சிவபிரானின் புஜத்தில் ஆபரணமாக விளங்குவது நாகம். அந்நாகத்தினைப் பூசிப்பவர். தோளில் சிவலிங்க வடிவிலான ஆபரணத்தை அணிபவர்.

சொக்கதவரு :- தூய்மை மிக்கவர் - சொக்கத் தங்கம் என்றால் கலப்பில்லாத தங்கம் என்று பொருள். அதுபோல் இவர்கள் கலப்பு இல்லாத தூயகுணம் கொண்டவர்.

தந்துலதவரு :- நூல் மந்தரித்துத் தருபவர்.

தாம்பூலார்ச்சனதவரு :- தாம்பூலத்தினால் அர்ச்சனை செய்பவர்.

தேவபக்திதவரு :- தெய்வ பக்தி மிக்கவர்.

நாகதேவியவரு :- நாகதேவி வழிபாடு செய்பவர். மூத்த குழந்தைக்கு ஆணாயின் நாகப்பன் என்றும், பெண்ணாயின் நாகம்மா, நாகவல்லி என்றும் பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

பிட்டகூடினவரு :- குழந்தைகளுக்கு உணவு வழங்கும் தருமத்தைச் செய்பவர்.

பூஷணதவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர். குலத்திற்கு பூஷணம் போன்றவர்.

போக்கியதவரு :- போகபாக்யங்களுடன் வாழ்பவர்.

மட்டிகூடிதவரு :- மட்டிகூடி என்னும் ஊர்க்காரர்.

மான்யதவரு :- மன்னர்களிடம் மான்யம் பெற்றவர்.

மாவூரிதவரு :- மாவூர் என்னும் ஊரினர்.

பாபகதவரு :- நேர்வகிடு எடுத்துக் கூந்தலை அழகுபடுத்திக் கொள்பவர்.

குத்தலதவரு :- குத்தாலம் என்னும் ஊரினர்.

புத்திகூடிதவரு :- புத்திசாலித்தனம் மிக்கவர்.

மதிகுடதவரு :- இப்பெயர் மதிகூடிதவரு என்று இருக்கவேண்டும். அறிவாளிகள்.

கம்மதவரு, கரெதவரு, காளபினிதவரு, குண்ட்ளதவரு, கும்மதவரு, கெரெமலிதவரு, கொசனம்தவரு, சந்துதவரு, சம்பாதவரு, சலபத்துதவரு, சலவந்துதவரு, சிங்குலதவரு, சிடபாகலதவரு, சிரபத்துதவரு, சிலவன்தம்தவரு, சொகசுதவரு, தட்டிதவரு, நன்சகதவரு, நாகதேபிதவரு, நாசகதவரு, பகொம்தவரு, பாவகம்தவரு, பவ்வாகுதவரு, பிடனதவரு, பூசினதவரு, போகிதவரு, போதுலதவரு, மத்யகோடிதவரு, மாதாதவரு, மாதெம்தவரு, மாரம்தவரு, மாரெதவரு, மாவாதவரு, மிண்டாதவரு, மோசிம்தவரு, யிண்டிலதவரு, ஜக்குலதவரு, ஜிக்குலதவரு, ஜீகுலதவரு, ஸாஸ்கதவரு.

142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் :

192ல் கண்ட பிருங்கி மகரிஷியும், 130ல் கண்ட பிருங்க தேவ மகரிஷியும், இந்த ப்ருங்கி மகரிஷியும் ஆக இம்மூவரும் ஒருவரே. ப்ருங்கி என்னும் பெயரைத் தமிழில் பிருங்கி என எழுதுவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தேவபக்திதவரு :- தெய்வபக்தி மிக்கவர்
நாடகதவரு :- நாடகக்கலையில் வல்லவர்.
போகம்தவரு :- சுகபோகமாக வாழ்பவர்.
மாண்டவ்யதவரு :- மாண்டவ்ய மகரிஷியை வணங்குபவர்.
மதிகூடிதவரு :- அறிவாளிகள்.
கங்குலதவரு, கண்ட்ளதவரு, கரெதவரு, குண்ட்லதவரு, கும்மனதவரு, போக்கிதவரு, போகின்சுதவரு, மாரெம்தவரு.

143 . ப்ருந்த தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜானகல்லிதாரு :- ஜானகல்லி என்னும் ஊர்க்காரர்.
கன்னடியவரு :- கன்னட மொழி பேசுபவர்.

144 .புனர் தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொஜ்ஜம்வாரு ;-

145 .மஞ்சுள மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மூகலதவரு :-

146 .மதங்க மகரிஷி கோத்ரம் :

மதங்க மகரிஷிக்கும் அவர் தம் சீடர்களுக்கும் சபரி சேவை செய்து வந்தாள். இம் மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவர் இவரை சத்தியலோகத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் சபரியோ சத்தியலோகத்திற்குச் செல்லாமல் அவ்வுலகத்தை வேண்டாம் என மறுத்தாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த இராமபிரானை உபசரித்து அவனால் பரமபதம் பெற்றாள்.

மதங்கமாமுனிவரின் மாதவச் செல்வியாக, மகளாகக் காளிதேவி கருதப்படுகின்றனர். பிரியம்வதன் என்னும் கந்தருவனை; அவன் செய்த தவற்றிற்காக யானையாகச் சபித்தார் முனிவர். சூரியனிடமிருந்து இந்திரத்தநு என்னும் வில்லைப் பெற்று அதனைப் பரசுராம மூர்த்திக்குத் தந்தார் இம்முனிவர்.

துந்துபி என்னும் அசுரனுடன் போர்புரிந்து அவனைக் கொன்றான் வாலி. பின் அசுரன் உடலைத் தூக்கி எரிய இரத்தம் முதலியன இம்முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது கோபம் கொண்ட முனிவர், இனி ஆசிரமத்தின் எல்லையை, ரிஷ்ய முக பர்வதத்தின் எல்லையை மிதித்தால் தலை வெடித்து இறப்பாய் என வாலியைச் சபித்தார். இச்சாபம்தான் வாலியிடமிருந்து சுக்ரீவன் உயிர் பிழைத்து வாழ்வதற்குக் காரணமாய் அமைந்தது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாசரிதவரு :- திருமால் அடியார்களை வழிபடுபவர். பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டு தாசராக தாசாங்கம் மேற்கொண்டவர்.
தெளரிஜன்யதவரு :- தைரியம் மிக்கவர்.
லக்கிம்செட்டிவவரு :- இவ்வம்சத்தில் லக்கிம்ஸ்ரேஷ்டி என்பவர் புகழ்பெற்றவர். அவர் வம்சத்தினர். அதிர்ஷ்டசாலிகள். ஜானதவரு :- குயுக்தி மிக்கவர், தந்திரசாலிகள். லிங்கதவரு :- லிங்க தீட்சை பெற்றுக்கொண்டவர்.

147 .மநு மகரிஷி கோத்ரம் :

சிருஷ்டியின் ஆதியில் பூமியைக் காக்க இறைவனால் நியமிக்கப்பட்டவர். இவரால் செய்யப்பட்டது மநுதர்ம சாஸ்திரம்.

ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்திரங்கள் நடைபெறும். மன்வந்திரம் என்பது மநுவின் ஆட்சிக்காலம். ஒரு கல்பத்தினுள் பதினான்கு மநுக்களின் ஆட்சி முடிவுற்றபின் பிரளயம் நடைபெறும்.

தற்பொழுது நடைபெறும் கல்பம் ஸ்வேத வராக கல்பம்.

இக்கல்பத்தின் மநுக்களாவார்.
1) ஸ்வாயம்புவர்
2) ஸ்வாரோசிஷர்
3) உத்தமர்
4) தாமஸர்
5) ரைவதர்
6) சாக்ஷூஷர்
7) வைவஸ்வதர்
8) ஸாவர்ணி
9) தக்ஷஸாவர்ணி
10) ப்ரஹ்மஸாவர்ணி
11) தர்மஸாவர்ணி
12) ருத்ரஸாவர்ணி
13) ரெளச்யர்
14) பௌத்யர் என்போர்
தற்பொழுது நடைபெறும் மன்வந்திரம் ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம் ஆகும். "ஸ்வேத வராக கல்பே வைவஸ்வத மன்வந்ரே ", என்னும் மஹா சங்கல்ப மந்திரத்தினால் இதனை உணரலாம்.

விவஸ்வானு என்னும் சூரியனுக்கும், ஸம்க்ஞைக்கும் பிறந்தவர் சிராத்ததேவர் என்ற பெயர் கொண்ட வைவஸ்வதர். இவருடன் யமனும் யமுனையும் பிறந்தனர்.

சென்ற கல்பத்தில் பிரம்மதேவர் யோக நித்திரை அடையும் பொழுது வேதங்கள் நழுவிக் கீழே விழ அவற்றை ஹயக்ரீவன் என்ற அசுரன் கவர்ந்து கொண்டான். சத்தியவிரதன் என்ற அரசன் தர்ப்பணம் செய்து கொண்டு இருக்கையில் அவனுடைய கையில் இருக்கும் தண்ணீரில், சிறு மீன் ஒன்று தோன்றியது. அம்மீனைத் தண்ணீரில் விட மன்னன் முயன்றான். ஆனால் மீனோ தன்னை எடுத்துக்கொண்டு போகும்படி கேட்டது. அரசன் மீனை எடுத்துச் சென்றான். ஒரு பாத்திரத்தில் அதனை விட்டான். உடனே மீன் பாத்திரத்தின் அளவாகப் பெருத்தது.

அது வரவரப் பருத்து ஏரிகள் நதிகள் ஒன்றிலும் அடங்காமல் வளந்தது. இம்மீன் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மச்சாவதாரம் என அரசன் உணர்ந்தான். அவதாரமான மீனை எடுத்துக்கொண்டு அதனைச் சமுத்திரத்தில் விடச் சென்றான் சத்தியவிரதன்.

மீன் அவனைத் தடுத்தது. சத்தியவிரதா! இன்றைக்கு ஏழாவது நாள் மூன்று லோகங்களும் ஜலப்பிரளயத்தால் மூடப்பெரும். அப்போது ஒரு படகு நீ இருக்கும் இடத்திற்கு வரும். சகல ஒளஷதிகள், விதைகள் மிருகங்கள், ஸப்தரிஷிகளுடன் நீ படகில் போய் இரு! படகு காற்றால் அசைக்கப்படும் பொழுது நீ ஒரு சாப்பத்தால் படகை என் தேகத்தில் இணைத்துக் கட்டு. நான் பிரளய ஜலத்தில் சஞ்சரித்துக் கொண்டே பிரம்மா விழிக்கும் வரை உன்னைக் காப்பாற்றுவேன். உத்தமமான பிரம்மவித்தையை உனக்கு உபதேசிக்கின்றேன். சூட்சுமமான அவ்வித்தையை உணர்ந்து கொள்! என்று அருளி மறைந்தது.

இந்தச் சத்திய விரதனே! சிரார்த்த தேவர் ஆகி இம் மன்வந்திரத்தின் மநுவாக ஆட்சி புரிகின்றனர்.

இனி சென்ற கல்பத்தில் சிவபிரானின் பாலநேத்திரம் எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து அக்நிமது என்பவர் அவதாரம் செய்து தேவர்கள் மகரிஷிகள் முதலான அனைவருக்கும் ஆடையும், பூநூலும் வழங்கினார். இந்த ஸ்வேதவராக கல்பத்தின் துவக்கத்தில் ஆடையற்றிருந்த தேவர்கள் பிரம்மாவை வேண்ட பிரம்மா அனைவரயும் சிவபிரானிடம் அழைத்துச் சென்று பெருமானே! உம் இதயத்தில் சாயுஜ்ஜியம் பெற்று இருக்கின்ற அக்நி மநுவை வஸ்திரங்களும், பூநுலூம் தருதற்கு அனுப்ப வேண்டும் என்று சிவபிரானிடம் வேண்டிக் கொண்டார்.

எனவே தேவாங்க அவதாரம் முன் கல்பத்தில் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த அக்நிமது.

இந்தக் கல்பத்தில் தேவர் முதலான ஏழு அவதாரங்கள் எனத் தெளிந்து உணர்தல் வேண்டும்.

இக்காரணத்தால் தேவாங்கர் மநுர்குல தேவாங்கர் என அழைக்கப்படுகின்றனர்.

மநீஷ : பாலசசஷூம்ச அக்நிநாமநூருத்தித: பிரபதிஸ் ஸூர்ய கோவிந்தோ தேவாங்கோ தேவப்ராஹ்மண;

என்ற பிரம்மாண்ட புராணச் சுலோகம் காண்க.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொஜ்ஜேலாரு :- போஜள்ளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கஞ்சுகாவடியவரு :- கஞ்சுகா - ரவிக்கை. கஞ்சுகாதானம், ரவிக்கை தானம் செய்தவர். ஸ்ரீ சைலத்தில் இவர்கள் தெய்வங்களுக்கு ரவிக்கைத் துண்டு இன்றும் தருகின்றனர்.

ஆவுலபல்லிதவரு :- ஆவுனஹள்ளி என்னும் ஊரினர்.

உங்குராலதவரு :- மோதிரம் அணிந்தவர்.

கன்னிகாதானதவரு :- கன்னிகாதானம் நடக்க உதவியவர். திருமணம் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களுக்குப் பொருள் உதவி செய்து திருமணம் நடக்க உதவியவர்.

இத்தருமத்தினை மாபெரும் தருமமாகத் தேவாங்கர் கருதினர். இன்றும் தேவாங்கர் பலர் திருமணச் சேலை, வேட்டிகள் எடுத்துத் தருவது, தாலி செய்து தருவது முதலான பல திருமணம் தொடர்பான தருமங்களை ஜாதி வேறுபாடு கருதாமல் செய்து வருகின்றனர்.

இந்நூற்றாண்டில் இத்தருமத்தினைத் தம் வாழ்நாளில் செய்து பெரும் பெயர் பெற்ற பெருந்தகை. சர்.பிட்டி.தியாகராஜ செட்டியார் ஆவார். இப்பெருமானின் இல்லத்தில் புது வேட்டிகளும் சேலைகளும் எப்பொழுதும் தயாராக இருக்கும். திருமணம் என்று யார் சென்றாலும் மணமகனுக்கு வேட்டி துண்டு ஆகியனவும், மணமகளுக்குச் சேலை, ரவிக்கை, தாலி ஆகியனவும் வேறுபாடு கருதாமல் தானம் செய்த உத்தமர் இவர்.

குண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அக்நி குண்டம் இறங்க முன்னுரிமை பெற்றவர். தம் இல்லத்தில் அக்நிஹோத்ரம் முதலான யாககுண்ட காரியங்களைத் தவறாது செய்பவர்.

கொண்டதவரு :- வடகர்நாடகம் தென்மகாராஷ்டிரம் பகுதிகளில் கொண்டதவரு வங்குசத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தெய்வ வழிபாடு செய்கின்றனர்.

கோகலதவரு :- வஸ்திர தானம் செய்தவர்.

சாமந்திதவரு :- குலதெய்வத்திற்குச் சாமந்திப் பூ மாலை சாத்தி வழிபடுபவர்.

சிருங்காரதவரு :- அலங்காரத்தில் விருப்பம் மிக்கவர்.

சிவஞானதவரு :- சிவ ஞானம் பெற்றவர்.

தட்டிதவரு :- தட்டி நெய்பவர்.

தாசுமையதவரு :- பெருமாளை வழிபடுபவர். தாசர்களை வழிபடுபவர்.

தாலீபத்ரதவரு :- தாலீபத்ரம் - பனை ஓலை. ஓலைச்சுவடிகள் வைத்து இருந்தவர். முன் நாட்களில் ஜாதகம், திருமண நிச்சயங்கள் முதாலானவை ஓலைகளில் எழுதப்படும். அதற்கான ஓலைகளை வைத்து இருந்தவர்.

துபாகினவரு ;- அம்மனுக்குரிய 32 விருதுகளில் துப்பாக்கியும் ஒன்று, துப்பாக்கி விருது பிடிப்பவர்.

நாகார்ஜூனதவரு :- நாகார்ஜூன மழைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பாபகதவரு :- நேர்வகிடு எடுத்துக் கொள்பவர்.

பாபட்லதவரு :- வகிடு எடுத்துத் தலை அலங்காரம் செய்து கொள்பவர்.

பால்யதவரு :- பாலர்களுக்கு உணவு தானம் செய்தவர். இன்னும் ஸ்ரீ ராமநவமி முதலான விழாக் காலங்களில் " அயிக்குளு விருந்து " என சிறுவர்களுக்கு விருந்திடும் பழக்கம் உள்ளது.

பாலேலாரு :- பாலபரமேஸ்வரியை வழிபடுபவர்.

பிண்டிகூரதவரு :- பிண்டி - மாவு, கூரம் - பதார்த்தம் மாவுப் பதார்த்தங்களை விரும்பி உண்பவர்.

பிருந்தாவனதவரு :- துளசி மடம் - வீட்டில் பிருந்தாவனம் கட்டி வழிபடுபவர்.

பில்வபத்ரதவரு :- வில்வ தளைகளால் பூசனை செய்பவர்.

புல்லகதவரு :- ஆண்மை மிக்கவர்.

பென்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரினர்.

போஜனதவரு :- போஜன மரத்தடியில் வழிபாடு செய்பவர்.

முக்கரதவரு :- மூக்குத்தி அணிபவர்.

முத்யாலதவரு :- முத்துக்களை அணிபவர். முத்து வணிகர்.

முத்கலதவரு :- முத்கலம் - ஒரு வகைச் செடிப்பூ. இப்பூ பூத்து இருக்கும் செடிக்கடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.

ரெட்டிபல்லிதவரு :- அநந்தபூர் கதிரி செல்லும் வழியில் உள்ள ரெட்டிபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோசலதவரு :- கோசல தேசத்தைச் சேர்ந்தவர்.

தத்வதவரு :- தத்துவ ஞானம் மிக்கவர்.

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர்.

பட்டாதவரு :- மன்னர்களிடம் பட்டயம் பெற்றவர். பட்டக்காரராக இருக்க குருபீடாதிபதிகளிடமும், சிம்மாசனாதிபதிகளிடமும் பட்டயம் பெற்றவர்.

அச்சாச்சாரிதவரு, கம்மிகாவனதவரு, கரெதவரு, குந்தியம்தவரு, கூகடிதவரு, தாளம்தவரு, நாகாப்பரதவரு, பீரம்தவரு, போஜிதவரு, போஜூலதவரு, முடெதவரு, ரட்டிதவரு, ரெட்டிதவரு, விய்யாதிதவரு, சில்வாரொளி பாலிதாரு.

148 .மநுவாம மகரிஷி கோத்ரம் :

மநுவும், மநுவாம மகரிஷியும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்மி பாவாட தவரு :- கம்மிபாவாட என்று அழைக்கப்பெறும் பாவாடை நெய்பவர்கள். ஸ்ரீ சைலத்தில் கொடியேற்றத்திற்காக தேவாங்கர்களால் நெய்யப்படும் பாவாடைக்குக் கம்மிபாவாடை என்று பெயர்.

இப்பாவாடை ஒரு முழ அகலமும், 365 முழ நீளமும் உடையது. இன்றைக்கும் ஸ்ரீ சைலத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து இக்கொடிப் பாவாடையை நெய்து எடுத்துக் கொண்டு தேவாங்கர்கள் வருவார்கள் திருக்கோயில் மரியாதைகளுடன் இவர்கள் எதிர்கொண்டு அழைக்கப்படுகின்றார்கள்.

இரண்டு தறிகளைப் பூட்டிக் கொண்டு ஒன்றில் ஆண்டவன் தொண்டிற்கு நெய்வதும் மற்றொரு தறியில் குடும்ப வாழ்க்கைக்குமாக நெசவு நெய்கின்றனர். தினமும் காலையில் ஒரு தறியில் ஆண்டவனுக்காக ஒரு முழம் நெய்து விட்டு, அதன் பின் மற்றொரு தறியில் குடும்ப ஜீவனத்திற்காக நெய்வதும் இவர்களின் வழக்கம்.

தினம் ஒரு முழமாக நெய்து ஓர் ஆண்டில் 365 முழம் நெய்து, இப்பாவாடையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு வருவர். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சைலம் பிரம்மோற்சவவத்தில் நடைபெறும் காட்சி இது.

சீராளா, சோமவார்பேட்டை முதலான ஊர்களில் இருந்தும் மற்றும் பல ஊர்களிலிருந்தும் இவ்வூர்வலம் வரும்.

ஸ்ரீ சைல மூலஸ்தான விமான கோபுரத்திலிருந்து வேமாரெட்டி கோபுரம், சிவலிங்கம், நந்தி, துவஜஸ்தம்பம் ஆகியனவற்றில் இப்பாவாடையைச் சுற்றி முடிவில் கொடியாக ஏற்றுவது இன்றளவும் உள்ள ஒரு வழக்கம்.

தேவாங்கர்களுக்கு கொடியேற்றும் கட்டளையாக உள்ள சில திருத்தலங்கள் வருமாறு :-

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிப் பெருமாள் ஆலயம், மரக்கோட்டை சின்ன திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயம், திருவண்ணாமலை, திருவதிகைவீரட்டானம், ஸ்ரீசைலம் முதலான ஆலயங்கள்.

இன்னும் பல ஆலயங்களிலும் இக்கட்டளைகள் இருக்கலாம்.

கோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சல்யதவரு :- பூமிக்குள் சல்ய தோஷம் என்னும் ஒருவகைத் தோஷம் உண்டு. இத்தோஷத்தைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்யும் ஆற்றலுடையவர்.

சிவக்ஞானதவரு :- சிவஞானம் மிக்கவர்.

தத்துவதவரு :- தத்துவ சாஸ்திரத்தில் வல்லவர்.

தபசுதவரு :- ஜெபதபங்களில் வல்லவர்.

தொடுபுதவரு :- துணையுடன் செல்பவர்கள்.

தொட்டதவரு :- பெரியவர்கள்.

நாகாபரணதவரு :- நாகவடிவில் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிபவர்.

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர்.

பின்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ப்ரபுதவரு :- மைசூரில் உள்ள ப்ரபு ஸ்வாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.

வட்டிகாசுலதவரு :- வட்டிக்காசு வாங்கியவர்.

உங்ராலதவரு :- மோதிரம் அணிபவர்.

தபம்தவரு :- தவத்தில் வல்லவர்.

அவினதவரு, கொட்டெம்தவரு, கொஜ்ஜம்தவரு, வைகடகதவரு.

குறிப்பு :- மநுமகரிஷி கோத்ரம், மநுவாம மகரிஷி கோத்ரம் இரண்டிலும் வங்குசங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. மகரிஷிகளின் பெயர் ஒற்றுமை, மற்றும் வங்குசங்கள் ஒன்றாகவே காணப்படுதல் என்னும் இக்காரணங்களால் இவ்விரண்டு கோத்ரங்களும் ஒன்று எனக் கருத இடம் உண்டு.

149 .மரீசி மகரிஷி கோத்ரம் :

பிரம்மாவின் மனதில் உதித்தவர் மரீசி மகரிஷி. இவருடைய மனைவி கலை என்பாள். காச்யப மகரிஷி இவருடைய குமாரர். இவர் மகள் பூர்ணிமா. மரீசி பிரஜாபதிகளுள் ஒருவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சின்னராஜதவரு :- சின்னராஜன் வம்சாவழியினர்.

150 .மத்ஸய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஆனெயதவரு :- யானை கட்டி வாழ்ந்த செல்வந்தர்கள். இவர்கள் யானை மீது பவனிவரும் வழக்கமுடையவர்.
குதிரெயதவரு ;- குதிரை மீது பவனி வரும் வழக்கம் உடையவர். குதிரைச் செல்வம் நிரம்ப உடையவர்கள்.

151 .மத்திர தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குரிய விருதுகள் 32 அவற்றுள் பாணம் ஒன்று. பாண விருதினைப் பிடித்து வருபவர்கள்.
சரிகெயதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனங்களுள் சரியா\ மார்க்கத்தில் வல்லவர்கள்.
பக்திமாலிகதவரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். சிறந்த பக்திமான்கள்.

152 .மல்லா தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹொன்னதவரு :- தங்க நிறம் கொண்டவர். தங்க வணிகம் செய்தவர். தங்க நகை அணிபவர். தங்கம் போன்ற குணம் உடையவர்.
ஹொன்னங்கதவரு :- தங்க நிறமான அங்கங்களை உடையவர்.
பசசூரதவரு :-

153 .மனோரம மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்மிதவரு :-

154 .மாண்டவ்ய மகரிஷி கோத்ரம் :

சாளுவ மன்னன் பொக்கிஷத்தைக் கள்வர் சிலர் கொள்ளையிட்டனர். கொள்ளையரைத் துரத்திக்கொண்டு காவலர் சென்றனர். காவர்க்கு அஞ்சி ஓடிய கள்வர்கள் மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரமத்துனுள் நுழைந்தனர். காவலர் ஆசிரமத்தினுள் வந்து கள்வரைப் பிடித்தனர். களவு போன பொருட்களைக் கள்வர் ஆசிரமத்தினுள் போட்டு வைத்திருந்தனர். கள்வர்களும், களவு போன பொருள்களும் ஆசிரமத்துள் இருந்தமையால், யோகத்தில் ஆழ்ந்திருந்த முனிவரையும் கள்வன் எனக் காவலர் எண்ணி யோகநிலையிலிருந்த அவரையும், கள்வர்களையும் மன்னன்முன் கொண்டு சென்றனர் காவலர். விசாரணையில் முனிவர் வாய் பேசாது இருந்தார். கள்வர்களும்; பொருள்களும் ஆசிரமத்தினுள் இருந்ததைக் காவலர் மன்னனுக்கு அறிவித்தனர். அனைவரயும் கழுவில் ஏற்றுமாறு மன்னன் ஆணையிட்டான்.

அனைவரும் கழுவில் ஏற்றப்பட்டனர். யோகம் கலைந்து முனிவர் நினைவிற்கு வந்தபோது தாம் கழுவில் ஏற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தார். மீண்டும் யோகத்தினால் தம் உடம்பினைக் காற்றைப் போல் லேசானதாக மாற்றிக் கொண்டு முனிவர் கழுவில் இருந்தார்.

இந்நிலையில் தன் கணவர் மௌத்கல்யரைக் கூடையில் ஏந்திக்கொண்டு வந்தாள் நளாயினி. கூடை மாண்டவ்யரின் காலில் பட்டது. கழுவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முனிவருக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது.

" இந்த இரவு விடிந்தவுடன் உன் மாங்கல்யம் அறக்கடவது " என முனிவர் சாபம் இட்டார். " விடிந்தால் தானே மாங்கல்யம் அறும்; விடியாமல் இருக்கக் கடவது, " என நளாயினி மரு சாபம் இட்டாள்.

இதனால் எந்தக் காரியங்களும் நிகழவில்லை. தேவ காரியங்கள் தடைபட்டன. திரிமூர்த்திகளும் இந்திராதி தேவர்களும் வந்து இருவரையும் சமாதானப் படுத்தி இருவருக்கும் நன்மை ஏற்படும் வண்ணம் ஓர் ஏற்பாட்டினைச் செய்தனர். பொழுது விடிந்தது மௌத்கல்யர் இறந்து பின் பிழைத்தார்.

இதனைச் சாளுவ மன்னன் உணர்ந்து வருந்தினான். முனிவருக்கு இழைத்த பிழைக்கு வருந்தி அவரைக் கழுவிலிருந்து இறக்கினான். கழுமுனை அவர் பிடரி வழியே பொத்துக்கொண்டு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. அதனை எடுக்க வழியில்லாது அப்படியே விட்டனர்.

முனிவர் அவ்வாணியில் பூக்கடலையைத் தொங்க விட்டுக் கொண்டார். இதனால் அவருக்கு ஆணிமாண்டவ்யர் என்ற பெயர் உண்டாயிற்று.

ஆணிமாண்டவ்யர் யமனை அழைத்தார். எந்தத் தவரும் இழைக்காத எனக்குக் கழுவில் தொங்கும் தண்டனையை ஏன் விதித்தாய் எனக் கேட்டார். சிறுவயதில் தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் அவற்றின் பின்புறத்தில் முள்ளால் குத்தி விளையாடியதை நினைவுறுத்தி அதனாலேயே இத்தண்டனை என்றான் எமன்.

" யமனே! அறியாப் பருவத்தில் செய்த தவ்ற்றினுக்குக் கடுந்தண்டனை விதித்தாய்; எனவே நீயும் மனிதனாய்ப் பிறப்பாய் " என்று சபித்து, இனி பாலகர் செய்யும் தவறுகளை பாவமாகக் கருத் வேண்டாம் என ஆணையிட்டார்.

மாண்டவ்யரின் சாபத்தினை ஏற்ற யமன் விதுரனாகப் பிறந்தான் என்பது பாரதத்தினுள் காணப்படும் வரலாறு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பக்திமால்யதவரு - பஹூத்மல்லனாரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். பக்திமால்யதவரு என்ற பெயர்தான் பஹூத்மல்லனாரு என்று அழைக்கப்படுகின்றது.

கட்டியதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அம்மனுடைய திருக்குணங்களையும் வீரதீர பராக்கிராமங்களையும் கட்டியமாக கூறுபவர்.

குச்சுதவரு :- மலர்க் குச்சுகட்டி வாழ்ந்தவர்.

குஜ்ஜலதவரு :- கர்நாடகாவில் உள்ள குஜ்ஜலம் என்னும் ஊர்க்காரர்.

சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனகங்களுள் சரியைச் சாதனத்தில் வல்லவர்.

சீதளாதவரு :- பதினாறு வகைச் சக்திகளுள் ஒரு சக்தியான சீதளாதேவியை வழிபடுபவர்.

ஸ்தம்பிதவரு :- சுவாசத்தைத் தம்பிக்கச் செய்பவர். இது யோக முறைகளுள் ஒன்று.

தர்க்கதவரு :- தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்.

துளசதவரு :- துளசிச்செடி அடியில் வழிபாடு நிகழ்த்துபவர்.

நிதானதவரு :- அமைதியானவர்.

பஞ்சரதவரு :- கிளியை வளர்ப்பவர்.

பண்ணசரதவரு :- சிவத்த உடல் கொண்டவர்.

பிரசங்கதவரு :- பிரசங்கம் செய்பவர்.

மன்னாதவரு :- மண்ணேதவரு என்று வழங்கப்படுகின்றது. தவறுகளை மன்னிக்கும் இயல்புடையவர்.

மிஞ்சுதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர்.

மீமாம்சதவரு :- மீமாம்ச சாஸ்திரங்களில் வல்லவர்.

மெட்லதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர்.

மேடம்தவரு :- மேடை அமைத்துக் கம்பளி விரித்து அமர வேண்டிய செட்டிகாரர்.

யெல்லஇண்டிதவரு :- எல்லை வீட்டுக்காரர்.

மேதனம்தவரு :- மேதாவி, மேதை.

வெகுளிதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர்.

வியாபமானிதவரு :- வேப்பமரத்துக்காரர்.

கஞ்சியதவரு :- காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பெள்ளியதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர்.

ஸ்ரீ தாளதவரு :- பனையில் ஆண்பனை, பெண்பனை என இருவகை உண்டு. இவர்கள் பெண்பனை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர்.

பர்ணதவரு :- பர்ணக சாலை கட்டி தவவாழ்க்கை வாழ்ந்தவர். இவர்கள் இன்று ஆந்திராவில் அதிகமாக வசிக்கின்றனர்.

கிட்டிதவரு, கிட்டதவரு, கிட்டெம்தவரு, கிண்டானதவரு, கிண்டிதவரு, சீதாதவரு, துனியாதவரு, தொலதவரு, மிண்டுலதவரு, வெஜூலதவரு, ஜூஜஜூதவரு, எஞ்ஜலதவரு, தொகலதவரு, ஜூஜிலதவரு.

155 .மார்க்கண்டேய மகரிஷி கோத்ரம் :

மிருகண்டு மகரிஷிக்கும், மருத்துவதிக்கும் பிறந்தவர் மார்க்கண்டேயர். பிள்ளையில்லாமலிருந்த மிருகண்டு மகரிஷி சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் செய்தார். அவருக்குத் தரிசனம் தந்த இறைவன் அஞ்ஞானமும், நோயும், தீர்க்காயுளும் உள்ள அநேக புதல்வர்கள் வேண்டுமா ? அல்லது ஞானமும், சிறந்த ஒழுக்கமும், பதினாறு வயது ஆயுளும் உள்ள ஒரு புதல்வன் வேண்டுமா ? என வினவ; மிருகண்டு ஞானமும் ஒழுக்கமும் பதினாறு வயது ஆயுளும் உள்ள ஒரு மகன் வேண்டும் என வரம் பெற்றார்.
வரத்தின் பயனாய் உதித்தவர்தான் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு ஆனது. அவரை அழைத்துச் செல்ல யமன் வந்தான். மார்க்கண்டேயரின் தவாக்கினியைத் தாண்டி யமனால் அவரை அணுக முடியவில்லை. மார்க்கண்டேயரோ சிவத்தியானத்தினுள் மூழ்கியிருந்தார். உள்ளே செல்ல இயலாத யமன் பாசத்தினை வீசினான். அகோர மூர்த்தமாக எழுந்த சிவபிரான் தன் அன்பனுக்காக யமனை காலால் உதைத்தார். காலன் காலமானான்.
விதியை இறைவன் தன் மதியால் மாற்றினான். மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு ஆண்டுகள் ஆயுளாக இருக்க அருள் பாலித்தார். பின் பூதேவியின் வேண்டுதலால் யமனை உயிர்ப்பித்தார் இறைவன்.
வனவாச காலத்தில் மார்க்கண்டேயர் பாண்டவரைச் சந்தித்தார். தருமபுத்திரனுக்கு அநேக தருமங்கள் உபதேசித்தார்.
ஒரு சர்வ சங்கார பிரளயகாலத்தில் ஆலந்தளிரில் வடபத்ர சாயியாய்! பச்சிளம் பாலகனாய் மிதந்த ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைத் தரிசித்தார். எம்பெருமானின் திருவாயினுள் நுழைந்து சென்று அவன் திருவயிற்றினுள் அண்டசராசங்களும், சகல ஜீவன்களும், எல்லாதேவர்களும் இருப்பதைக் கண்டார்.
மார்க்கண்டேயர் அநேக பிரளயங்களைக் கண்டவர் என்பதனை இதிகாசங்கள் உணர்த்தும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குர்ரம்தவரு :- குதிரைகளில் பவனி வருபவர். குதிரைச் செல்வம் உடையவர்.
கபட்ளதவரு :-
பிந்துதவரு :-

156 .மால்க மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தசாங்கதவரு ;- தேவபூசனைக்குத் தசாங்கம் என்னும் நறுமணப் பொருளைப் பயன்படுத்துபவர்.
தூபதவரு ;- :- நறுமணப் பொருள்களால் தூபம் இடுபவர்.

157 .மன்மத மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாலிதார் :-

158 .மான்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுத்ததவரு ;- தூய்மை மிக்கவர்.
கொஜ்ஜியதவரு :-

159 .முக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கரவாலதவரு ;- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனின் கரவாலம் என்பது ஒன்று. அவ்விருதினைப் பிடிப்பவர்.
சகுனதவரு ;- சகுனம் கூறுபவர்கள். சகுன சாஸ்திரத்தில் வல்லவர்.

160 .முத்கல மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி கண்வமகரிஷியின் குமாரர். முத்கல மகரிஷியின் ஆசிரமம் கோமதி நதி தீரத்தில் உள்ள கோவிதாரவனம் என்பது. இரவா் கைரவணி நதிக்கரையில் தவம் செய்கையில் அங்கிருந்த மீன்களைத் தவத்திற்குத் தொல்லை தராது வேறு இடம் செல்க! என ஆணையிட்டார். அது முதல் அத்தீர்த்ததில் மீன்கள் கிடையா.
மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி மருத்துவதி என்ற கன்னியை மணந்து கொண்டார். இம்மருத்துவதி முத்கல மகரிஷியின் மகள் ஆவாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அயிலாதவரு :- பெண் குழந்தைகளை எடுத்து வளர்த்தவர்கள்.
கோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் வாழ்ந்தவர்.
கௌளிதவரு :- கௌளி சாஸ்திர வல்லவர்கள்.
சப்தகவியவரு :- ஏழு விதமாகக் கவிபாடும் வன்மை பெற்றவர்.
சித்திதவரு :- தெய்வ அருட் சித்தி பெற்றவர்.
சிந்தாமணியவரு :- கர்நாடகத்தில் உள்ள சிந்தாமணி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சேலம் மாவட்டத்தில் சிந்தாமணியூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்கும் தேவாங்கர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிந்திப்பதையெல்லாம் தரக்கூடிய தெய்வீகமணி சிந்தாமணி. ஏழைகள் சிந்திப்பதையெல்லாம் தந்து தர்மம் செய்தால் சிந்தாமணியவரு என்ற பெயர் ஏற்பட்டது.
சீதாபக்திதவரு :- ஸ்ரீ சீதா தேவியிடம் பக்தி கொண்டவர்கள்.
மாசௌகதவரு :- சௌகர்யத்துடன் வாழ்பவர்.
கோமுகதவரு :- பசுவின் முகம் போன்று அமைந்த கமண்டலத்தில் தீர்த்தம் எடுத்து அதனால் சிவார்ச்சனை அபிஷேகம் முதலிய செய்பவர்.
பாள்யம்தவரு :- பாளையங்களில் வசித்தவர்கள். ஆங்கிலேயர் இந்திய நாட்டில் காலுன்றும் போது இங்குப் பல பாளையங்கள் இருந்தன. இவ்வாங்குசத்தினர் பாளையக்காரர்களாக இருந்திருக்கலாம்.
பிருதுவிதவரு :- பிருதிவியான பூமியை வழிபடுபவர்கள்.
மகததவரு :- மகத நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜீடாதவரு :- ஜீடா-சேராங்கொட்டை, சேராங்கொட்டையைக் கொண்டு பலவிதமான வைத்தியங்கள் செய்தவர்.
அயள்ளதவரு, அயினதவரு, அவினதவரு, அவெலதவரு, அன்னிலதவரு, கொக்கேலாரு, சிப்பிதவரு, நொதாதவரு, புதுவிதவரு, பெரிநாயனதவரு, பெரிநாயினிலிலாவரு, பேரம்தவரு, ப்ரகடிதிவரு, ரப்பிதவரு, ரப்பிகதவரு, ரெப்பிதவரு, ரோப்பிதவரு, வெலிநாயனதவரு, ஜிட்டாதவரு, ஜெஜூமடதவரு, அப்பிலதவரு, அன்னேலாரு.

161 .முத்து மகரிஷி கோத்ரம் :

முத்கலரும் முத்து மகரிஷியும் ஒருவராக இருக்கலாம். இக்கோத்திரத்தினுள் அன்னிலதவரு, அன்னேலாரு என்ற இரண்டு வங்குசப் பெயர்கள் வருகின்றன. இவ்விரண்டு வங்குசங்களும் முத்கல மகரிஷி கோத்திரத்தினுக்குள்ளும் வருகின்றன.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அன்னிலதவரு, அன்னேலாரு :- இவ்விரண்டு வங்குசங்களுக்கும் விளக்கம் புலப்படவில்லை.

162 .முவ்வல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ரெப்பிகலிதவரு :-

163 .மைத்ரதுய்ம்ம மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கண்டயதவரு :- கழுத்தழகு மிக்கவர்.
பாக்கியதவரு :- சகல சௌபாக்கியங்கள் மிக்கவர்.

164 .மைத்ரேய மகரிஷி கோத்ரம் :

இம்மகரிஷி பராசர மகரிஷியின் சீடர். விஷ்ணுபுராணம் முதலானவற்றைப் பராசரர் இவருக்கு உபதேசித்தார். பாண்டவர் வனவாசத்தில் இருக்கும்போது மைத்ரேயர் துரியோதனனிடம் சென்றார். பலவித நீதிகளைத் துரியோதனனுக்கு உபதேசித்தார். அவற்றைத் துரியோதனன் கேட்காததால் கோபம் மிகக்கொண்டு " நீ பீமன் கதையால் தொடைமுறிந்து சாவாய்! " எனச் சபித்தார். இவர் வியாபகவானுக்கு நெருங்கிய நண்பர். நீதிமானாம் விதுரனுக்குத் தத்துவம் உபதேசித்தவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கலாரஞ்சிததவரு :- கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.
கூனிதவரு :- இவ்வங்குசத்தார் முன்னோர்களில் ஒருவர் கூனராக இருந்து புகழ் பெற்றவர்.
நல்லாதவரு :- நல்லவர் எனப் பெயர் பெற்றவர்.
பரிசுதவரு :- கலைகளிலும் புலமையிலும் வல்லவராய் விளங்கி மன்னர்களிடம் பரிசு பெற்றவர்.
நல்லாதவரு, பரிசுதவரு இவ்விரண்டு வங்குசத்தாரும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர்.
பிங்கணதவரு :- கௌரவம் மிக்கவர். பாராட்டு பெறுபவர்.
ஜக்கலதவரு :- ஜக்கல என்னும் ஊரினர்.
பரோபகாரதவரு :- மற்றவர்க்கு உதவி செய்பவர்.
பரசம்தவரு :- பரசு என்னும் கோடாலி தெய்வ ஆயுதங்களுள் ஒன்று. ஆலயத்திற்குப் பரசு செய்து கொடுத்தவர்.
காரவஞ்சிதவரு, குனெதவரு, குனிகாதவரு, கொரவஞ்சதவரு. பிகலதவரு, போலதவரு, ஜக்கிணிதவரு, அல்லானதவரு.

165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம் :

ம்ருகண்டு என்னும் சொல் தமிழில் மிருகண்டு என்று வழங்கப்பெரும். மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. மிருகண்டு மகரிஷியின் தகப்பனார் மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷியாவார். எனவே வம்சாவளி பின்கண்டவாறும்.
குச்சக மகரிஷி
மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷி.
மிருகண்டு மகரிஷி.
மார்க்கண்டேயர்

அந்தலதாரு என்று வழங்கப்பெறும் ஏந்தேலாரின் கோத்ர ரிஷி மிருகண்டூயர் என்று பெயருள்ள கௌசிக மகரிஷியாவார்.

மிருகண்டூயர் பெயர்க்' காரணம் :- கௌசிக மகரிஷி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தில் கௌசிகர் தம்மை மறந்தார். நீண்டகாலம் நின்று கொண்டே தவம் இயற்றினார். காட்டிலிருந்த மிருகங்கள் தம்உடல் தினவுதீர கௌசிகர் மீது தேய்த்துக்கொள்ளும். இந்நிலையிலும் கலையாத தவசித்தி உடையவர் இவர். இப்படி உலக நினைவே இல்லாமல் கடுந்தவம் செய்யும் கௌசிகர்மீது மிருகங்கள் உராய்ந்ததால் மிருகண்டூயர் என்ற காரணப்பெயர் பெற்றார். இதிலிருந்து கௌசிக மகரிஷியின் தவவன்மை புலப்படும்.

இத்தகைய கௌசிக மகரிஷியின் குமாரர்தான் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி முத்கல மகரிஷியின் மருத்துவதியை மணந்தார். நீண்ட காலம் புத்திரர் இல்லாமல் வருந்திய மிருகண்டு சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்.

சிவபிரான் தரிசனம் தந்தார். நோயும், அஞ்ஞானமும், தீர்க்காயுளும் உடைய அநேக குமாரர்கள் வேண்டுமா ? அல்லது பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டுமா? எனச் சிவபிரான் கேட்க, பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டும் என வரம் கேட்டார் மிருகண்டு. இவ்வரத்தின் பயனாக உதித்தவர்தான் மார்க்கண்டேயர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தெலதவரு :- சிலம்பின் வடிவமாய் விளங்கும் ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவது வழக்கம். அந்தெலத்தைக் காலில் அணிபவர் அந்தெலதவரு. இப்பெயர் ஏந்தேலாரு என மருவி வழங்குகின்றது.

அஜதவரு :- பிரம்மாவை வழிபடுபவர்.
கருடதவரு :- கருடாழ்வாரை வழிபாடு செய்பவர்.
கண்டதவரு :- அழகான கழுத்துடையவர்.
குண்டலிதவரு :- குண்டலிபுரத்தைப் பூர்வீகமாக உடையவர். படவீட்டிற்குதக் குண்டலிபுரம் என்று பெயர்.
தபம்தவரு :- தவத்தில் வல்லவர்.
தீபம்தவரு :- தீபவழிபாடு செய்பவர்.
தோனிபர்த்தினிதவரு :- தோனிபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாணதவரு :- பழிபாவங்களுக்கு நாணுபவர்.
பந்தாரதவரு :- பந்தாரை மரத்தின் கீழ் வழிபாடு செய்பவர்கள்.
பிஞ்சலதவரு :- பிஞ்சல என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இண்டிதவரு :- வீடு கட்டி வாழ்ந்தவர்.
வஜ்ரதவரு :- வஜ்ரம் - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகர்.
கட்டுதவரு, கன்டுதவரு, காருடதவரு, குட்டுதவரு, கென்டுதவரு, கேன்டுதவரு, கொக்கிதவரு, கோக்கேதவரு, நார்கதவரு, நார்னதவரு, நானம்தவரு, ரெட்ளதவரு, ரொன்ட்ளாதவரு.

166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம் :

யமனை வென்றவர் என்று இம்மகரிஷியின் பெயருக்குப் பொருள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குலதவரு :- குலத்தில் சிறந்தவர்கள்.
பேரம்தவரு :- வியாபாரம் செய்தவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையைப் பூரவீகமாகக் கொண்டவர்.
சரகூரியதவரு :- சரகூரி என்னும் ஊரினர்.
சன்னுரிதவரு :- சன்னூர் என்னும் ஊரினர்.
காரணதவரு :- எதற்கும் காரணம் கேட்பவர். காரண தீட்சை பெற்றவர்.
அயிள்ளாதவரு :-
அன்னலதவரு :-

167 .யாக்ஞ்யவல்கிய மகரிஷி கோத்ரம் :

இவர் பிரம்மராதரின் புத்திரர். வைசம்பாயன மகரிஷியின் சீடர், பிரம்மஞானிகளுக்குள் தலைசிறந்தவர். ஜனகருக்கு ஆத்ம வித்தையை உபதேசித்தவர். இம்மகரிஷியின் மிக உயர்ந்த மகிமைகளை உபநிஷத்துக்களும், விஷ்ணு புராணமும், பாரதமும் மனமாரப் பாராட்டுகின்றன. இம்மாமுனிவர்களின் குமாரர்கள் சிவபிரானிடம் அபராதப்பட்டு கரன், தூஷணன் என்ற அரக்கராய்ச் சபிக்கப் பட்டனர்.
பின் அவர்களின் வேண்டுகோளினால் இராமபிரானால் உங்ககட்குச் சாபவிமோசனம் ஆகும் எனச் சிவபிரான் வரமருளினான். இராமபிரானின் வனவாச காலத்தில் சூர்ப்பனகை அங்கங்கள் பங்கப்பட்டு கரன், தூஷணன் இருவரையும் அரக்கப்படைகளுடன் அழைத்து வந்தாள். இராமபிரானுடன் நடத்திய போரில் இராம பாணங்களால் இருவரும் உயிர் துறந்து சாபவிமோசனம் பெற்றதை இராமாயண ஆரண்ய காண்டத்துள் காண்க.
இம்மாமுனிவர் தருமனின் இராஜசூய யாகத்திற்கு வருகை தந்தார்.
பரத்வாஜர் முதலான மகரிஷிகள் இவரிடம் சந்தேகங்கள் கேட்டு அவற்றினுக்கு விளக்கம் பெற்றதை மஹோபநிஷத் கூறும்.
பரத்வாஜரின் கேள்விகள் :-

--> கோ விஸ்வராட் ? - விராட சொரூபன் என்பவன் யார் ?
--> கோ விஸ்வகர்த்தா ? - உலகினுக்குக் கர்த்தன் யார் ?
--> கோ பிரஹ்மா ? - பிரம்மம் என்பது எது ?
யாக்ஞ்ய வல்கியரின் விடைகள் :-
--> தேவாங்கோ விஸ்வராட் - தேவாங்கனே விராட சொரூபன்.
--> தேவாங்கோ விஸ்வகர்த்தா - தேவாங்கனே விஸ்வ கர்த்தா.
--> தேவாங்கோ ஸ பிரஹ்மா - தேவாங்கனே பிரம்மம் எனப்படும் பரம் பொருள்.
யாக்ஞ்ய வல்கியர் இங்கனம் மஹோபநிஷத்தில் அருளிச் செய்த காரணத்தினால் தான் தேவாங்கர் பரம் பொருளின் நேரடி வம்சத்தினர் என்னும் உண்மை வெளிப்பட்டது. பரம் பொருளுக்குத் தேவாங்கன் என்பது திருநாமம்.
குறிப்பு :- மேலும் இச்செய்திகளின் விரிவையும், பிற விளக்கங்களையும் அறிய ' தேவலரும் காயத்ரியும் ' என்னும் நூலுள் காண்க.
இம்மகரிஷியின் பெருமை அளவற்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சன்னஜாஜூலதவரு :- சிறிய ஜாதி மல்லி மலர்களால் வழிபாடு செய்பவர்.
மண்டூகதவரு :- மாண்டூக்கிய உபநிஷத்தில் வல்லவர்.
வேணுநாதவரு :- புல்லாங்குழல் இசை விற்பன்னர்.

168 . யாக்ஞ தேவ மகரிஷி கோத்ரம் :

167ல் கண்ட மகரிஷியும் இவரும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சண்ணஅக்கியவரு :- சிறிய மெல்லிய அரிசி. இதனால் சோறாக்கி உண்பவர். அல்லது சண்ணக்கா என்பவரின் வம்சாவழியினராக இருக்கலாம்.

169 . யோகப்பிருந்த மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடகதவரு :- கட்டாக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாகபடதவரு :- நாக படத்தை வைத்து வழிபடுபவர்.
நாகாபரணதவரு :- நாக ஆபரணத்தை அணிபவர்.
நிடதலதவரு :- நளன் ஆண்ட நிடநல நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாதனதவரு :- மிக்க செல்வந்தர்கள்.
ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வழிபடுபவர்.
வட்டிதவரு :- வட்டி வாங்கியோர்.

170 .ரகஸ்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொப்பரிகெயவரு :- கொப்பரிகை வைத்து வாழ்ந்தவர்.
பத்ததியவரு :- பத்ததிகளோடு ஆசாரத்துடன் வாழ்ந்தவர்.
ஹெளகிகேளியவரு ;- கேளிக்கைகளுடன் சுகபோகமாக வாழ்பவர்.
எந்தசெயவரு :-

171 .ராஜகுலத மகாதேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மாளகொண்டதவரு :- மாளகொண்டமலையைப் பூர்வீகமாகக்கொண்டவர்.
மாலகணதவரு :- கணம் கணமாக மாலைகள் இட்டு வழிபடுவர்.

172 .ராஜ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ராஜனதவரு :- அரசராக இருந்து அரசாண்டவர்.

173 .ரிப்பிலாய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தோனபர்த்திதவரு :- தோனபர்த்தி என்னும் ஊரினர்.
பாபணதவரு :- பாப்பண்ண என்பவர் வழியினர்.
வாண்யதவரு :- சரஸ்வதி உபாசனை செய்பவர்.
யோகதவரு :- அட்டாங்க யோகத்தில் வல்லவர்.
ராவுலதவரு :-

174 .ரிஷ்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொத்ததவரு :- புதியவர்கள் - புதுமை விரும்பிகள்.

175 .ருஷ்ய மகரிஷி கோத்ரம் :

ரிஷி வரலாறு 73ல் கானக. இம்மகரிஷியின் பெயரை ஸ்வருங்கி என்றும் சிருங்கி என்றும் ரிஷ்யஸ்ருங்கி என்றும் ருஷ்ய ஸ்ருங்கி என்றும் எழுதுகின்றனர்.
இப்பொழுது நடைபெறுவது ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம். இதற்கு அடுத்த மன்வந்திரத்தில் இம்மகரிஷி ஸப்த ரிஷிகளில் ஒருவராக ஆவார் எனப் புராணங்கள் கூறும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடிதவரு :- கார்த்திகை தீபதினத்தில் திருக்கொடி ஏற்றுபவர். கோடி வஸ்திரம் நெய்பவர். தனகோடி, நவகோடி என்ற பெயர்களை சூட்டுபவர்.
சாஸ்தாதவரு :- ஐயப்ப வழிபாடு செய்பவர்.
நந்திவாகனதவரு :- சிவாலயங்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர்.
பசவடெக்கம்தவரு :- நந்திக்கொடி ஏந்துபவர்.
புட்டகண்டிதவரு :- புட்டகண்டி என்னும் ஊரினர்.

176 .ருக்தேவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பிஜ்ஜலதவரு :- பிஜ்ஜலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக்கொண்டவர்.
சிப்பலதவரு :-

177 .ருத்விஜ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உள்ளியவரு :- உள்ளி - வெங்காயம். இது பற்றி வந்த ஒரு பெயர்.

178 .ரைப்பிய மகரிஷி கோத்ரம் :

குருவிற்குச் சிறந்த சேவை செய்து வேதங்களையும், வேதாந்தங்களையும், அப்ய சித்த ஒரு மகரிஷி இவர். சிறந்த விரதங்களைக் கடைப்பிடித்தார். சாபம், அனுக்கிரகம் போன்ற சாமார்த்தியங்களை உடையவர். பரத்வாஜ மகரிஷியின் நெருங்கிய நண்பர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உஜ்ஜயினிபட்டணதவரு :- உஜ்ஜெயினி நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கெரடிதவரு :- சிலம்ப விளையாட்டில் வல்லவர்.
கர்நாடகதவரு :- கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கன்னடதவரு :- கன்னடமொழி பேசுபவர்கள்.
குத்திதவரு :- குத்தி என்னும் ஊர்க்காரர்.
கோபதவரு :- கோபக்காரர்.
கொக்கரதவரு :- கொக்கினுக்கு உணவிட்டவர்.
கோபுரதவரு :- கோபுரம் கட்டித் தந்தவர்.
நாரிகேளதவரு :- தேங்காய் தருமம் செய்தவர்.
நிடதலதவரு :- நளன் ஆண்ட நிடதல நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பக்திதவரு :- பக்தி மிக்கவர்.
பாகலூரிதவரு :- பாகலூரி என்னும் ஊர்க்காரர்.
மச்செதவரு :- உடம்பில் மச்சம் உள்ளவர்.
மந்திரிதவரு :- மந்திரியாக இருந்தவர்.
மன்சதவரு :- மன்ச - கட்டில். இவர்கள் இறந்தவர்களைக் கட்டிலில் எடுத்துச் செல்லும் பழக்கம் உடையவர்.
மத்ஸயதவரு :- மச்சாவதாரத்தை வழிபடுபவர்.
குத்தாளதவரு :- குத்தாள என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜாகாபத்தினிதவரு :- ஜாகாபத்தினி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொக்கெதவரு, கோபிரெதவரு, சம்படிதவரு, தித்திதவரு, நாகசதவரு, பரத்திதவரு, பரபிதவரு, யதாசிதவரு, யராம்சதவரு, யாராசிதவரு.

179 .வசிஷ்ட மகரிஷி கோத்ரம் :

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் பிரம்மரிஷி, ஸப்தரிஷிகளுள் ஒருவர். பிரம்மாவின் பிராணனிலிருந்து உண்டானார். இவருடைய பத்தினி ஊர்ஜை என்று பெயர் பெற்ற அருந்ததி. வசிஷ்டருடைய மூத்த மகன் மார்க்கண்டேயருடைய மகளை மணந்து கொண்டான். விசிஷ்டரின் பிள்ளைகளில் ஏழு பேர் மூன்றாவது மன்வந்திரத்தில் ஸப்தரிஷிகளாக இருந்தவர்கள்.

நிமியின் சாபத்தினால் வசிஷ்டர் தேகம் இழந்தார். பின் ஊர்வசியிடமாகத் தோன்றினார். இப்பிறவியின் பின் அவர் சூர்யகுல மன்னர்களுக்கு இட்சுவாகுவின் வேண்டுகோளால் குலகுரு ஆனார்.

ரிக்வேதத்தில் ஏழாவது மண்டலம் முழுவதும், ஒன்பதாவது மண்டலத்தில் 67, 90, 97 வது சூக்தங்களும் வசிஷ்டரால் செய்யப்பட்டன.

வசிஷ்ட ஸ்மிருதி ஒன்றும், வசிஷ்ட ராமாயணம் ஒன்றும் வழங்கி வருகின்றன. தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர்.

வசிஷ்டருடன் பிறந்தவர் அகத்தியர். தேவர்களின் பொருட்டுத் தம் நேத்ர அக்னியால் அசுரரை எரித்தவர். தம் காமதேனுவைக் கவர்ந்த அஷ்ட வசுக்களை மனிதராகப் பிறக்கச் சபித்தார். இதில் எட்டாவது வசுவே பீஷ்மராகப் பிறந்தார்.

விசுவாமித்திரருடன் இவரிட்ட வாதம் வெகு பிரசித்தமானது. இட்சுவாகு மன்னனுக்குக்காகப் பிரம்மாவிடமிருந்து சரயு நதியைக் கொண்டு வந்து அந்நதியைக் கோசல நாட்டில் ஓட வைத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஓம்காருதவரு :- எப்போதும் பிரணவ மந்திரமான ஓங்காரத்தை உச்சாடனம் செய்பவர்.
பூதகட்டுதவரு :- பூதபைசாசங்களைக் கட்டும் மந்திர சித்தி பெற்றவர்.
விபூதிதவரு :- விபூதி மந்திரித்துத் தருபவர்.
விப்ரகுண்டதவரு :- யாககுண்டங்களில் சிறப்பாக வழிபாடு செய்பவர்.
உப்புகண்டிதவரு, தரலுவம்சதவரு, விப்ரகுன்னிதவரு, வுகுகுடிதவரு, வுபுகுன்டிதவரு, பண்டனதவரு.

180 .வஞ்சுல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடகதவரு :- கடாக் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
முங்கரதவரு :- மூக்குத்தி அணிபவர்.
கடிகலதவரு :-

181 .வத்ஸ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோவூரிதவரு :- ஆந்தராவில் உள்ள கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பண்டரிபுரதவரு :- பண்டரிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வனதவரு, வனதேவதாதவரு :- வனங்களில் வசித்துத் தவவாழ்க்கை மேற்கொண்டவர். வனதேவதைகளை வழிபட்டவர்.
பன்னெதவரு :-

182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு சரியாகப் புலப்படவில்லை, காளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் இம்மகரிஷியின் வரலாற்றுக் குறிப்பு ஒன்று காணப்படுகிறது. செவி வழிக் கேள்வியாக சில செய்திகள் கிடைத்தன அவை வருமாறு :-

வரதந்து மகரிஷியிடம் முனிவர் ஒருவர் சீடராய் இருந்து வேதங்களைக் கற்றார். முனிவரின் வித்யாப்பியாசம் முடிந்தவுடன் வரதந்து மகரிஷிக்கு அவர் குருதட்சிணை கொடுக்க விரும்பினார்.

ஆனால் வரதந்து மகரிஷியோ குருதட்சிணை வேண்டாம் என மறுத்தார். சீடர் வற்புறுத்தவே அவர் குறுதட்சிணை ஏற்க ஒப்புக்கொண்டார்.

குருதட்சணை நிமித்தமாக முனிவர் விஸ்வஜித் என்னும் மன்னனிடம் சென்றார். மன்னன் விஸ்வஜித் முனிவரின் சீடர். தன் குருவின் குருவிற்குக் குறுதட்சிணை கொடுக்க விஸ்வஜித் விரும்பினான்.

ஆனால் அன்று முன்தினம் தான் விஸ்வஜித் தான் செய்தயாக முன்னிலையில் தன் பொன் பொருள் அத்தனையும் தானம் செய்து விட்டு, மண் பாத்திரத்தில் உண்ணும் நிலையில் இருந்தான்.

இந்நிலையில் குருதட்சினைக்குரிய பொன்னுக்கு என்ன செய்வது! என்று ஆலோசித்தான். தன் நால்வகைப் படைகளுடன் குபேரன் மீது போர் தொடுப்பது என்ற முடிவினுக்கு வந்து படைகளைச் சித்தம் செய்ய ஆணையிட்டான்.

இதனைக் குபேரன் கேள்விப்பட்டான். மன்னனின் வீரம் தன்னை வென்று விடும் என்று நினைத்து, போரைத் தவிர்க்க விரும்பினான். அன்று இரவு மன்னனின் நகர் முழுவதும் பொன்மழை பொழிந்தான் குபேரன். எனவே போர் நின்றது. மன்னனிடம் குருவிட்குச் செலுத்த வேண்டிய பொன்னை மட்டும் பெற்றுக்கொண்டு முனிவர் புறப்பட்டார். வரதந்து மகரிஷி குருதட்சிணை பெற்றார். மற்ற பொன் முழுதும் நகர மக்களுக்குத் தானம் செய்தான் விஸ்வஜித்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கப்பேலாரு, கபாலதவரு :- கபாலதவரு என்ற பெயரே கப்பேலாரு என மருவி வழங்கப்படுகிறது. பிரம்ம கபாலம் வைத்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வழிபடும் வழக்கம் உடையவர்.
ஆஸ்யதவரு :- ஹாஸ்யம் - நகைச்சுவை. இவர்கள் நவரசங்களுள் ஒன்றான நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்.
கபிலதவரு :- கபில முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற கபிலேஸ்வரரைக் குடும்ப தெய்வமாக வணங்குபவர். ( கங்கை கடலுடன் கலக்கும் இடத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருந்து நூறு மைல் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. ஆண்டு முழுவதும் இவ்வாலயம் தண்ணீருக்குள் முழுகி இருக்கும். தை மாதம் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் தண்ணீர் மூன்று மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. இம் மூன்று நாட்களில் மட்டும் ஆலயம் மணலில் வெளிப்பட்டுத் தோன்றும். அப்பொழுது லட்சக் கணக்கான மக்கள் இக் கபிலேஸ்வரரைத் தரிசித்து பேரு பெறுகின்றனர்.)
கப்பெரெதவரு :- கபாலத்தைக் கப்பரெ என்று கூறுவது வழக்கம். ஒருவகைப் பாத்திரத்திற்கும் கப்பரை என்று பெயர்.
கோட்டூராரு :- கோட்டூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கைலைதவரு :- கயிலைநாதனை வழிபடும் வழக்கம் உள்ளவர்.
சென்னாதவரு :- சென்னாரவல்லியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
நாபதவரு :- நாபம் ஒருவகைக் கல். இக்கல்லில் விக்கிரகம் செய்து வழிபட்டவர்.
பம்மிடிதவரு :- பம்மிடி - அகல் விளக்கு. அகல்விளக்கு செய்து தானம் கொடுத்தவர். இவர்களின் வழிபாட்டில் அகல்விளக்கு முக்கிய இடம்பெரும்.
பாரததவரு :- பாரதப் பிரசங்கம் செய்தவர்.
மச்சதவரு :- மச்சாவதாரத்தை வழிபட்டவர்.
மஹாதனதவரு :- மிகுந்த தனம் படைத்தவர்.
மால்யதவரு :- ஆலயங்கட்கு மாலைக்கட்டித் தருபவர்.
இண்டாதவரு :- சிக்கனம் மிக்கவர்.
ஸ்ரீ ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வழிபட்டவர்.
வரதந்திதவரு :- கோத்திர ரிஷிப் பெயரே வங்குசப் பெயராக உள்ளது. ஒன்று கோத்ர ரிஷியான வரதந்து மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபட்டிருக்கலாம். அ தந்திரம் - நூல். வரதந்து மகரிஷியால் செய்யப்பட்ட நூல் வரதந்திரமாக இருக்கலாம். இந்நூலை ஓதியதால் ஏட்பட்ட பெயராக இருக்கலாம்.
பாததவரு :- பாதுகாபூசனை செய்பவர். சிவபாதுகா, விஷ்ணுபாதுகா, தேவிபாதுகா, குருபாதுகா, என இவற்றை வழிபடுபவர்.
பரததவரு :- பரதசாஸ்திரத்தில் வல்லவர்.
கப்பேதவரு, சன்னாதவரு, திஸ்னேதவரு, பஸ்ஸாதவரு, பிஸாததவரு, பிஸ்ஸாதவரு.

183 .வாசுதேவ மகரிஷி கோத்ரம் :

தன் தவத்தைக் கெடுத்துத் தன்னை மயக்க வந்த கிருதாசி என்னும் தெய்வப் பெண்ணை நீச உருவாகச் சபித்துப் பின் சாபநீக்கம் செய்தவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குங்குமதவரு ;- குங்குமம் தயாரித்து ஆலயங்களுக்குத் தானம் செய்தவர்.
குண்டதவரு ;- அம்மன் திருவிழாவில் குண்டத்தில் இறங்க முன்னுரிமை பெற்றவர். அக்னிஹோத்ர குண்டத்தில் தினமும் யாகம் செய்பவர்.
உங்கரதவரு ;- உங்கர - மோதிரம். மோதிரம் அணிந்தவர். இம் மோதிரம் தர்ப்பையால் ஆன பவித்ரம். யாக காரியங்கள் செய்யும் போது பவித்ரம் அணிவது முறைமை. எனவே இப்பவித்ரம் அணியும் விரலுக்கு மோதிர விரல் என்று பெயர் இன்றும் வழங்குகின்றன.
கசெதவரு, குண்டிதவரு, வுபன்டதவரு.

184 .வாமதேவ மகரிஷி கோத்ரம் :

ரிக்வேதம் வது மண்டலத்தில் 1-15; 18-41; 45-58 வது சூக்தங்களைச் செய்தவர். வாமதேவ மகரிஷி. வசிஷ்டருடன் தசரதச் சக்கரவர்த்தியின் புரோகிதர்களுள் ஒருவராக இருந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கருடதவரு ;- கருட வழிபாடு உடையவர்.
சிந்துதவரு ;- சிந்து தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சூலதவரு ;- சூலாயுத வழிபாடு செய்பவர்.
தானதவரு ;- தான தருமங்கள் செய்பவர்.
தீபதவரு ;- தீப வழிபாடு செய்பவர்.
பாக்யதவரு ;- சகல சௌபாக்யங்களுடன் வாழ்பவர்.
பிருந்தாவனதவரு ;- பிருந்தாவனம் கட்டி துளசிச் செடி வளர்த்து வழிபாடு செய்பவர்.
பூஜாரிதவரு ;- பூசாரியாக விளங்கியவர்.
மாத மங்கல கிரிய தவரு ;- மாதமங்கலம் என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜான்த்ரால தவரு ;- நூல்பாவு விசிறும் யந்திரம். ஜன்தம் எனப்படும். எனவே இவர்கள் பாவு விசிறும் தொழில் செய்தவர்.
சித்ரதவரு ;- ஓவியக்கலை நிபுணர்.
காரூடதவரு ;- காரூடதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கள்ளாயதவரு, கன்டிதவரு, குரகஞ்சிதவரு, குருடதவரு, குளாதிதவரு, குளாபிதவரு, குளாவிதவரு, கோகெதவரு, புலகதவரு, புல்லகதவரு, முண்டெம்தவரு.

185 .வாரு மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாளதவரு :- தாளம் போடுபவர்.இசையைத் தாளம் போட்டு ரசிப்பவர்.
விய்யாதிதவரு :- விய்யாதி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குண்டெம்தவரு :-

186 .வாருண மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சிர்ரிகூரதவரு :- சிர்ரிகூர - சிறுகீரை :- சிறுகீரையைத் தவறாது\ உண்பவர்.
பிரம்மதேஜதவரு :- பிரம்ம தேஜஸ் பெற்றவர்.

187 .வாலகில்ய மகரிஷி கோத்ரம் :

எந்தப் பற்றும் இல்லாமல் வாழ்ந்த மகரிஷி. சூரிய மண்டலத்தில் வசிப்பவர். மரவுரி மான் தோல், உடுத்துக் கடுந்தவம் செய்தவர். தேவ காரியங்களை முடிப்பதற்கு உலகங்களில் சஞ்சரிப்பவர். பிரம்மாவின் மானஸபுத்திரராகிய கிரது என்பவருக்கும் கிரியை என்பாளுக்கும் பிறந்தவர். வாலகில்ய மகரிஷிகள் 60,000 பேர் என்பது கணக்கு. அங்குஷ்ட பிரமாண தேகம் கொண்டவர்கள். அங்குஷ்டம் - கட்டை விரல். இவர்கள் மகாதவ சிரேஷ்டர்கள். நாள் தோறும் சூரிய ரதத்தைப் பிரதட்சிணம் செய்வார்கள்.
இம்மகரிஷிகள் இந்திரனைக் கருடனால் அவமானப் படும்படி சபித்தனர்.
ஒரு முறை கருடன் இம்மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்த மரக்கிளையை எடுத்துச் சென்று இமயமலையில் விட்டார். பாரதம் - ஆதி பருவம்.
இம் மகரிஷிகளால் ஒருவர் இக்கோத்ரக் கர்த்தாவாகிய மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அமரதவரு :- அமரகோச நிகண்டில் வல்லவர்.
அம்பட்டிதவரு :- கூழ்காய்ச்சி ஊற்றித் தானம் செய்தவர்.
ஆரேதவரு :- ஆரோக்கீரையைக் கொண்டு பலவகை வைத்தியம் செய்தவர்.
கடிகதவரு :- கைக் கடகம் அணிந்தவர்.
கதிரிதவரு :- கதிரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சின்னகூட்டதவரு :- சிறிய கொட்டகையில் வாசம் செய்தவர்.
செருகூரதவரு :- செருகூர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தலகோகதவரு :- தலைப்பாகை வஸ்திரம் நெய்தவர்.
திருப்பதியவரு :- திருப்பதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பங்கஜதவரு :- தாமரைப் பூக்களால் வழிபாடு செய்பவர்.
பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியின் அருட்பிரசாதம் பண்டாரம் எனப்படும். அம்மன் ஆலயங்களுக்குப் பண்டாரப் பிரசாதம் கொடுக்கும் திருத்தொண்டு புரிந்தவர். இப்பண்டாரம் எடுக்கும் விழா ' பண்டார மெரவ ணெ ' என்று அழைக்கப்படுகிறது.
பதகதவரு :- மன்னர்களிடம் தம் திறமைகளுக்காகச் சன்மானமாகப் பதக்கங்கள் பெற்றவர்.
பர்வதவஸ்திரத்வரு :- பர்வதம் = ஸ்ரீ சைலம். ஸ்ரீ சைலத்திற்குக் கொடித்துணி நெய்து வழங்கியவர். ஆலயமூர்த்திகளுக்குத் தேவையான வஸ்திரங்களை நெய்து தருபவர்.
பரகணதவரு :- பீஹாரில் உள்ள பரகண என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பல்லலதவரு :- அதிக குழந்தைகள் உடையவர்.
மதுரதவரு :- மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாடலிதவரு :- மாடலி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் உடையவர். சிலப்பதிகாரத்தில் மாடலி மறையோன் என; மாடலி என்னும் ஊரைச் சார்ந்த மறையோனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.
மாலிபட்டுதவரு :- மாலிபட்டு என்னும் ஊரினர்.
வல்லகாடிதவரு :- வல்லகாடி என்னும் ஊரினர்.
உங்குரதவரு :- பவித்திர மோதிரம் அணிந்தவர்.
வொழுக்குதவரு :- உழக்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ஜனகதவரு :- ஜனக மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர்.
ஜீவகட்டுதவரு :- மந்திரவன்மையால் துஷ்ட ஜீவன்களைக் கட்டுபவர்.
ஜேஜேலதவரு :- தெய்வ ஊர்வலங்களுக்கு உதவியர்.
அரெபுதவரு, கல்லூரிதவரு, கவிலெதவரு, குரளதவரு, சம்புதவரு, செனகதவரு, தாசகதவரு, பெனகதவரு, மதிபடுதவரு, வல்லகாடிதவரு, ஜனனதவரு, ஜானகியதவரு, கஞ்ஜீயோளிதவரு.

188 .வால்மீகி மகரிஷி கோத்ரம் :

ஆதிகவி எனப்போற்றப்படுகின்றனர். சகல வித்யைகளுக்கும் சாதனமான இராமாயணத்தை இயற்றினார். வனத்தில் விடப்பட்ட சீதையைத் தம் ஆசிரமத்தில் வாழவைத்து ஆதரித்தார். லவனுக்கும் குசனுக்கும் இராமாயணத்தைப் போதித்தார்.
பிறப்பால் வேதியர். ஒழுக்கம் தவறி வேடுவர் ஆனார். இவர் வழிப்பறி செய்து வாழ்ந்து வருங்கால், நாரதருக்கு இவர் மீது] கருணை பிறந்தது. நாரதர் இவர் எதிரில் வந்தார். இவர் நாரதரையும் வழி மறித்தார். இப்பாவத்தொழில் செய்கின்றீரே ! இதனால் வரும் பாவத்தில் உம்மால் ஜீவிக்கும் அனைவருக்கும் பங்கு உண்டா ? என்று கேட்டு வருக ! என நாரதர் ஏவ, உம் பாவத்தில் எமக்கு பங்கு இல்லை என அனைவரும் கூறக் கேட்டு வருந்தினார்.
பின் நாரத மகாமுனிவரால் மராமரத்தின் பெயரையே கூறுமாறு உபதேசிக்கப் பெற்றார். இதுவே "ராம" என்னும் தாரக மந்திரம் ஆயிற்று. இவர் கடுந்தவம் செய்து வருகையில் இவர் மீது புற்று மூடி வளர்ந்தது. வன்மீகம்-புற்று. அதனால் இவர் வால்மீகி மகரிஷி எனப்பட்டார்.
ஒரு நாள் வேடன் ஒருவன் கிரெளஞ்ச பட்சியனைக் கொல்ல வர; அவ்வேடனைச் சபிக்க எண்ணினார். பிரம்மதேவன் அருளால் அவர் வாயிலிருந்து ஸ்லோகம் ஒன்று வெளிப்பட்டது. அதனையே மங்களச் சுலோகமாகக் கொண்டு இராமாயணம் இயற்றினார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாதனதவரு :- தாதா - கொடைவள்ளல். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தானம் செய்பவர்.
கெம்பெயதவரு :- 'கெம்பைய்யா' என்பவர் வம்சாவழியினர்.
பின்னபத்தியதவரு, சாக்காதவரு, மெயதவரு, கூஸ்மியதவரு, சிந்திமியதவரு, பூரெனதவரு, மூகதியவரு.

189 .விக்ஞான மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிகலதவரு :- கைக்கடகம் அணிந்தவர்.
தந்துலதவரு :- நூல் மந்திரித்துத் தருபவர்.
நூகலதவரு :- நொய்யரிசியை எறும்பு முதலிய உயிர்களுக்கு இட்டு வாழ்ந்தவர்.
லாடதவரு :- லாடபாஷையில் வல்லவர்.
உட்ளதவரு, கபிகலதவரு, நுங்குலதவரு, மஞ்சுளதவரு, முங்கலதவரு, மூவ்வன்சுதவரு, யாவன்சுதவரு, வன்சம்தவரு.

190 .வித்யா மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கிருஷ்ணராயதவரு :- கிருஷ்ணதேவராயரிடம் பரிசுகள் பெற்றவர்.
சின்னகூடதவரு :- சிறிய கொட்டகையில் வசித்தவர்.
பூஷணாலதவரு :- பூஷணங்கள் - ஆபரணங்கள் அணிந்தவர்
மாசிப்பத்ரதவரு :- மாசிப்பத்ரி செடியடியில் வீட்டுத் தெய்வத்தை வணங்குபவர்.
கொம்புலதவரு :- வாலதவரு.

191 .வியாச மகரிஷி கோத்ரம் :

பராசர மகரிஷிக்கும் பரிமளகந்திக்கும் பிறந்தவர். வேதத்தை நான்காக வகுத்தவர். வேதங்களின் சாரமாக பிரம்ம சூத்திரத்தையும் புராணங்களையும் மஹாபாரதத்தையும் இயற்றினார். வியாசர் பாரதம் சொல்லச் சொல்ல விநாயகர் அதனைத் தம் கொம்பால் மாமேரு மலையில் எழுதினார்.
பரிமளகந்தியின் ஆணைப்படி காசிமன்னன் பெண்களிடமாகவும் அவள் தோழியினிடமாகவும் முறையே திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் பிறப்பிற்குக் காரணம் ஆனார்.
வனவாச காலத்தில் பாண்டவர்க்குப் பல தருமங்கள் உபதேசம் செய்தார். இடும்பியைப் பீமன் மணக்குமாறு ஆணையிட்டார். சுகப்பிரம்மம் எனப்படும் சுகர் இவர்தம் குமாரர்.
தருமனை அசுவமேத யாகம் செய்ய வைத்தார். காட்டில் தவம் செய்த திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினார். அவனைக்காண கானகம் வந்த பாண்டவர்களிடம் இறந்துபோன கௌரவர், கர்ணன், அபிமன்யு, அரவான் ஸ்வர்க்கத்தில் இருந்து அழைத்து வந்து காட்டினார். அன்னவர் தம் பத்தினிகளைக் கங்கையில் ஸ்நானம் செய்ய வைத்து அவர்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினார்.
த்வீபத்தில் பிறந்தமையால் த்வைபாயனர், என்றும் கருத்த நிறத்தினால் கிருஷ்ணத் த்வைபாயனர் என்றும் பெயர்களைப் பெற்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தர்மாவாதவரு :- தர்மாவரம் ஊர்க்காரர்.
நந்தவரதவரு :- நந்தவரம் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஷடாக்ஷரிதவரு :- ஆறெழுத்து மந்திர சித்தி பெற்றவர். வேதவியாச மகரிஷி கோத்ரம் என்பதால் சில வங்குசப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை வருமாறு
அஜ்ஜியவரு, தர்ஜியவரு, ஜவ்வாஜிதவரு -
ருத்ராக்ஷதவரு :- ருத்திராக்ஷம் அணிந்தவர்.
தவனதவரு, நாரசதவரு, ஜினாஜிதவரு.

192 .விஸ்வாமித்ர மகரிஷி கோத்ரம் :

கௌசிகர் என்ற பெயருடன் காதி மன்னன் மகனாய்ப் பிறந்தார். இவர் சகோதரிகௌசகி. இவளை ரிசீகனுக்கு மணமுடித்தனர். தம் கணவர் ஆணையால் கௌசகி நதியாகப் பெருகினாள்.
கௌசிக மன்னர் ஒரு நாள் வசிஷ்டரின் ஆசிரமம் வந்தார். வசிஷ்டர் தம் காமதேனுவால் மன்னருக்கும் அவர்தம் நால்வகைப் படைகளுக்கும் தெய்வீகமான ஒரு விருந்தினை வைத்தார்.
கௌசிகர் காமதேனுவைத் தான் அடைய வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் ஏற்பட்ட மனவேறுபாட்டினால் மன்னனாய் இருப்பதைக் காட்டிலும் மகரிஷியாய் இருப்பதே மேல் என்ற முடிவிற்கு வந்தார். பிரம்மரிஷியாக வசிஷ்டரால் மதிக்கப்பெரும் பிரம்ம ரிஷியாக ஆகவேண்டும் என முடிவு செய்து 40,000 ஆண்டுகட்குமேல் தவம் செய்து பிரம்மரிஷி விஸ்வாமித்திரராக மாறினார்.
தவத்தைக் கெடுக்க வந்த திலோத்தமையை சபித்தார். தன்னை நாடி வந்த திரிசங்குவை உடலுடன் ஸ்வர்க்கத்திற்கு அனுப்பினார். அதனை இந்திரன் ஏற்றுக் கொள்ளாததால் திரிசங்குவிற்குத் தனி ஸ்வர்க்கம் உண்டாக்கினார்.
அம்பரீச மன்னனிடம் இருந்து சுனச்சேபன் என்ற பாலகனைக் காக்க மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உபதேசித்தார்.
பின் வடதிசையில் தவம் செய்யுங்கால் திரிமூர்த்திகளும், வசிஷ்டரும் இவரைப் பிரம்மரிஷியாக ஏற்றுக்கொண்டனர். இதனால் விஸ்வாமித்ரர் பிரம்மரிஷியே தவிர ராஜரிஷி அல்லர்.
அரிச்சந்திரனைச் சோதித்து அவன் புகழுக்குக் காரணமானார். தம் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையிடமாகச் சகுந்தலையைப் பெற்றார்.
இராமனையும் இலக்குவனையும் யாகசம்ரட்சணம் என்றபெயரால் அழைத்துச் சென்று சீதாகல்யாணம் நடத்தி தாடகை, சுபாகு ஆகியோரின் வதம், அகலிகையின் சாபவிமோசனம் ஆகியவற்றிற்கு காரணகர்த்தா ஆனார்.
500 ஆண்டுக் காலம் உணவின்றிக் கடுந்தவம் செய்துவிட்டு பாரணைக்காக உணவைக் கையில் எடுக்க இந்திரன் அந்து உணவைத் தானம் கேட்க அப்படியே கொடுத்து விட்டு உடனே தவத்தைத் தொடங்கிய மகாதபஸ்வி இவர்.
தவத்தினால் உச்சி திறந்து அதனால் ஏற்பட்ட அக்நி உலகினை மூட பிரம்மா வந்து பிரம்மரிஷியே என இவரை அழைத்தான். ரிக்வேதத்தின் மூன்றாவது காண்டத்தில் இருக்கின்ற ரிக்குகள் அனைத்திற்கும் இவர் கர்த்தா.
எல்லோருக்கும் மித்திரனாய் இருந்ததினால் விஸ்வாமித்திரர் என்ற பெயர் பெற்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அம்பரகொண்டதவரு :- அ அம்பகொள்னேரு :- நெல்லூரில் உள்ள அம்பர கொண்ட மலையைச் சார்ந்தவர். அம்பரகொண்டதவரு என்பது அம்பகொள்னேரு என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகன்சிதவரு :- ஸ்ரீ கன்சி ஊர்க்காரர்.
ஸ்ரீராமதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
அக்ஷ்யதவரு :- அழிவில்லாதவர்.
அர்ச்சனதவரு :- அர்ச்சனை செய்பவர்.
அஞ்சனதவரு :- பக்தியை அஞ்சனமாகக் கொண்டவர்.
ஆசனதவரு :- யோகாசனத்தில் வல்லவர்.
அங்காளதவரு :- அங்காளபரமேஸ்வரியை வழிபடுபவர். கன்னடத்தில் தொட்டு தேவுரு என்று பெரியநாயகி என்றும் தமிழிலும் இத்தெய்வத்தை வழங்குகின்றனர்.
கடகதவரு :- கட்டாக்கை பூர்வீகமாகக் கொண்டவர்.
கந்ததவரு :- ஆலயங்களுக்குச் சந்தனம் தருபவர்.
கலவாதவரு :- கலுவாய்ப்பட்சி உபாசகர். இது கருட உபாசனை போன்றது. கலுவாய், சாதகம், சகோரம் இம்மூன்று பறவைகளும் பூமிக்கு வராமல் மேக மண்டலத்தில் வாழ்பவை.
கம்பதவரு :- கம்பம் நட்டு வழிபாடு செய்பவர்.
காசதவரு :- காசுகட்டி என்ற மருந்துப் பொருளைத் தயாரித்தவர்.
காடதவரு :- விவசாயம் செய்தவர். காட - ஏர்.
ஆஸ்யதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
குக்கிடதவரு :- கோழிக் கொடி வணக்கம் செய்பவர்.
குட்டியதவரு :- பூஜை பிரசாதம் தயாரிக்கும் பாத்திரம் குட்டியம். குட்டியதானம் செய்தவர்.
குண்டியம் தவரு :- குண்டியம் ஒரு வகை இலை. இதனாலும் இதன் மலராலும் வழிபாடு செய்பவர். இது மிகுந்த வாசனை உடையது. இதன் கோந்து சாம்பிராணி போல் புகைக்கப்படுகிறது. குந்த தவரு, குந்தியம் தவரு, குண்டியம் தவரு - இவை மூன்றும் ஒன்றே.
ஜெக்கலதவரு :- இந்திரஜாலம், மகேந்திரஜாலம் போன்று ஜெக்கலஜாலம் ஒன்று. இதில் வல்லவர்.
கோசலதவரு :- கோசல நாட்டுக்காரர்.
கௌதமதவரு :- தலைப்பிள்ளைக்குக் கௌதமன் என்ற பெயரிடுபவர். கெளதம மகரிஷியை வழிபடுபவர்.
காரதவரு :- காரைச் செடியடியில் வழிபடுபவர்.
தபசிதவரு :- தபோ வன்மை மிக்கவர்.
தம்பூரிதவரு :- தம்பூரா வாசிப்பில் வல்லவர்.
தலபாகலதவரு :- தலைப்பாகை அணிபவர்.
தொளசதவரு :- வடகர் நாடகத்தில் உள்ள தொளாசாபுரத்தவர்.
நமசிவாயதவரு, பஞ்சாட்சரியதவரு :- சிவ வழிபாட்டில் சிறந்தவர். பஞ்சாட்சர மந்திர ஜெபம் உள்ளவர்.
நரசிம்மதவரு :- நரசிம்ம மூர்த்தி வழிபாடு செய்பவர்.
பீமாநதியவரு :- பண்டரிபுரம் அருகில் உள்ள பீமா நதிக்கரையில் வாழ்ந்தவர்.
புச்சகிஞ்சிலதவரு :- வரிக்குருமத்தங்காய் வைத்தியம் செய்தவர்.
புலிவேஸ்கதவரு :- வியாக்ராசனம் இடுபவர்.
மோக்ஷ்தவரு :- ஜீவசமாதி பெற்றவர் வம்சா வழியினர்.
போகனதவரு :- செழிப்பு மிக்கவர்.
ஓக்கடிதவரு :- கர்நூலில் உள்ள ஒக்கடி ஊர்க்காரர்.
வர்ணதவரு :- பண்ணதவரு :- சாயத் தொழில் செய்தவர்.
வஜ்ராலதவரு :- வைர நகை அணிபவர், வைர வியாபாரம் செய்தவர்.
ஹம்சதவரு :- பிரம்ம வாகனமான ஹம்சத்தை வழிபடுபவர். மூத்தமகனுக்கு ஹம்சய்யா என்றும் மகளுக்கு ஹம்சவதி எனவும் பெயரிடுவர். கர்நூல் கடப்பா மாவட்டங்களில் இவ்வங்குசத்தார் அதிகம் வாழ்கின்றனர்.
அட்டதவரு, அன்சுதவரு, ஆசண்டதவரு,, கங்காளதவரு, கவ்வதவரு, துகிடதவரு, கெட்டதவரு, கொசேதவரு, சரதவரு, சாரமுதவரு, சிட்டாதவரு, போசாதவரு,, மேடிதவரு, மோததவரு, ரெக்கடிதவரு, மோஹனதவரு, லிபினிதவரு.

193. வேத மகரிஷி கோத்ரம் :

வியாசரே வேதரிஷி என அழைக்கப்படுகின்றனர். இதனுள் காணப்படும் நந்தவரதவரு, க்ஷடாக்ஷரிதவரு விளக்கம் - 191 .வியாச மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

194 .வேபன மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாரிதவரு :- சக்தியின் பீஜாட்சரமான ஸ்ரீ கார மந்திரஜெபம் உள்ளவர்.
தாரதம்மியதவரு :- தராதரம் பார்ப்பவர்.
பந்தலுதவரு :- ஆசிரியர்.
பாலகதவரு :- பாலாபரமேஸ்வரி உபாசனை செய்பவர்.
ருத்ரம்தவரு : - ருத்திர மந்திர சித்தி பெற்றவர்.
ருத்ரவீணைதவரு :- ருத்ரவீணை வாசிப்பவர்.

195 .வியாக்ரபாத மகரிஷி கோத்ரம் :

மத்தியந்தன மகரிஷியின் குமாரர். சிவ வழிபாடு மிக்கவர். சிறந்த மலர்களைப் பறிக்க நகங்களில் கண்களும் வழுக்காமல் மரம் ஏர புலிக்கால்களையும் வரமாகச் சிவ பிரானிடம்' கேட்டுப் பெற்றவர். அதனால் வியாக்கிரபாதர் எனப்பட்டார். வசிட்டரின் சகோதரியை மணந்து உபமன்யு மகரிஷியை மகனாகப் பெற்றார். இவ்வுபமன்யு காமதேனுவின் பாலுக்கு ஏங்கி அழ சிவபிரான் அவருக்கு அதனினும் சிறந்த பாற்கடல் பாலைக் கொடுத்தார். இவர் சிதம்பர தலத்தில் ஆனந்த நடன தரிசனம் காணத் தவம் செய்கையில் இவருடன் பதஞ்சலி மகரிஷி வர இவரும் சேர்ந்து நடன தரிசனம் தரிசித்தனர்'.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்லுகோட்டிதவரு :- கற்கோட்டை கட்டி வாழ்ந்தவர்.
துர்க்கதவரு :- துர்க்கம்-மலை; கோட்டை.
பசுபர்த்திதவரு :- பசுபா்த்தி ஊர்க்காரர்.
பாரிஜாததவரு :- பவளமல்லி மலரால் வழிபடுபவர்.
பொம்மலதவரு :- அழகிய பொம்மைகள் செய்பவர்.
இனுமர்த்திதவரு :-

196 ..ஜமதக்நி மகரிஷி கோத்ரம் :

யாகம் செய்வதற்கும், தவம் செய்வதற்கும்', சீடர்களின் ஞானத்தை விருத்தி செய்வதற்கும் தான் வாழவேண்டும் என்று கருதி வாழ்ந்தனர்.
இவர் அம்பு தொடுத்து நிற்கையில் இவருக்குக் குடையும், செருப்பும் சூரியன் கொடுத்தான். ரிஷிகருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த குமாரர் இவர். இம்மகரிஷியின் குமாரர்கள் --> உருமதி --> உத்சாகன் --> விச்வாவசு --> பரசுராமர் என்போர்.
இம்மகரிஷியின் மனைவியே ரேணுகை. இவ்வம்மை நீர்நிலையில் பிரதிபலித்த சித்ர சேனன் என்ற கத்தருவன் அழகில் மயங்கியதால் அவளை வெட்டுமாரு குமாரர்களுக்கு ஆணையிட்டார். மறுத்தவர் வேடர் ஆயினர். பரசுராமர் தந்தையின் ஆணையை ஏற்று ரேணுகையை' வெட்டினார். மகிழ்ந்த தந்தையிடம் தன் அன்னையை பழைய கற்புநிலையுடன் உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் சகோதரர்களுக்குச் சாபவிமோசனமும் வரமாக வேண்டிப் பெற்றார்.
ஒருமுறை, ராவணனை வென்று ராவணஜித் என்ற பெயருள்ள கார்த்தவீரியார்'ச்சுணன் முனிவரிடம் வர மன்னனை வரவேற்று அவனுக்கும் அவன் சேனைகளுக்கும் முனிவர் காமதேனுவால் விருந்திட்டார். கார்த்த வீரியன் தனக்கு வேண்ட முனிவர் மறுத்ததால் ஏற்பட்ட பகையால் இரவோடு இரவாக வந்த கார்த்த வீரியன் முனிவரைக் கொன்று விட்டான். இதனால் பரசுராமர் அரசகுலத்தைக் கருவருத்தார் அவனையும் போரில் கொன்றொழித்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

இந்தனதவரு :- சமித்துக்கள் தானம் செய்பவர்.
கடகதவரு :- கைக்கடகம் அணிந்தவர். கட்டாக் ஊர்க்காரர்.
கபாலதவரு :- பிரம்ம கபாலம் வைத்து வழிபடுபவர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி ஊர்க்காரர்.
குசுமசித்துலதவரு :- மலர் அரும்புகளால் வழிபடுபவர்.
குலாவிதவரு :- புல்லாங்குழல் வாசிப்பவர்.
சரபதவரு :- சரபமூர்த்தியை வழிபடுபவர்.
சின்சுதவரு :- மூஞ்சுரவை வழிபடுபவர்.
சிந்தாதவரு :- சிந்தனையாளர்.
செங்கல்வதவரு :- சுப்ரமண்ய வழிபாடு செய்பவர்.
தொட்டிதவரு :- தொட்டி என்னும் ஊர்க்காரர்.
நாரிகேளதவரு :- தேங்காய் தருமம் செய்பவர்.
பூஜாரிதவரு :- பூசாரியாக வாழ்ந்தவர்.
--> சாதனந்த மகரிஷி கோத்ரம்
--> அகத்திய மகரிஷி கோத்ரம்
--> கௌசிக மகரிஷி கோத்ரம்
--> வரதந்து மகரிஷி கோத்ரம்
--> ஜமதக்நி மகரிஷி கோத்ரம்
என்னும் இவ்வைந்து கோத்ரத்தாருக்கும் பூஜாரி வீளேவு உரியது. ஒரு சபையில் இவ்வைவரும் இருந்தால் இவ்வீளேவினைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம்.
பெத்தனதவரு :- பெத்தராக இருப்பவர்.
பொதுலூருதவரு :- பொதுலூரு ஊர்க்காரர்.
ஜோதிதவரு :- ஜோதி எடுப்பவர்.
சிச்சுதவரு :-
பிரம்மாண்டதவரு :-
முனகதவரு :-
வசந்ததவரு :-
ஜாபுலதவரு :-

197 .ஜம்பாரி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ரஞ்சனதவரு :- அழகாக வாழ்பவர்.
காந்தியதவரு :- தவஒளி, ஞானஒளி மிக்கவர்.
தும்பரகுத்தியதவரு ;- தும்பரகுத்தி ஊர்க்காரர்.
முண்டனதவரு, கட்லியதவரு, டிங்கரியதவரு.

198 .ஜமு மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சமாதிதவரு :- சமாதி யோகம் கைகூடியவர்.
சக்ரதவரு :- சங்க சக்ர முத்திரை தரித்தவர்.
நாசிகதவரு :- மூக்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ருத்ரஜடதவரு :- திருநீற்றுப் பத்திரி இலையால் வழிபாடு செய்பவர்.
விவஸ்வததவரு :- வைவஸ்வதமனுவை வழிபட்டு, வைவஸ்வத ஹோமம் செய்பவர்.

199 .ஜம்பு மகரிஷி கோத்ரம் :

காவிரிக்கரையில் தவம் செய்த ஒரு முனிவர். இவர் முன் நாவல்பழம் ஒன்று விழுந்தது. பழத்தைச் சிவபிரானுக்கு நிவேதனம் செய்தார். சிவப்பிரசாதமாக பழத்தின் கொட்டையை உண்டார். அது வயற்றில் மரமாக வளர்ந்தது. அம்மரத்தடியில் சிவ லிங்கம் ஸ்தாபித்தார். ஜம்பு மரத்தடியில் ஸ்தாபிக்கப் பெற்ற இறைவன் ஜம்புகேஸ்வரர் எனப்பட்டார். இத்தலமே திருவானைக்கா எனப்படும் தலம். திருவரங்கதிட்கு அருகில் உள்ளது. இவரை ஜம்புக மகரிஷி எனவும் அழைக்கின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாலஜிதவரு :- வெங்கடாஜலபதியை வழிபடுபவர்.
நாசகதவரு :-

200 .ஜனக மகரிஷி கோத்ரம் :

ஜனகாதி முனிவர்கள் நால்வருள் ஒருவர். பிரம்மபுத்திரர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பீரணயதவரு :- பீரணய ஊர்க்காரர்.
கடகுபசினெதவரு :- கடகுபசினெ ஊர்க்காரர்.
ருத்ரகண்டியதவரு :- ருத்திராட்சம் அணிபவர்.

201 .ஜாபாலி மகரிஷி கோத்ரம் :

இம்முனிவர் பெயரில் ஜாபாலோபநிஷத் என்னும் உபநிஷத் உள்ளது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அதிகுண்டதவரு :- அக்நி குண்டத்தில் இறங்கும் உரிமை பெற்றவர். எப்போதும் யாகம் செய்பவர்.
கடுபுதவரு :- கொழுக்கட்டை நிவேதனம் செய்பவர்.
கமலபுதவரு :- தாமரை மலர்கொண்டு வழிபடுபவர்.
கற்பூரதவரு :- கற்பூரம் தானம் செய்பவர்.
கொண்டததவரு :- மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோரகதவரு :- கோரக என்னும் ஊர்க்காரர்.
சீலவந்துதவரு :- ஆசாரம், நற்குணம் மிக்கவர்.
சந்தாதவரு :- சந்திரனை வழிபடுபவர்.
சுதாபானுதவரு :- பாற்கடலையும், சூரியனையும் வழிபடுபவர்.
சரநேத்ரதவரு :- அம்பு போன்ற கூரான பார்வை உடையவர்
முக்தாபுரதவரு :- முக்தாபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
ருக்சாகதவரு :- ரிகவேதத்தின் சாகைகலுள் ஒன்றான ருக்சாகையை தினந்தோரும் அத்யயனம் செய்பவர்.
வாவிகொண்டதவரு :- வாவிகொண்ட எனும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜலஸ்தம்பதவரு :- நீரைக்கட்டுபவர். நீருள் மூழ்கி அகமர்ஷன ஜபம் செய்பவர்.
ஸ்தம்பதவரு :- துஷ்ட ஜீவன்களைத் தப்பிக்கச் செய்பவர்.
கடுபுலதவரு :- பெரிய வயிற்றுக்காரர்.
குத்தலதவரு :- குத்தால ஊர்க்காரர்.
முனிகிதவரு :- முனீஸ்வரனை வழிபடுபவர்.
கிடுகுதவரு, சுக்காதவரு, தோகுருதவரு, நிடுகுதவரு, பயிள்ளதவரு, பஹிரலுதவரு, பாவிகோபடுதவரு, புக்கதவரு, யததிதவரு, யாவிதவரு, யுத்திகதவரு, யெட்டிதவரு,யதிதவரு.

202 .ஜாலக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

முலகலதவரு :- முளைப்பாலிகை இட்டு வழிபடுபவர்.

203 .ஜான்த மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நிக்கினதவரு :- புலப்படவில்லை.

204 .ஜெயமுனி மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அழ்கூல்னேரு :- பாற்சோறு தருமம் செய்பவர்.

205 .சூரசௌவ மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காயகல்பதவரு :- யோகபலத்தால் உடம்பினைக் காயகல்பமாக்கியவர். ஜீவபொம்மனதவரு, ஜீவவரதவரு.

206 . சௌலப்ய மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாககேசதவரு :- நாககேசம் - சிறுநாகப்பூ. இதனைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
நாககேசிதவரு :-

207 . ஸ்யாலக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாள்ளதவரு :- மாங்கல்யக் கயிற்றைத் தானம் செய்பவர்.
யாள்ளதவரு :-

208 .ஹரித மகரிஷி கோத்ரம் :

இக் கோத்ரம் ஹரி ஹரி மகரிஷி கோத்ரம் எனவும் வழங்கப்படுகிறது. கடுந்தவத்தால் மேன்மை பெற்றவர். இவர் பன்னிரண்டாவது மன்வந்திரத்தின் தெய்வமாக இருக்க நிர்ணயிக்காப்பட்டவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சிதவரு :- ஸ்ரீ கன்சி ஊர்க்காரர்.
கட்டிகதவரு :- கட்டியம் கூறுபவர்.
கணபதிதவரு :- கணபதி வழிபாடுள்ளவர்.
கார்த்திகதவரு :- கார்த்திகை தீப வழிபாடும் விரதமும் மேற்கோள்பவர்.
கோகர்ணதவரு :- திருக்கோகர்ணத்தைப் பூரிவீகமாகக் கொண்டவர்.
சந்திரகாவியதவரு :- சந்திரகாவியம் ஒரு ஜோதிடசாஸ்திரம். இச் சாஸ்திரத்தில் வன்மை பெற்றவர்.
தம்மண்ணதவரு :- தம்மணன் என்பவர் வம்சா வழியினர்.
தவளதவரு :- வெளுத்த நிறம் கொண்டவர்.
பண்ணதவரு :- சாயத்தொழில் செய்பவர்.
பாகலூரதவரு :- பாகலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூவலதவரு :- பூக்களைத் தொடுத்து அணிவித்து வழிபடுபவர்.
வனதவரு;- வனங்களில் தவம் செய்தவர். வனதேவதை வழிபாடு செய்பவர்.
வஜ்ராலாதவரு :- வைரநகை அணிபவர். வைர வணிகர்.
குறிப்பு: இக்கோத்ரம் ஹரத மகரிஷி கோத்ரம் எனவும் வழங்கப்படுகிறது.
கசுவாபித்தினியெதவரு, குடிதவரு, குன்ரசிதவரு, குண்ட்டுதவரு, கூள்ளதவரு, கெதிக்னிதவரு, கோரேதவரு, பன்ததனனதவரு, பன்னதவரு, பன்நெனதவரு, பிடிதவரு, பிவுலதவரு, புவ்வுதவரு, மரெபிதவரு, மன்நெனதவரு, மாள்ளதவரு, யிங்குதவரு, ரபணதவரு, ரவணதவரு, ரெப்பிதவரு, வக்ராயதவரு, வன்னேதவரு, செவ்வேலாரு, பண்ணேலாரு என்ற வந்குசமும் ஹரிஹரி மகரிஷி கோத்ரத்தில் வழங்கப்படுகிறது.

209 . ஹாலா ஹல மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோட்டூரிதவரு :- கோட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
சரகெதவரு :- சரியையில் வல்லவர்.
நெரதாதவரு :- நிர்ணயம் தவறாதவர். உறுதியானவர்.
அருபுலதவரு :-

210 . க்சேம க்சேமந்த க்சேமந்ர மகரிஷி கோத்ரம் :

இம் மூன்றும் ஒரே மகரிஷியின் பெயர்களே. இவற்றினுள் வரும் வங்குசப் பெயர்கள் அனைத்தும் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சந்திரகுலதவரு :- சந்திரவம்சத்தில் வந்தவர்.
கன்சிதவரு :- ஸ்ரீ கன்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்பவர்.
கம்பதவரு :- கம்பம் நட்டு வழிபடுபவர். துவஜஸ்தம்பம் தானம் செய்தவர்.
கள்ளதவரு, சன்னவெல்லபுதவரு.

211 . ஸ்வாயம்புவ மகரிஷி கோத்ரம் :

ஒருகல்பத்தில் பதினான்கு மனுக்களின் ஆட்சி நடக்கும். இந்தக் கல்பம் ஸ்வேத வராக கல்பம். இக்கல்பத்தின் முதல் மன்வந்திரம் ஸ்வாயம்பு மன்வந்திரம். இவர் முதல் மன்வந்திரத்தின் மனு. இவரின் புத்திரர்களே ப்ரயவிரதன், உத்தானபாதன் என்போர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அமரகொண்டதவரு :- அமரகொண்ட மலையைச் சார்ந்தவர்.
லிங்ககொண்டதவரு :- லிங்ககொண்ட மலையைச் சார்ந்தவர்.
சங்ககொண்டதவரு :- சங்ககொண்ட மலையைச் சார்ந்தவர்.
சிட்டிகொண்டதவரு :- சிட்டிகொண்ட மலையைச் சார்ந்தவர்.
போடகொண்டதவரு :- போடகொண்ட மலையைச் சார்ந்தவர்.
சிம்மண்ணகொண்டதவரு :- சிம்மண்ணகொண்ட மலையைச் சார்ந்தவர்.
சௌடகொண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி மலையைச் சார்ந்தவர்.
முத்தினதவரு :- முத்துக்கள் அணிபவர். முத்து வியாபாரம் செய்தவர்.
முத்திகணஜதவரு :- குதிர் நிரம்ப முத்துக்கள் வைத்திருந்தவர்.

212 .வீரதந்தி மகரிஷி கோத்ரம் :

இக்கோத்ரத்தில் சிவமதம், விஷ்ணுமதம் எனும் இருபிரிவுகள் உள்ளன.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாலேலாரு :- பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர்

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.