Sowdambiga

புஞ்சை புளியம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் வரலாறு


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரில் சுமார் 1940 ம் வருடத்தில் இருந்து தேவாங்க குல மக்கள் அனைவரும் குலத்தொழிலான நெசவுத்தொழிலை செய்து வாழ்ந்து வந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நெசவுத்தொழிலை அளித்து காத்துவரும் சௌடேஸ்வரி அன்னையை எப்பொழுதும் தொழுத வண்ணம் இருந்தனர். மாதத்தில் ஒருநாள் அமாவாசை தினத்தன்று குலமக்கள் அனைவரும் அன்பர் ஒருவரது இல்லத்திலே ஒன்று கூடி சௌடேஸ்வரி அன்னையை மஞ்சள் கொண்டு உருவமாக்கி வழிபட்டு வந்தனர்.

அம்மன் திருவுருவச் சிலை:

அம்மனின் திருவுருவச் சிலை செய்வதற்காக குல மக்கள் அனைவரும் ஒன்று கூடி நிதியாக வீட்டிற்கு ஒரு வேஷ்டி நெய்து தர முடிவு செய்யப்பட்டது. அதை விற்று கிடைத்த தொகையில் அம்மனுக்கு வெள்ளியாலான திருவுருவச் சிலையானது செவ்வனே செய்து பின்னர் அதை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

Sowdambiga

சில வருடங்கள் கழித்து இச்சிலைக்கு பதிலாக வேறொன்றை உருவாக்க திட்டமிட்ட பெரியோர்கள் அதனை பொற்கொல்லரிடம் கொடுத்து உருக்கச் சொன்னார்களாம். பொற்கொல்லர் "எவ்வளவோ முயன்றும் அதை என்னால் உருக்க இயவில்லை, அன்னை இத்திருவுருவத்திலேயே இருக்க விரும்பிகிறார் போலும் அதை மாற்றவேண்டாம் அப்படியே வழிபடுங்கள்" என்று வேண்டினார்.

திருவிழா

தேவாங்க குல மக்களை காப்பவளும் தேவாங்க குல மக்களின் தெய்வமாகவும் விளங்கும் சௌடேஸ்வரி தேவிக்கு திருவிழா நடத்த தீர்மானம் செய்தனர். அப்போதைய வசதிக்கேற்ப பச்சைப் பந்தலொன்று போட்டு அம்மனை கொலுவைத்து மூன்று நாட்கள் திருவிழாவை குலப் பெரியவர்களான செட்டுகாரர் மற்றும் எஜமானர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடத்தி வந்தனர்.

சப்பரத்தின் சிறப்பு:


திருவிழாவின் மூன்றாம் நாளன்று சௌடேஸ்வரி அன்னையை சப்பரத்தில் வைத்து மஞ்சள் நீராட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்நாளில் அன்னை தன்னை நாடிவரும் பக்தர்களின் இல்லங்களுக்கு அவர்களை நாடிச் சென்று அருள்வாக்கு வழங்கி சிறப்பிப்பது பெருமையான மற்றும் அதிசயமான ஒன்று. இந்நாளில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து அன்னையின் அருள்வாக்கு வேண்டி காத்திருப்பது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கோவில் கட்ட தீர்மானம்

Sowdambiga

வேண்டுவோர் அனைவருக்கும் வேண்டியதை நல்கி வரும் தேவிக்கு திருக்கோவில் இல்லையே என்ற ஆதங்கம் கொண்ட குலப்பெரியோர்கள் அம்மனுக்கு திருக்கோவில் ஒன்றை கட்டத் தீர்மானம் செய்து அன்னையை வேண்டினர். அதன்படியே அன்னையும் திருவிழாவின் மூன்றாம் நாளில் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கட்டவேண்டிய இடத்தையும் அதனை நிர்வகிக்க வேண்டிய குழுவினையும் தேர்ந்து எடுத்து அருளினார்.

முதல் திருக்குடமுழுக்கு விழா:

Sowdambiga

திருப்பணியானது பல்வேறு காரணங்களால் பல இன்னல்களை சந்தித்தபோதும் சூரியனைக் கண்டு பனி விலகுவது போல சௌடேஸ்வரி அன்னையின் அருளால் இன்னல்கள் அனைத்தும் விலகி தெய்வீகப் பணியானது செவ்வனே நடந்தேறி விநாயகர், முருகர், இராமலிங்கேஸ்வரர், சௌடேஸ்வரி அன்னை, நவகிரகங்கள் மற்றும் சிம்ம வாகனம் போன்ற அணைத்து தெய்வங்களும் ஒருசேர வீற்றிருக்கும் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் என்ற பெயர் கொண்ட ஸ்தலமாக உருவெடுத்தது. 18-3-1987ம் நாள் திருக்கோவிலின் முதல் திருக்குடமுழுக்கு சிறப்பாக செய்யப்பட்டது.

அன்னதானம்

அன்னை அவதரித்த அமாவாசை தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் திருக்குடமுழுக்கு விழா

அன்னயின் அருளினாலும் பெரியோர்களின் ஆசிகளினாலும் ஸ்தலமானது இன்னும் விரிவுபடுத்தப்பட்டு 27-1-1999 ம் நாள் இரண்டாம் திருக்குடமுழுக்கும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது

அமைப்புகள்:

சௌடேஸ்வரி பொதுநல அறக்கட்டளை, சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் திருமண தகவல் மையம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி சமுதாய முன்னேற்றங்களுக்குத் தேவையான அணைத்து விதமான உதவிகளையும் புரிந்து வருகின்றது.

சௌடேஸ்வரி மஹால்

திருக்கோவில் நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாக நடத்தவும், திருமண நிகழ்ச்சி போன்ற வாழ்வில் சிறந்த நாட்களை தேவாங்க குல மக்கள் அனைவரும் சிறந்த முறையில் கொண்டாடவும் அன்னையின் ஆணைக்கிணங்க சௌடேஸ்வரி மஹால் என்ற பெயருடன் அழகிய திருமண மண்டபமானது அமைக்கப்பட்டு சௌடேஸ்வரி பொதுநல அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

பக்தி பாடல்கள் வெளியீடு

சௌடேஸ்வரி அன்னையின் அருளினையும், தேவாங்க குலத்தின் பெருமைகளையும் உலக மக்கள் அறியும் பொருட்டு சிறந்த திரைப்பட இசையமப்பாளர்களையும் சிறந்த பின்னணிபாடகர்களையும் கொண்டு சிறந்த கவிதைகளை பாடல்களாக உருவாக்கி கேட்பவர்களின் உள்ளத்தை உருக்கும் வண்ணம் தேனினும் இனிய இசையாக வெளியிடப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி தேவாங்க குல மக்களுக்கு பாத்தியமான இத்திருத்தலமானது ஒற்றுமையை உணர்த்துவதாகவும், மக்கள் யாவருக்கும் ஆன்மீக சிந்தனையையும், நல்லருளினையும் அள்ளித்தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருகின்றது.

HISTORY OF GODDESS SRI RAMALINGA SOWDESWARI AMMAN, PUNJAI PULIAMPATTISince 1940 in Tamilnadu, Erode district, Sathy Taluk, Punjai Puliampatti Devanga People here has been indulged in the heritage business that is Handloom Sari manufacturing. Every devanga weavers praised and prayed the Goddess for providing and protecting the significant work to earn for their living. At New Moon day of every month, Devanga community people in Punjai Puliampatti used to gather at one of their community members house for their holy worship of Goddess Sri Ramalinga Sowdeswari Amman who was then made out of Turmeric.

STATUE OF GODDESS:

People of Punjai Puliampatti made efforts to make the statue of Goddess by weaving a dhoti per family, which was sold to collect the fund for the statue. By selling the dhoti, they made enough money to make a Goddess statue out of pure silver. The statue was kept for performing all the prayers and functions. After few years, people planned to change the statue by melting the current one so asked a goldsmith to do so. In spite of his best efforts to melt the statue, he could not melt it. So he said everyone, ‘I could not melt the statue, May be the Goddess wishes to stay in this form.’

FESTIVAL:

Devanga people decided to celebrate their Goddess who has been their protector and God. They made a pavilion out of leaves, positioned the Goddess for 3 days, and prayed to her according to the directions of the elders of the community.

GREATNESS OF DOLLY (Saparam):

The third day of festival is special, as Goddess Sri Sowdeswari Amman will be shouldered in dolly and people rejoiced her presence with pouring turmeric mixed water on one another. This day is very marvellous and a proud one as Goddess Sowdeswari bestows her kind heart in going to all her devotees’ house who prayed to her all year going to her temple. Until this day, People from different places gather on this day to get blessings from Sowdeswari Amman and to see her miracles.

CONSTRUCTION OF TEMPLE:

People were concerned, as the Goddess who has been blessing every one with their wishes did not have a temple. Therefore, Elders of the community decided to build a temple for Sowdamman and Prayed to her. Sri Sowdeshwari Amman embodied in Sapparam on the third day of Pongal festival and showed the place to build the temple and group of people to manage the temple.

FIRST KUMBHABHISHEKAM:

The construction work for the temple was interrupted in different ways. The hurdles were removed by the sight of Goddess Sowdeswari Amman as dew melting in the rays of sun. The temple was constructed with different God statues such as Lord Ganesh, Ramalingeshwarar, Sri Sowdeswari Amman, Simma Vahan, Navagrahas was named after Sowdeswari Amman, and it became a renowned temple. On 18.3.1987th, the temple had its first grandeur Kumbhabhishekam.

ANNADHANAM:

The new moon day that the Sowdamman was incarnated is rejoiced and celebrated with much joy every month by performing special poojas and people are offered food too.

SECOND KUMBHABHISHEK:

With the boon from the Goddess Mother and from the blessings of the elders, the temple was expanded and the second Kumbhabhishek was conducted on 27.01.1999.

ASSOCIATIONS:

Sowdeswari Public Welfare Association, Sowdeswari Devanga Youngsters Welfare Association, and Marriage Information centre were formed in order to endure social welfare and growth.

SOWDESWARI MAHAL:

Sowdeswari Mahal was built biding by the God Mothers wishes in order to celebrate the temple functions and to celebrate the joyful days such as weddings of Devanga people. The exquisite Sowdeswari Mahal was built and maintained by the Sowdeswari Public Welfare Association.

DEVOTIONAL SONGS RELEASE:

Sowdeswari Amman’s blessing has been there for Devanga people all the way, So Devanga people decided to record songs out of the best poems written about the God Mother’s kindness and Devanga peoples fame with the help of Film music directors and playback singers. These songs that are much sweeter than honey were recorded to tell the world about Devanaga people.

This temple belonging to the people of Punjai Puliampatti Devanga community represents unity, spiritual thoughts, and place where God mothers sheds her blessings on us.

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.