குளித்தலை ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்

(குளித்தலை ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் )
தலவரலாறு
சோழவளநாடு சோற்றுடைத்து" என்பது முதுமொழி... அந்த முதுமொழிக்கு மூலாதாரமாக விளங்குவது,. "சப்தநதிகளுள் ஒன்றாக" போற்றப்படுகின்ற காவிரிநதி ஆகும். 'தென்கங்கை' ஆகிய காவிரிதாயானவள் பரந்து விரிந்து "அகண்டகாவிரி" யாக பிரவாகமெடுப்பது நமது "திருக்கடம்பந்துறை" என்ற குளித்தலை நகரில் தான்.. காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. இந்த திருக்கடம்பந்துறையில் உறைகின்ற "கடம்பவனேஸ்வரர்" தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இரண்டாவது தலமாகும்.நமது அன்னையின் வரலாறு
கடம்பவனம் என்றால் மீனாட்சிசுந்தரேஸ்வரர் இல்லாமலா போவார்.. ஆம் ஶ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் உறைகின்ற அந்த பகுதியிலேதான் நமது தாய் சௌடேஸ்வரி அருளாட்சி புரிகிறாள்.. நமது சமூகத்தினர் 200 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.. அன்னை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது 150 ஆண்டுகளுக்கு முன்பு என தெரிகிறது.
அன்னையின் சிறப்புகள்
*மூலவர்:*கருவறையில் அன்னை திருநின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலிருகரங்களில் பாச,அங்குசமும்., கீழிரு கரங்களில் சூலம் மற்றும் கிண்ணம் ஏந்தியும் நிற்கின்றாள். ஒரு சின்னஞ்சிறு சிறுமியை போல் நின்று நமக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றாள்.
*உற்சவர்:*
பஞ்சலோகத்தால் ஆன திருமேனி.மேலிருகரங்களில் கத்தி மற்றும் நாகம் உள்ளது. கீழிருகரங்களிள் சூலம் மற்றும் கிண்ணம் ஏந்தி காணப்படுகிறாள். கிண்ணம் ஏந்திய கையில் "அசுரனின் கபாலம்" ஒட்டிக்கொண்டுள்ளது.. இது எங்கும் காண இயலாத அறிய அமைப்பாக உள்ளது. "அசுராதிகளு பந்து மோத சிம்ம வாகன தல்லி ஏறி தண்டெத்தி பந்து கொந்தவளு நீனு" என்ற 'கன்னட பத்தியப்பாட்டின்' வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக அன்னை வீற்றிருக்கின்றாள். இத்துணை சிறப்புகள் கொண்ட தாய் சௌடேஸ்வரி வருகின்ற 13,14,15/04/2018 அகிய தேதிகளில் திருவிழா காண இருக்கிறாள்..




தேவாங்க குல தவகல்கள் |