Sowdambiga

சௌடேஸ்வரி அன்னையின் சப்பர மகிமை




" தேவல முனிவரே தாங்களும் தங்கள் சமுதாய மக்களும் என்னை எப்பொழுது வேண்டி அழைத்தாலும் உடனே வந்து அருள்புரிவேன் " என்று அன்னை சௌடேஸ்வரி வரமருளி அருள்புரிந்தார். இப்பெரும்பேற்றினை பெற்றவர்களான தேவாங்கர்கள் அன்னையின் அருள் வேண்டியும் ஊரும் மக்களும் குறைவில்லா வாழ்வினை பெறவும் வருடா வருடம் அன்னையை அழைத்து திருவிழா நடத்தி அன்னையின் அருளினை பெறுகிறார்கள்.

திருவிழாவின் மூன்றாம் நாளன்று சௌடேஸ்வரி அன்னையை சப்பரத்தில் வைத்து மஞ்சள் நீராட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்நாளில் அன்னை தன்னை நாடிவரும் பக்தர்களின் இல்லங்களுக்கு அவர்களை நாடிச் சென்று அருள்வாக்கு வழங்கி சிறப்பிப்பது பெருமையான மற்றும் அதிசயமான ஒன்று. இந்நாளில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து அன்னையின் அருள்வாக்கு வேண்டி காத்திருப்பது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.