தேவாங்கர்களின் திருவிழா முறைகள்
தேவாங்கர் கொண்டாடும் விழாக்களுள் முதன்மையானது ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழா. விழாவின் நடைமுறைகள் காலம் தேசம் முதலானவை காரணமாக சிற்சில வழிமுறை வேறுபாடுகளுடன் கொண்டாடப் பெறுகின்றன.
சேலம் குகையும் இதனுடன் தொடர்புடைய கிராமங்களில் ஒருவித நடைமுறையும்.
காவிரிக்கு மேற்குக் கரை முதற்கொண்டு திருப்பூர், கோவை முதலான பகுதிகளில் ஒருவித நடைமுறையும்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருவித நடைமுறையாகவும் உள்ளன. ஆனால் அலகு சேவை என்னும் கத்தி போடுதல் பொதுவாக உள்ளது.
கர்நாடகம் ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் ஆலயத்தில் செய்யப்பெறும் வழிபாடாகவும் கொண்டாடப் பெறுகின்றன.
ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழா
ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழா இருவிதமாகக் கொண்டாடப் பெறுகின்றது.* அயிக்குளு அப்ப
* தொட்டப்ப
என இருவகை.
அயிக்குளு அப்ப என்பது சிறிய திருவிழா என்றும் தொட்டப்ப என்பது பெருந்திருவிழா என்றும் கூறப்பெறும்.
தொட்டப்ப :-
சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, மஹா ஜோதி, பூமிதி, பிரம்ம கபால மஹா பூசனை என்ற ஐந்து அங்கங்கள் கொண்டது தொட்டப்ப என்று கூறப்படுகின்றது.அயிக்குளு அப்ப :-
இனி ஒரு உற்சவர் கொண்டு சக்தி மஹா ஜோதியும், ஒரு உற்சவர் கொண்டு சக்தி சாமுண்டி மஹா ஜோதியும் மூன்று உற்சவர் கொண்டு சக்தி சாமுண்டி மஹா ஜோதி என நடத்துவதும் சிறிய திருவிழா, அயிக்குளு அப்ப வகையைச் சார்ந்தது
தேவாங்க குல தவகல்கள் |