Sowdambiga

கொம்பு பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்

Updated Date : 22-Jan-2021


கொம்பு பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்

(கொம்பு பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்)


அம்மன் பண்டிகை.


தை மாதம் முதல் வாரத்தில் ஊர் பெரியவர்களால் கலந்து யோசிக்கபட்டு நல்ல நாள் பார்த்து முடிவெடுக்கப்படுவது வழக்கம். பின்பு பத்திரிகை படைக்கபட்டு ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பத்திரிகையை ஊர் பொதுமக்களுக்கு வழங்கபட்டு வெளியூர் தேவாங்க இன மக்களுக்கு (கால முன்னேற்றம் எவ்வளவு வந்தாலும்) கடிதம் மூலமாக பத்திரிகையை அனுப்புவதை தொன்றுதொட்ட வழக்கமாக கொண்டு உள்ளனர்.


பண்டிகையின் முதல் வாரத்தில் அலகு பானையை வாங்க ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி அலகு பானையை வாங்கி வருவது வழக்கம். வீதிகள் தோறும் சுத்தம் செய்து மா, இலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி எங்கும் விழாக்கோலம் கொண்டு இருக்கும்.


பண்டிகை தினத்தன்று காலை சூரியன் உதயமாகும் போது இயற்கை அன்னையின் தாயான கதிரவனைப் வரவேற்கும் விதமாக

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!


என்று படலை பாடி சூரிய உதயம் ஆனதும் நாம் மூச்சு காற்று அம்மன் மீது படாமல் இருக்க வாயில் துணி கட்டிக்கொள்வர். கொம்பு மஞ்சள் , கஸ்துரி மஞ்சள், பூலான் கிழங்கு, பச்சிலை (காய்ந்தது), பச்சரிசி ஆகிய பொருள்களுடன். பண்டாரி இடிக்கபடும். பண்டாரி இடிக்கும் வீரக்குமாரர்கள் சிலர் தன் நெஞ்சில் வைத்து இடிக்கும் வழக்கமும் உண்டு.


நீர் நிலைக்கு சென்ற உடன் பழைய பூணூல் மாற்றப் படுகிறது

பழைய பூணூலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்


உபவீதம் பின்ன தந்தும் ஜீர்ணம் கஸ்மல தூஷிதம் விஸ்ரு ஜாமிபுனர் பிரஹ்மன் வர்ச்சோ தீர்க்காயு ரஸ்துமே.

புதிய பூணூல் அணியும் போது சொல்லும் மந்திரம்


ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாகே
குருப்ரம்ஹ குரூர்விஷ்ணு குருதேவோ மஹேஷ்வர
குருசாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மைஸ்ரீ குருவே நமஹ
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்
ப்ரஜோபதேர்யத் சகஜம் புரஸ்தாத்
ஆயுஷ்ய மஹர்யம் ப்ரதிமுஞ்ச சுப்ரம்
யக்ஞோபவீதம் பலமஸ் துதேஜ.

என்று சொல்ல வேண்டும்.

கரகம் சிங்காரித்து அன்னை சௌடாம்பிகையாக பாவித்து கத்தி போட்டு மங்கள வாத்தியத்துடன் ஊர்வலம் தொடங்கும். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் கத்திகளை கைகளில் ஏந்தியவாறு நடந்து வருவர். பக்தி கோஷம் முழங்க பரவசத்துடன் தங்களது கைகள், நெஞ்சுப்பகுதிகளில் கத்தியால் கீறியபடி நடந்து வருவர். இதில் சிறுவர்களும் திரளான அளவில் கலந்து கொள்வார்கள். இதில் சிலரது கைகளில் இரத்தம் வழிந்தபடியே ஊர்வலம் ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு மதியம் வந்தடையும்.


கக்தி நிறுத்தும் விதம்

கக்தி நிறுத்தும் விதம்

புதிய மண்பானை நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்த பானை மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள். மூன்றிலிருந்து ஐந்து கிலோவரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும். குறைந்தபட்சம் 12 மணிநேரம் நிற்கும். ஜம்முதாடு கத்தியை கையில் பிடித்துக் கொண்டு அதன் முனையை மண் பாணை விளிம்பில் வைப்பார்கள். அது தானாக நிற்கும். கக்தி நிறுத்தும் போது அலகு வீரர்கள் கத்தி போடுவார்கள். நேரம் செல்ல, செல்ல கத்தி போடக் கூடியவர்களின் வேகம் மற்றும் ஆவேசம் அதிகமாகும். சக்தி நின்று அலகு வீரர்கள் கத்தி போடுவதை நிறுத்தி விடுவார்கள்.


மதியம் ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதி மாவு தயார் செய்து மாலை ஜோதி ஏற்றப்படும். தைப்பூச நிகழ்வு போல திரையின் பின் ஜோதி ஏற்றப்படும் பிறகு ஜோதி வீதி உலா வந்தபின் அமுது படைக்கப் பட்டு ஜம்முதாடு கத்தியை இறக்குவார்கள்.


மறுநாள் காலை கங்கையில் அம்மன் கரைக்கப்படும். ஜோதி மாவு ஊர்ப் பொது மக்களுக்கு வழங்கப்படும் .
திருவிழா நடந்த அடுத்த வாரம் பானகம் என்று சொல்ல கூடிய திப்பு,மிளகு, சுக்கு, வெல்லம், இஞ்சி, கலந்த கலவை பானகமாக படைக்கப் பட்டு. திருவிழாவை நிறைவு பெற செய்வர்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் :

திரு. ச. கி. நந்த குமார்
பண்ருட்டி.தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.