Sowdambiga

எங்களைப் பற்றி



எண்ணற்ற பெருமைகளையும் வரலாறுகளையும் கொண்ட நமது தேவாங்க குலத்தின் வழி வந்த மக்கள் பாரத தேசம் முழுவதும் பரவியுள்ளனர். நெய்யுந் தொழிலையே செய்யும் தொழிலாகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையாலும் காலத்திற்கேற்பவும் பிற தொழில்களையும் செய்து வாழந்து வருகின்றனர். தொழில், வாழும் இடம் மட்டுமல்லாது மொழி போன்ற காரணத்தினால் வேறுபட்டாலும் தேவாங்கர் என்ற உணர்வினாலும் அன்னை சௌடேஸ்வரி தேவியை வணங்குவதினாலும் ஒற்றுமையை உணர்த்துகின்றனர்.

தேவாங்க குல வழி வந்த மக்கள் யாவரும் பயன் பெரும் விதமாக தேவாங்க குல தகவல்களை காலத்திற்கேற்ப தகுந்த தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பதிவு செய்ய நினைத்த போது இணையதளம் வாயிலாக அனைவருக்கும் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டோம். இம்முயற்சிக்கு என்னாலான உதவியை நான் செய்கிறேன் என்று தேவையான அணைத்து தகவல்களையும் தந்து உதவினார் தேவாங்க குல சிந்தனைச் செம்மல், வைனவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள். மேலும் குறிப்பாக இளைஞர்களிடம் இவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார்.

அவ்வண்ணமே இணைய தளமானது வடிவமைக்கப்பட்டு இன்று உங்களது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் யாவரும் இத் தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களிடம் உள்ள தேவாங்க குலம் அல்லது அன்னை சௌடேஸ்வரியின் அற்புதங்கள் போன்ற அரிய தகவல்களையும் கொடுத்து உதவுமாறும் வேண்டுகிறோம்

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.