300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்

(புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் கோபுர சிற்பம்)
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புவனகிரி தேவாங்கர் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவினை பற்றிய சிறப்புகள்.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு திருக்கோவில் திருப்பனி செய்வதற்காக புவனகிரி வாழ் தேவாங்க குல நாட்டாமைக்காரர்கள் முடிவு செய்து கடந்த 2015 தை மாதம் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் செய்து அம்மனிடம் உத்தரவு கோரப்பட்டு அம்மனின் உத்தரவுப்படி இனிதே தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2015 மாசி மாதம் 23-02-2015அன்று பாலாலயம் நிகழ்ச்சி 2 கால யாக வேள்வியுடன் சிறப்புடன் நடைபெற்றது.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் இதர பரிவார மூர்த்திகளின் சக்தியானது அத்தி பலகையில் வரையப்பட்டு சுவாமியின் படத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டது.
சிலைகளை கோமாதாவின் கொம்பின் மூலம் இழுக்கப்பட்டு தானியங்களில் (நெல்) நிரப்பப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான ஆலயம்
நமது திருக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகவே பழமை மாறாமல் அமையவேண்டும் என்ற அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நவீன கருவிகளை கொண்டு பூமியில் இருந்து சுமார் 8 அடி Lifting Technology மூலம் உயர்த்தப்பட்டு தற்பொழுது வர்ணவேலைகள் முடிக்கப்பட்டு, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு புவனகிரி நகரின் மத்தியில் மிக பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.

குடமுழுக்கு பெருவிழா 6 காலபூஜைகளுடன் சீரும் சிறப்புமாக வருகின்ற ஆவணி மாதம் 30 ஆம் நாள் 15/09/2016 அன்று காலை 7.31 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிறப்புகள்:
திருக்கொடி ஏற்றுதல்:
திருவிழாவின் முதல் நாள் (15/09/2016) ) காலை (9.00AM to 10.30AM) கொடி ஏற்றும் நிகழ்ச்சி நமது நாட்டாமை திரு. சிவக்குமார் செட்டியார் அவர்களின் இல்லத்தில் இருந்து யானை வரிசையுடன் , திருக்கொடி வீதி உலா வந்து புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருக்கொடி ஏற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெறும்.யானை மீது பவனி :
புவனகிரி வெள்ளாற்றுக்குச் நம் குல மக்கள் மிகவும் ஆனந்தமாக சென்று ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனை கலசத்தில் ஆவாஹனம் செய்து யானை மீது அமரவைத்து வீரகுமாரர்கள் பிராக்கு போட்டு அம்மனை கோவிலுக்கு அழைத்து வருவர்.
கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்..
6ம் திருநாள் அன்று மாலை 7 மணிக்கு மேல் பரிவேட்டை:
அம்மன் பரிவேட்டை நடத்த குதிரை வாகனத்தில் அமர்ந்து யானை முன்செல்ல கோவிலின் மேற்குப்புரத்தில் உள்ள சின்ன தேவாங்கர் தெருவில் 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.
மாலை 7.30 மணிக்கு மேல் கேரள மாநிலம் கோழிக்கோடு செண்டமேளம் குழிவினாரால் தீ சாமுண்டி நடன நிகழ்ச்சி நடைபெறும்.
9ம் நாள் ஜோதி தரிசனம் மாலை 7 மணிக்கு மேல் நடைபெறும்.
10 நாட்களும் காலையில் திருக்கோவிலின் உள்பிரகாரத்தில் திருவுலாவும், மாலையில் திருவீதிவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெறும்.
10 நாட்கள் கத்தி திருவிழா:
பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் கத்தி திருவிழா மிக சிறப்புடன் நடைபெறும்.




புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் சிறப்பு:
கர்நாடக மாநிலம் மைசூரில் சாமுண்டீஸ்வரி மலையில் கோவில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா புவனகிரியில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆறு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், கத்தி, சூலம், அக்னி மற்றும் மகிஷனின் தலையை ஏந்தியும், மகிஷாசுரனை காலால் மிதித்து, சிம்மவாகனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாந்த சொரூபமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.அழைப்பு :
இங்கனம்
புவனகிரி தேவாங்க ஸ்தலத்தார்,
நாட்டாண்மை s. சிவக்குமார் செட்டியார்,
புவனகிரி.
விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள :
திரு. ராகுல் (எ) B.புவனேந்திரன்,புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்,
புவனகிரி,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 99529 11735
குறிப்பு : இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் திருக்கோவில் கமிட்டியாளர்களின் அனுமதி பெறப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக, உற்சவ பெருவிழா அழைப்பிதல்


தேவாங்க குல தவகல்கள் |